50 சதவீதம் பெரிய தரவுகளை அனுப்பியது பார்க்கர் சோலார் ப்ரோப்.!
நாசா, 2018 ஆம் ஆண்டில் சூரியனை ஆராய்வதற்காக 'பார்க்கர் சோலார் ப்ரோப்(Parker Solar Probe)' விண்கலத்தை விண்ணில் ஏவியது. நாசாவின், பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலத்திற்குப் பிறகு சூரியனை ஆராய இந்தியாவின்
ஆதித்யா எல்-1(Aditya L-1) விண்கலம் விண்ணில் ஏவப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

தொடரந்து ஆய்வுகளை மேற்க்கொண்டுவருகிறது
இந்நிலையில் நாசாவின் சூரிய பயணம் செய்யும் பார்க்கர் விண்கலம் தீப்பிடித்து வருகிறது என்று தகவல் வெளிவந்துள்ளது,குறிப்பாக தரவுகளை சேகரிக்கும் போது தீப்படித்து ஏரிந்து வருவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இருந்தபோதிலும் தொடரந்து ஆய்வுகளை மேற்க்கொண்டுவருகிறது பார்க்கர் சோலார் ப்ரோப் விண்கலம்.

ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல்
பார்க்கர் சோலார் ப்ரோப்' என்னும் அந்த விண்கலம் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்திலுள்ள கேப் கேனவரல் ராக்கெட் ஏவுத்தளத்திருந்து செலுத்தப்பட்டது, குறிப்பாக சூரியனின் வளிமண்டல மேலடுக்கான கொரோனாவை ஆய்வு செய்வதற்காக இது விண்ணில் செலுத்தப்பட்டது.

50 சதவீதம் தரவுகளை அனுப்பியது
ஏஜென்சியின் கூற்றுப்படி சூரியனை ஆய்வு செய்யும் பணியில் அனுப்பப்பட்ட பார்க்கர் சோலார் ப்ரோப்,விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விட 50 சதவீதம் பெரிய தரவுகளை அனுப்பியது.

அறிவியல் தகவல்கள்
முதல் மற்றும் இரண்டாவது சந்திப்புகளின் மூலம் சேகரிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படும் அறிவியல் தகவல்கள் அனைத்தும் இப்போது தரையில் உள்ளன 'என்று ஏபிஎல் நிறுவனத்தின் பார்க்கர் சோலார் ப்ரோப் மிஷன் ஆபரேஷன்ஸ் மேனேஜர் நிக்கலாஸ் பிங்கைன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிருகத்தனமான சில நிலைகளைத் தாங்கிக்கொண்டது
இதுவரை பார்க்கர் சோலார் ப்ரோப் அனுப்பிய தரவு என்பது நமது சூரியனைப் பற்றிய முன்னோடியில்லாத நுண்ணறிவுகளாகும், இதில் துகள்கள், அலைகள் மற்றும் சூரியனின் கொரோனா மற்றும் சூரிய சூழலின் அவதானிப்புகள் பற்றிய தகவல்கள் அடங்கும்.
மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் விட சூரியனுடன் நெருக்கமாகப் பயணித்தது, கற்பனைக்கு எட்டக்கூடிய மிக மிருகத்தனமான சில நிலைகளைத் தாங்கிக்கொண்டது பார்க்கர் சோலார் ப்ரோப். மேலும் பூமியில் கதிர்வீச்சை விட 500 மடங்கு சக்திவாய்ந்த காஸ்மிக் கதிர்வீச்சு மற்றும் 1,300 ° C (2,400 ° F) வெப்பநிலை ஆகியவை அவற்றில் அடங்கும்.

வேகமாக பயணித்தது
சூரியனின் அபரிமிதமான ஈர்ப்பு விசை காரணமாக, பார்க்கர் சோலார் ப்ரோப் வேகமாக பயணித்தது, 213,200 மைல் (343,000 கிமீ)நட்சத்திரத்தை சுற்றி வருகிறது - உதரணமாக நியூயார்க்குக்கும் லண்டனுக்கும் இடையில் ஒரு மணி நேரத்தில் 39 முறை பறக்க போதுமானது.

தரவுகள் அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும்
இதுவரை எந்த விண்கலமும் நெருங்க முடியாத கொரோனா என்னும் சூரியனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் 2024ஆம் ஆண்டு சென்றடைந்து, பூமியை தாக்கும் சூரியப் புயல் (Solar Wind) எப்படி உருவாகிறது
என்பதை கண்டறிவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. மேலும் ஏற்கனவே 'பார்க்கர் சோலார் ப்ரோப் மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகள் அனைத்தும் விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று நாசா தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








