1972 இல் செய்த தவறை 2019 இல் திருத்தி கொண்ட நாசா! அது என்னது?
இந்த ஆய்வு முடிவின் மூலம், பூமியின் பகல் நேரகங்களில் ஜியோகோரோனாவில் ஹைட்ரஜன் அணுக்கள் சூரிய ஒளியால் சுருக்கமாக அமுக்கப்படுவதாகவும்.
இஎஸ்ஏ/ நாசா சோலார்மற்றும் ஹலியோஸ்பெரிக் ஆப்ஸர்வேட்டரி, சோஹோ (SOHO) ஆகியவற்றின் ஆய்வுகளின் அடிப்படையில் உருவான ஒரு சமீபத்திய கண்டுபிடிப்பு ஆனது, நமது பூமி கிரகத்தை சுற்றி உள்ள வாயு அடுக்கு ஆனது சுமார் 630,000 கிமீ தொலைவில் உள்ளது என்று என்கிறது. அதாவது நமது கிரகத்த்தை விட 50 மடங்கு அதிக விட்டம் கொண்டு உள்ளது என்கிறது. சரி இருக்கட்டும்! இது ஏன் செய்தி தலைப்பாகி உள்ளது என்று நீங்கள் கேட்கலாம். காரணம் இருக்கிறது.

இந்த ஆய்வு முடிவுகளை வழங்கியா முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரும், ரஷ்யாவின் விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தை சேர்ந்தவரும் ஆன இகோர் பாலிக்கின் கூற்றுப்படி "சந்திரன் ஆனது பூமியின் வளிமண்டலத்திற்குள் தான் இருக்கிறது" - இப்போதாவது புரிகிறதா? புரியவில்லையா! சரி விளக்கமாக பேசுவோம்!

ஜியோகோரோனா என்றால் என்ன?
"இரு தசாப்தங்களுக்கு முன்னர் சோஹோ விண்கலத்தின் மூலம் நாங்கள் மேற்கொண்ட சில ஆராய்ச்சிகளைத் தூசி தட்டும் முன்பு வரை இந்த உண்மையை நாங்கள் அறிந்திருக்கவில்லை." என்கிறார் இகோர். நமது வளிமண்டலம் விண்வெளியுடன் சேரும் இடத்தில், ஜியோகோரோனா என்றழைக்கப்படும் ஹைட்ரஜன் அணுக்களால் ஆன ஒரு மேகம் உள்ளது.

இதை கண்டுபிடிக்க ஏன் இத்தனை ஆண்டுகள் ஆனது?
ஸ்பேஸ்கிராப்ட் உபகரணங்களில் ஒன்றான ஸ்வான் (SWAN) உதவியின் கீழ் தான் தற்போது நிஜமான மற்றும் துல்லியமான ஹைட்ரஜனின் மேகத்தின் (ஜியோகோரோனா ) இருப்பு கண்டு அறியப்பட்டுள்ளது. ஸ்வான் உபகரணம் ஆனது அதன் உணர்திறன் உணரிகளைப் பயன்படுத்தி புவியின் புறநகர்ப் பகுதிகளில் எவ்வளவு தூரம் நீண்டுள்ளது என்பதை துல்லியமாக கண்டறியும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அவதானிப்புகள் ஆனது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும். அதாவது பூமி மற்றும் அதன் ஜியோகோரோனாவும், ஸ்வானின் பார்வையின் ஒற்றை புள்ளியில் ஒரு நேரத்தில் சந்திக்கும் போது மட்டும்தான் இந்த அவதானிப்புகளை நிகழ்த்த முடியும்.

சரி இது எப்படி கண்டுபிடிக்கப்படும்?
விண்வெளியின் வெளிப்புறங்களில் காணப்படும் ஹைட்ரஜனின் மேற்பரப்பில் பெரும்பாலும் நீர் நீராவிகள் நெருக்கமாக காணப்படுகிறது. அதை கொண்டு தான் பூமி, செவ்வாய் மற்றும் வீனஸ் போன்ற கிரகங்களின் ஜியோகோரோனா இருப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.

இதுபோன்ற தவறான அனுமானம் நிகழ்ந்தது எப்படி? நிகழ்த்தியது யார்?
"நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் நீர்த்தேக்கங்களைக் கொண்டிருக்கும் கிரகங்களைக் காணும் போது நமது பூமியின் நீர்தேக்கங்கள் சிறப்பாக உள்ளது" என்று ஸ்வானின் முன்னாள் முதன்மை ஆராய்ச்சியாளர் ஜீன் கூறி உள்ளார். 1972 இல் அப்பல்லோ 16 விண்வெளி வீரர்களால் நிறுவப்பட்ட நிலவின் முதல் தொலைநோக்கி ஆனது, பூமியை சுற்றியுள்ள ஜியோகோரோனாவின் பிரகாசமாகவும், புற ஊதா ஒளியில் மின்னியதாகவும், அந்த நேரத்தில், சந்திரன் மேற்பரப்பில் உள்ள விண்வெளி வீரர்கள் ஜியோலோரோனாவின் புறநகர்ப்பகுதியின் உண்மையான பகுதியை அறிய முடியவில்லை என்றும் ஜீன் கூறுகிறார்.

ஆய்வின் மூலம் அறியவந்த மற்றொரு விடயம்!
இந்த ஆய்வு முடிவின் மூலம், பூமியின் பகல் நேரகங்களில் ஜியோகோரோனாவில் ஹைட்ரஜன் அணுக்கள் சூரிய ஒளியால் சுருக்கமாக அமுக்கப்படுவதாகவும், இரவு நேரங்களில் அதிக அடர்த்தியான மண்டலத்தை உற்பத்தி செய்வதாகவும் கண்டு அறியப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்பில் முக்கிய பங்கு ஆற்றிய சோஹோவை பற்றி?
ஸ்பேஸ் ஆப்ஸர்வேட்டரி ஆன சோஹோ, டிசம்பர் 1995 ஆம் ஆண்டில் விண்வெளிக்குள் செலுத்தப்பட்டது. இது சூரியனின் ஆழமான கோளத்தில் இருந்து வெளிப்புற கோனோனா மற்றும் சூரியக் காற்று போன்ற விடயங்களை இரண்டு தசாப்தங்களாக ஆய்வு செய்து வருகிறது. இந்த செயற்கைக்கோள் ஆனது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் இருந்துகொண்டு சூரியனை ஆய்வு செய்து வருகிறது. இந்த தூரம், வெளி புறங்களில் இருந்து ஜியோகொரோனாவைக் கண்காணிக்கும் ஒரு நல்ல மேடை புள்ளி ஆகும்.

பூமியின் வளிமண்டலத்தின் மீதான புதிய ஒளி!
ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஜீன் மற்றும் இகோரின் ஆராய்ச்சிக் குழுவானது இந்த விவரங்களை காப்பகத்திலிருந்து சேகரித்தகு மேலும் சில பகுப்பாய்வுகளுக்கு உட்படுத்த முடிவு செய்து உள்ளது. சோஹோவின் வழியாக கிடைக்க பெற்றுள்ள இந்த புதிய மற்றும் தனித்துவமான பார்வை ஆனது பூமியின் வளிமண்டலத்தின் மீதான புதிய ஒளியை பாய்ச்சி உள்ளது என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்!


Click it and Unblock the Notifications