Home
Scitech

2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

இந்த செயல்திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரரான நார்த்ராப் குரும்மன் செய்த, டெலஸ்கோப்பில் உட்புறம் உள்ள பாகங்களுக்கு தவறான வகை பசையை பயன்படுத்தியது உள்பட பல தவறுகளின் பட்டியலை நாசா வெளிப்படுத்தியுள்ளது.

By Vivek Sivanandam

ஒரு பில்லியன் டாலர் என்பது அதீத பட்ஜெட்டில், 18 மாத தாமதத்திற்கு பிறகு 2021ல் செலுத்த தயாராகிகொண்டிருக்கிறது நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப். நாசாவால் அமைக்கப்பட்ட சுதந்திர மறுஆய்வு ஆணையம்(Independent Review Board ), இந்த செயல்திட்டத்தின் போக்கை மதிப்பீடு செய்து, திட்டம் தொடர வேண்டும் என்று ஒருமனதாக பரிந்துரைத்து, அதன் புதிய செலுத்தும் தேதியை 30 மார்ச் 2021யாக நிர்ணயிக்க நாசாவை கேட்டுக்கொண்டுள்ளது.

2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

இந்த செயல்திட்டத்தின் முதன்மை ஒப்பந்ததாரரான நார்த்ராப் குரும்மன் செய்த, டெலஸ்கோப்பில் உட்புறம் உள்ள பாகங்களுக்கு தவறான வகை பசையை பயன்படுத்தியது உள்பட பல தவறுகளின் பட்டியலை நாசா வெளிப்படுத்தியுள்ளது.
நாசா கூறுகையில், கடந்த மாதம் முதன்மை ஒப்பந்ததாரரான நார்த்ராப் குரும்மன் செய்த அதிர்வு சோதனையின் போது, டெலஸ்கோப்பின் இணைப்புகள் பிரித்துவிட்டதாக கூறியுள்ளது.


அதில் இரண்டு இணைப்புகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் டாலர் செலவாவதாகவும் உறுதியப்படுத்திய நாசா, தொலைந்த பகுதிகள் 'வெகு விரைவில்' கண்டுபிடிக்கப்படும் என கூறியுள்ளது.
இந்த பெரிய டெலஸ்கோப்பிற்கு ஏற்கனவே 7பில்லியன் டாலர் செலவான நிலையில், இது ஆர்பிட்டிங் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப்பின் முன்னோடியாக பார்க்கப்படுகிறது.

2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

இவ்வருடம் பறந்திருக்கு வேண்டிய இந்த ஆய்வுமையம், நாசாவால் செலுத்தும் தேதி முதலில் 2019 என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் 2020 என தற்போது 2021 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பல்வேறு தொழில்நுட்ப பிரச்சனைகளாலும், நிதி நெருக்கடிகளாலும் பாதிக்கப்பட்டது.

வெப் தனது அதீத அறிவியல் செயல்திறன் மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தொடர்ந்து, அமெரிக்காவை வானியல் ஆராய்ச்சி மற்றும் வான் இயற்பியலில் முதன்மையாக இருக்கச் செய்ய வேண்டும் என்கிறார் மறுஆய்வு ஆணையத்தின் தலைவர் டாம் யங். வெப்பை விண்வெளியில் செலுத்தும் முன்பு அதன் ஒவ்வொரு பாகமும் சரியாக செயல்படுகிறதா என உறுதிசெய்வது அதன் வெற்றிக்கு மிகவும் முக்கியமானது.

2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

இந்த டெலஸ்கோப்பின் புதிய மொத்த மதிப்பு, திருத்தியமைக்கப்பட்ட செலுத்தும் தேதி வரைக்கும் ஆகும் செலவுகளையும் சேர்த்து, 9.66பில்லியன் டாலர் என கணக்கிடப்பட்டுள்ளது. இதை உருவாக்குவதற்தான திருத்தியமைக்கப்பட்ட மதிப்பு மட்டுமே 8.8பில்லியன் டாலர். நாசாவின் நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டெய்ன் கூறுகையில், இது நாசாவின் ஹப்பிள் ஸ்பேஸ் டெலஸ்கோப் என்பதை தாண்டி, இந்த வெப் அடுத்த தலைமுறை ஆராய்ச்சிக்கானது.
2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

இது ஆச்சர்யமளிக்கும் பல்வேறு செயல்களை செய்யக்கூடியது. முன்பு எப்போதும் செய்யமுடியாத செயல்களை செய்யும். ஏனெனில் நாம் மற்ற பால்வெளி அண்டங்களில் நுழைந்து இந்த டெலஸ்கோப்பை வைத்து ஆராய முடியும்.
2021ல் பறக்க தயாராகும் நாசாவின் சூப்பர் ஹப்புள் டெலஸ்கோப்.!

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப் என்ன செய்யும்?
'டைம் மிஷின்' என்று கூறப்படும் இந்த ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப், விண்வெளியின் வெளிவராதா இரகசியங்களை கண்டுபிடிக்க அனுப்பப்படுகிறது. 13.5பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் முதலில் உருவான பால்வெளி அண்டங்களை ஆராய்வதற்காகவும், நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் நிலவு மற்றும் சூர்ய குடும்பத்தில் உள்ள கோள்களைப் பற்றி தெரிந்துகொள்ளவும் இந்த டெலஸ்கோப் பயன்படுத்தப்படவிருக்கிறது.

Best Mobiles in India

English summary
NASA’s Webb telescope delayed to 2021 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X