நிலவை வெற்றிரமாக படமெடுத்து அனுப்பிய நாசா-வின் டெஸ்.!

கேமராவை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, டெஸ்ஸின் நான்கு கேமராவில் ஒன்றை பயன்படுத்தி 2 நிமிட பரிசோதனையைஅறிவியல் குழு செய்துள்ளது.

|

ஆயிரக்கணக்கான புதிய கோள்களை கண்டறியும் திட்டத்துடன் அனுப்பப்பட்ட நாசாவின் அடுத்த பிளானெட் ஹண்டரான டெஸ் (TESS- Transiting Exoplanet Survey Satelite) செயற்கைக்கோள் வெற்றிகரமாக லூனார் கட்டத்தை முடித்து, புதிய உலகங்களை தேடும் முயற்சியில் இன்னொரு அடியை எடுத்துவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது நாசா.

கடந்த வியாக்கிழமை இந்த விண்கலம் நிலவிலிருந்து 8000 கிலோமீட்டர் பயணித்துவிட்டதாகவும், இது வழங்கும் ஈர்ப்புவிசையின் உதவியுடன் டெஸ் தான் பணிபுரிய இருக்கும் கடைசி ஆர்பிட்டை நோக்கி செல்வதாகவும் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது நாசா.

கேமரா

கேமரா

கேமராவை செயல்படுத்துவதன் ஒரு பகுதியாக, டெஸ்ஸின் நான்கு கேமராவில் ஒன்றை பயன்படுத்தி 2 நிமிட பரிசோதனையைஅறிவியல் குழு செய்துள்ளது. தெற்கு நட்சத்திர மண்டலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் 2,00,000 க்கும் அதிகமான நட்சத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

ஜிம் பிரிடென்ஸ்டைன்

ஜிம் பிரிடென்ஸ்டைன்

"எங்களது புதிய கோள்களை வேட்டையாடும் செயற்கைகோளான (planet hunter satelite) டெஸ்-ல் உள்ள நான்கு கேமராக்களில் ஒன்றில் எடுக்கப்பட்ட முதல் புகைப்படத்தை பகிர ஆர்வமாக உள்ளேன். அந்த அதிசய புகைப்படத்தில் உங்களால் 2,00,000ற்கும் மேற்பட்ட நட்சத்திரங்களை பார்க்க முடியும்" என்று டீவிட் செய்துள்ளார் நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன்.

கனவேரல் ஏர்போர்ஸ்

கனவேரல் ஏர்போர்ஸ்

ப்ளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் ஏர்போர்ஸ் ஸ்டேசனிலிருந்து ஏப்ரல்2018ல் ஏவப்பட்ட டெஸ் செயற்கைகோள், நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே கோள்களை தேடும் நாசா எடுத்துவைக்கும் அடுத்த அடி.

டெஸ் செயற்கைகோள்

டெஸ் செயற்கைகோள்

டெஸ் செயற்கைகோள் தனது இரண்டு ஆண்டு கால முதற்கட்ட ஆய்வில், தனது நான்கு கேமராக்களையும் பயன்படுத்தி தற்போது எடுக்கப்பட்ட பரிசோதனை புகைப்படத்தை காட்டிலும் 400மடங்கு பரப்பை படம்பிடிக்கவுள்ளது. "பர்ஸ்ட் லைட்" புகைப்படம் என்றழைக்கப்படும் இந்த அறிவியல் தர புகைப்படம் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என்கிறது நாசா.

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
நாசா

நாசா

இந்த விண்கலம் பூமியின் சயின்ஸ் ஆர்பிட்டில் நுழைவதற்காக மே30ம் தேதி தனது கடைசி கட்ட உந்துகலனை இயக்கவுள்ளது. டெஸ் செயற்கைகோள் ஜூன் மாத மத்தியில் சயின்ஸ் ஆர்பிட்டை அடைந்து தனது அறிவியல் செயல்பாடுகளையும், கேமரா செயல்பாடுகளையும் தொடங்கவுள்ளதாக நாசா கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA's TESS Swings by Moon, Clicks First Image ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X