புதிய இயற்கை லெதர் கண்டுபிடிப்பு! இதனால் 1 மில்லியன் விலங்குகள் கொல்லப்படுவது தடுக்கப்படும்!

|

நீங்கள் விரும்பினாலும் விரூபாவிட்டாலும் இதை, நீங்கள் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும், தோல் (Leather) பொருட்கள் நமது சுற்றுச்சூழலுக்கு உகந்ததும் அல்ல நல்லதும் அல்ல. உண்மையில், பீட்டாவின் கூற்றுப்படி, உலகளாவிய தோல் தொழில் நிறுவனங்கள் ஒரு பில்லியனுக்கும் அதிகமான விலங்குகளை அவற்றின் தோலுக்காகக் கொன்று மறைக்கிறது என்று கூறியுள்ளது. இதற்கான மாற்றுப் பொருளை இருவர் கண்டுபிடித்துள்ளனர்.

இரண்டு நண்பர்கள் கண்டுபிடித்த இயற்கை லெதர்

இரண்டு நண்பர்கள் கண்டுபிடித்த இயற்கை லெதர்

அட்ரியன் லோபஸ் வெலார்டே மற்றும் மார்ட்டே செசரெஸ் என்று இரண்டு நண்பர்கள், லெதர் பொருட்களுக்கு மாற்றான இயற்கை லெதர் பொருளைப் பாலைவனத்தில் வளரும் கற்றாழையிலிருந்து உருவாக்கியுள்ளனர். கற்றாழையிலிருந்து லெதர் செய்ய முடியுமா என்ற உங்கள் கேள்விக்கு, முடியும் என்று இந்த நண்பர்கள் பதில் அளித்துள்ளனர். எப்படி இது சாத்தியம் என்று தெரிந்துகொள்ளலாம்.

மக்கும் தன்மை இல்லாத தோல் லெதர்காளால் ஆபத்து

மக்கும் தன்மை இல்லாத தோல் லெதர்காளால் ஆபத்து

இது ஒரு புறம் இருக்க, கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் தோல் பொருட்கள் சுற்றுச்சூழுக்கு ஏற்படுத்தும் தாக்கம் தெரியாமலையே அனைவரும் அதைப் பயன்படுத்தி வருகின்றனர். விலங்கின் தோலைப் பெற்ற பிறகு, அதைப் பல டன் ரசாயனங்களுடன் சேர்த்து அதைப் பதப்படுத்திய பின்னரே பொருட்களாக மாற்றப்படுகிறது. இந்த ராசயனங்கள் சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், தோல் பொருளை மக்கும் தன்மை இல்லாததாக ஆக்குகிறது.

இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?இனி போன்லாம் பண்ணாதிங்க whatsapp-லயே கேஸ் சிலிண்டர் புக் பண்ணலாம்: இதோ நம்பர் மற்றும் முறை?

 'டெசர்டோ' கற்றாழை இலைகள்

'டெசர்டோ' கற்றாழை இலைகள்

பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் ஃபாஸ் லெதரும் கூட உண்மையில் இந்த கழிவுப் பிரச்சினையைத் தீர்க்காது. இருப்பினும், இந்த இரண்டு நண்பர்கள் சரியான தீர்வை கண்டுபிடித்துள்ளனர். அட்ரியானோ டி மார்டி என்று அழைக்கப்படும் நிறுவனத்தின் உரிமையாளர்களான இவர்கள் 'டெசர்டோ' எனப்படும் கற்றாழை இலைகளைப் பயன்படுத்தி புதிய லெதர் பொருளை உருவாக்கியுள்ளனர்.

இதனால் தான் இது சாத்தியம்

இதனால் தான் இது சாத்தியம்

புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயற்கை ரசாயனங்களைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலுக்கு ஏற்ற லெதர் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர். கரடுமுரடான தன்மைக்குப் பெயர் பெற்ற இந்த கற்றாழை வகை மிகவும் கடினமானது மற்றும் அடர்த்தியானது இதனால் தான் இது சாத்தியம் ஆனது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தண்ணீர் செலவு மிகவும் குறைவு

தண்ணீர் செலவு மிகவும் குறைவு

இது கற்றாழையிலிருந்து தயாரிக்கப்படுவதால், பாலைவனத்தில் குறைந்தபட்ச ஈரப்பதத்துடன் வளரக்கூடிய தாவர வகை என்பதனால் அதிக தண்ணீர் செலவும் தேவையில்லை. இயற்கைக்கும் இந்த லெதர்களால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று இரண்டு நண்பர்களும் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!Jio-வுக்கு போட்டியாக BSNL கொடுத்த 436 நாள் வேலிடிட்டி டிரீட்! குஷியில் வாடிக்கையாளர்கள்!

தோல் பை, செருப்பு மற்றும் ஆடைகள்

தோல் பை, செருப்பு மற்றும் ஆடைகள்

இவர்கள் கண்டுபிடித்துள்ள இயற்கை தோல் பொருளைக் கொண்டு கார் இருக்கைகள், பைகள், காலணிகள் மற்றும் ஆடைகளைத் தயாரித்துள்ளனர். இயற்கை நிற ரசாயனங்களைப் பயன்படுத்தி இவற்றிற்குப் பல வண்ணங்களையும் சேர்த்துள்ளனர். இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டாலும் இது முழுமையாக மக்கும் தன்மை கொண்டதாக இல்லை. பாதிக்குப் பாதி என்ற விகிதத்தில் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Natural Leather Discovered From Cactus And This Will Prevent Killing Millions OF Animals : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X