விண்வெளியில் வெடித்த கழிவறை; 135 கோடிக்கு ஊ... ஊ! நாசா கதறல்!

|

என்ன கழிவறைக்கு 135 கோடியா? என்று ஆச்சரியப்படுவதற்கு முன்னர், விண்வெளியில் உருவாக்கம் பெறும் மனித கழிவுகள் என்னவாகின்றன? என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? அதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். பின் அந்த 135 கோடி மேட்டருக்கு செல்வோம்!

விண்வெளியில் வெடித்த கழிவறை; 135 கோடிக்கு ஊ... ஊ! நாசா கதறல்!

கடந்த 2015 ஆம் ஆண்டு, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவின் விண்வெளி வீரர் ஆன ஸ்காட் கெல்லி, சர்வதேச விண்வெளி நிலையத்தில் "முதன்முதலாக" ஒரு முழுமையான ஆண்டை கழிக்கும் ஸ்பேஸ் மிஷனிற்காக விண்வெளிக்குள் சென்றார். அது இயற்கையாக சில கேள்விகளுக்கு வழிவகுக்கிறது... அதாவது இயற்கையின் அழைப்புகளை (நம்பர் ஒன் மற்றும் நம்பர் டூ) பற்றி!

மனித உடலில் ஏற்படும் விளைவு

மனித உடலில் ஏற்படும் விளைவு

விண்வெளியில் வாழும் மனிதர்களின் உடல்நலம் பற்றிய ஏகப்பட்ட சர்ச்சைக்குள் ஏற்கனவே மூழ்கி திளைக்கும் நாசா உஷாராக, ஒரு ஆண்டுக்கு மேல் விண்வெளியில் வாழும் மனித உடலில் ஏற்படும் விளைவு மற்றும் மனித கழிவுப்பொருளைப் பற்றி சில முக்கிய தரவு புள்ளிவிவரங்களை வெளியிட்டது.

 பூமியின் வளிமண்டலத்தில் எரிக்கப்படும்

பூமியின் வளிமண்டலத்தில் எரிக்கப்படும்

அந்த விவரங்களின் படி, கெல்லி விண்வெளியில் கழிக்கப்போகும் ஒரு வருடத்திற்கு மொத்தம் 180 பவுண்டுகள் (அதாவது 82 கிலோகிராம்) மனித கழிவை தயாரிப்பார் என்றும், அந்த கழிவுகள் ஆனது, குறிப்பிட்ட இடைவெளிகளில் வெளியேற்றப்பட்டு, பூமியின் வளிமண்டலத்தில் எரிக்கப்படும். இந்த நிகழ்வானது ஒரு ஏரி நட்சத்திரம் வீழுவது போன்று காட்சி அளிக்கும் என்றும் நாசா விளக்கம் அளித்து இருந்தது. இதுதான் விண்வெளியில் தயாரிக்கப்படும் மனித கழிவுகள் என்னவாகும்? எங்கு போகின்றன? எனும் மாபெரும் சந்தேகத்தை தீர்த்து வைத்த முதல் பதிலாகும்.

கெல்லி

கெல்லி

கெல்லி உடன் ரஷ்ய விண்வெளி வீரரான மிக்கெயில் கொர்னியென்கோவும் விண்வெளியில் ஒரு வருடம் செலவழித்தனர், அங்கு அவர்களுக்கு, விண்வெளியில் மனித உடலில் ஏற்படும் விளைவுகளை ஆராய நூற்றுக்கணக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும், சரி இப்போது மனித கழிவு விடயத்தில் நாசா தலைப்பு செய்தி ஆனது ஏன்? எப்படி? எதனால்? என்பதை பற்றி பார்ப்போம்.

கழிப்பறை வெடிப்பு என்பது சமாளிக்க மிகவும் அருவருப்பான விடயம்

கழிப்பறை வெடிப்பு என்பது சமாளிக்க மிகவும் அருவருப்பான விடயம்

ஒரு கழிப்பறை வெடிப்பு என்பது சமாளிக்க மிகவும் அருவருப்பான விடயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது பூமியில் நடக்கும் பட்சத்தில் , நீங்கள் ஒரு பிளம்பரை அழைக்க முடியும், ஆனால் அதுவே சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடக்கும்போது? நீங்கள் தான் அதை சுத்தம் செய்ய வேண்டும்.

குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது

அப்படியான ஒரு சம்பவம் நடந்து உள்ளதை, ஐஎஸ்எஸ் (சர்வதேச விண்வெளி நிலையம்) மற்றும் நாசாவின் ஆன்லைன் அறிக்கை வெளிப்படுத்தி உள்ளது. அந்த அறிக்கை ஆனது, "சுமார் 1,35,65,05,000 ரூபாய் மதிப்புள்ள கியோடட் கசிந்து, குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த வெடிப்பின் விளைவாக கசிந்த இரண்டு கலன் தண்ணீரை வெளியேற்றுவதற்காக விண்வெளி வீரர்கள் துண்டுகளை பயன்படுத்தினார்கள் என்பது தான் உச்சகட்ட கொடுமை!"கசிந்த க்யூடியை மீண்டும் இணைக்க, விண்வெளி வீரர்கள் மிகவும் விரைவாக பணியாற்றினார். மேலும் ஒரு மாற்று க்யூடி ஆனதும் நிறுவப்பட்டது" என்கிறது வெளியான நாசாவின் அறிக்கை.

நேர்த்தியான மற்றும் அழகான பார்வையை கொண்டு இருக்காது

நேர்த்தியான மற்றும் அழகான பார்வையை கொண்டு இருக்காது

மேலும் இந்த அறிக்கையின் கீழ்,, ஐஎஸ்எஸ் இந்த கழிப்பறை பயன்பாடு ஆனது பூமியில் இருப்பது போன்ற மிகவும் "நேர்த்தியான மற்றும் அழகான பார்வையை கொண்டு இருக்காது என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. ஏனெனில், ஐ எஸ் எஸ் கழிப்பறை ஆனது 'ஒரு வட்டமான சில்வர் கேன் மீதுள்ள ஒரு சிறிய தகடு அளவிலான துளை மீது உட்கார்ந்து தான் இயற்கை கடன்களை முடித்துக்கொள்ள வேண்டுமாம், சிறுநீர் என்று வரும் போது ஒரு மஞ்சள் கூம்புக்குள் நுழைக்க வேண்டுமாம்.

மனித கழிவுகள் பூமி மீது வீசியெறியப்பட்டால்?

நல்லவேளை, ஒரு நகரம் மற்றொரு நகரத்தை குப்பை கிடங்காக பயன்படுத்துவது போன்று, ஒரு சரக்கு விண்வெளி கப்பலில் மூலம் மனித கழிவுகள் பூமி மீது வீசியெறியப்பட்டால், சூழ்நிலையை எப்படி இருந்திருக்கும்? -உவாக்!

வியாழன் கிரகத்தில் காத்திருக்கும் விபரீதங்கள்.! மனிதர்கள் போனால் என்னவாகும்?

வியாழன் கிரகத்தில் காத்திருக்கும் விபரீதங்கள்.! மனிதர்கள் போனால் என்னவாகும்?

ஒரு புதிய உலகத்தை ஆராய்வதற்கான சிறந்த வழி - அந்த நிலத்தில் தரை இறங்குவது தான். அதனால் தான் மனிதர்கள் நிலவு, வீனஸ், செவ்வாய், சனி, டைட்டன், மற்றும் இன்னும் பல கிரங்களுக்கு விண்கலங்களை அனுப்பியுள்ளனர். அதற்காக ஒட்டு மொத்த சூரிய மண்டலத்தின் "புரிதல்" நம்மிடம் உள்ளது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இன்னமும் சில "விசித்திரமான" மற்றும் "ஆச்சரியமான" இடங்கள் நம் சூரிய மண்டலத்தில் இருக்கின்றன தான் - அதில் ஒன்று தான் ஜூப்பிடர் எனும் வியாழன் கிரகம்.

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம்

வியாழன் கிரகமானது பெரும்பாலும் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்களால் உருவாகி உள்ளது. எனவே, அதன் நிலத்தில் தரை இறங்குவது என்பது பூமியில் உள்ள ஒரு மேகத்தின் மேல் தரை இறங்குவதற்கு சமம். ஆம், வியாழன் கிரகத்தின் மேல் நாம் கால் பதிக்க அல்லது வீழ்ந்து பார்க்க, அதன் மேல் எந்தவிதமான மேல் ஓடும் கிடையாது. அது வெறும் வளிமண்டலத்தின் நீடித்த நீட்சி மட்டுமே ஆகும்

மனிதர்கள் குதித்தால் என்னவாகும்?

மனிதர்கள் குதித்தால் என்னவாகும்?

இந்த இடத்தில் தான் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழுகிறது. வியாழன் என்பது வளிமண்டலத்தின் நீடித்த நீட்சி தான் என்றால் அதனுள் குதித்து மறுபக்கத்தின் வழியாக வெளியேற முடியுமா? பாதி தூரமாவது செல்ல முடியுமா? இந்த கேள்விக்கான பதிலை ஆராய்வோம் வாருங்கள். வியாழன் கிரகத்தில், மனிதர்கள் குதித்தால் என்னவாகும்?

எந்த விண்கலம் தாக்கு பிடிக்கும்?

எந்த விண்கலம் தாக்கு பிடிக்கும்?

முதலில் வியாழன் கிரகத்தில் தரை இறங்க எந்த விண்கலம் உதவும் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். வெளிப்படையாக பேச வேண்டும் என்றால், நாசாவின் ஓரியான் விண்கலத்தை விட அதன் லூனார் லேண்டர் ஒப்பீட்டளவில் மென்மையானது. வியாழன் உட்பட குறிப்பிட்ட வளிமண்டலத்தைக் கொண்டிருக்கும் எந்தவொரு கிரகத்தின் நிலப்பரப்பின் மீது தரை இறங்க நாசாவின் லூனார் லேண்டர் இதுவரை பயன்படுத்தப்பட்டதில்லை. இருப்பினும், எந்தவொரு விண்கலமும் வியாழன் கிரகட்டிகிள் நீண்ட காலத்திற்கு உயிர்வாழ முடியாது என்பதால் லுனார் லேண்டர் தான் ஓரளவிற்ரு நல்ல தேர்வு.

சரி தரை இறங்க தயாராகி விட்டோம்:

சரி தரை இறங்க தயாராகி விட்டோம்:

என்னென்னெ ஆபத்துகள் காத்திருக்கின்றன? முதல் ஆபத்து - வியாழனின் வளிமண்டலத்தில் எந்த ஆக்சிஜனும் இல்லை. எனவே தேவையான அளவு ஆக்சிஜனை கொண்டு செல்ல வேண்டும். அடுத்த பிரச்சனை உறிஞ்சும் வெப்பநிலை. எனவே ஒரு காற்றுச்சீரமைப்பானை (ஏசியை) கொண்டு செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

பயணத்தில் சந்திக்கும் சிக்கல்கள்!

பயணத்தில் சந்திக்கும் சிக்கல்கள்!

வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தின் மேல் நுழையும்போது, ​​நீங்கள் வியாழனின் ஈர்ப்பு விசைகளின் நீளத்தின் கீழ் மணிக்கு 110,000 மீட்டர் வேகத்தில் பயணம் செய்கிறீர்கள். தயார் ஆகி கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் வேகமாக வியாழன் கிரகத்தின் அடர்த்தியான வளிமண்டலத்தை அடைவீர்கள். அது சுவற்றில் மோதியது போல் இருக்கும். ஆனாலும் கவலை வேண்டாம், அது உங்கள் பயணத்தை தடுக்க போதுமான சக்தியை கொண்டிருக்காது.

அடுத்த நொடியே!

அடுத்த நொடியே!

சுமார் 3 நிமிடங்கள் கழித்து, நீங்கள் 155 மைல்கள் உயரமான மேகத்தின் உச்சியை அடைவீர்கள், அடுத்த நொடியே வியாழனின் கடுமையான சுழற்சியை அனுபவிப்பீர்கள். நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும். வியாழனில் ஒரு நாள் என்பது வெறும் 9.5 பூமி மணி நேரம் தான். சுமார் 3 நிமிடங்கள் கழித்து, நீங்கள் 155 மைல்கள் ஆழமான மேகத்தின் உச்சியை அடைவீர்கள், அடுத்த நொடியே வியாழனின் கடுமையான சுழற்சியை அனுபவிப்பீர்கள். நமது சூரிய மண்டலத்திலேயே மிகவும் வேகமாக சுழலும் கிரகம் வியாழன் ஆகும். வியாழனில் ஒரு நாள் என்பது வெறும் 9.5 பூமி மணி நேரம் தான். இன்னும் சற்று கீழ் இறங்க பூமியின் மேற்பரப்பில் உள்ள வெப்பத்தை விட கிட்டத்தட்ட 100 மடங்கு அதிகமாக வெப்பத்தை உணர்வீர்கள். அங்கு உங்களால் எதையும் பார்க்க முடியாது. இன்னும் கீழ் இறங்கினால், அதாவது 430 மைல்கள் கீழே இறங்க, அங்கு அழுத்தம் 1,150 மடங்கு அதிகமாக இருக்கும்.

சூரியனின் மேற்பரப்பைவிட சூடானதாக இருக்கும்!

சூரியனின் மேற்பரப்பைவிட சூடானதாக இருக்கும்!

2,500 மைல்கள் கீழே சென்றவுடன், வெப்பநிலை 6,100 º ஃபாரன்ஹீட் ஆகும். இது அண்டத்தில் மிக அதிக உருகுநிலை கொண்ட உலோகமான டங்க்ஸ்டனை உருகுவதற்கு போதுமான வெப்பமாகும். இந்த கட்டத்தை அடைய குறைந்தது 12 மணி நேர வீழ்ச்சியாவது தேவைப்படும், அது பாதி தூரம் கூட கிடையாது. 13,000 மைல்கள் கீழே, நீங்கள் வியாழனின் உள் அடுக்கை அடையலாம். அங்கே நிலவும் அழுத்தமானது பூமியின் மேற்பரப்பை விட 2 மில்லியன் மடங்கு வலுவானது. அந்த வெப்பநிலை சூரியனின் மேற்பரப்பைவிட சூடானதாக இருக்கும். இந்த சூழ்நிலைகள் மிகவும் தீவிரமானவை, அவை உங்களைச் சுற்றி உள்ள ஹைட்ரஜனின் வேதியியலை மாற்றியமைக்கின்றன.

சாத்தியமற்றதாக இருக்கும்!

சாத்தியமற்றதாக இருக்கும்!

ஹைட்ரஜன் மூலக்கூறுகள் மிக நெருக்கமாக ஒடுக்கப்பட்டிருக்கின்றன அதனால் அவற்றின் எலக்ட்ரான்கள் இழக்கப்படும், அங்கு உலோக ஹைட்ரஜன் என்று அழைக்கப்படும் அசாதாரணமான பொருள் உருவாக்கும். உலோக ஹைட்ரஜன் மிகவும் பிரதிபலிக்கும் என்பதால் அங்கு நீங்கள் விளக்குகளை பயன்படுத்தி அதைப் பார்க்க முயற்சித்தால், அது சாத்தியமற்றதாக இருக்கும். இந்த இடத்தில் தான் வியாழன் அதன் தள்ளு முள்ளு ஆட்டத்தை ஆரம்பிக்கும். ஈர்ப்பு உள்ளே இழுக்கும் மறுகையில் மிதக்கும் தன்மை உங்களை மேல்நோக்கி தள்ளும். இந்த இடத்தில் நீங்கள் மேலே நோக்கியும் செல்ல முடியாது கீழ்நோக்கியும் செல்ல முடியாது, தப்பிப்பதற்கு எந்த வழியும் இருக்காது - அவ்வளவு தான்!

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASAs Rs 135 Cr Toilet Explodes & Spills Poop Water In Space Station Crew On Cleaning Duty: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more