சாதனை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் NASA-லிருந்து ஓய்வு பெற்றார்.!

விண்வெளியில் அதிகமுறை நடந்த முதல் பெண்மணி என்னும் பெருமையும் இவரைச் சேரும். இவர் இதுவரை பத்துமுறை விண்வெளியில் உலாச் சென்றுள்ளார்.

|

665 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து பெரும் சாதனை நிகழ்த்திய அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் (Peggy Whitson) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவிலிருந்து ஓய்வு பெறுகிறார். 58 வயதான அமெரிக்க விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் நீண்டநாட்கள் வான்வெளியில் தங்கியிருந்த விண்வெளி வீரர் என்னும் பெருமைக்குச் சொந்தமானவர்.

சாதனை விண்வெளி வீராங்கனை பெக்கி விட்சன் NASA-லிருந்து ஓய்வு பெற்றார்.!

விண்வெளியில் அதிகமுறை நடந்த முதல் பெண்மணி என்னும் பெருமையும் இவரைச் சேரும். இவர் இதுவரை பத்துமுறை விண்வெளியில் உலாச் சென்றுள்ளார். மொத்தம் 60 மணி நேரம் மற்றும் 21 நிமிடங்கள் விண்வெளியில் நடைபயின்றுள்ளார். அமெரிக்க விண்வெளி வீரர்களில் மிக அதிக நேரம் விண்வெளியில் செலவிட்டவர்களில் முதலிடத்தில் இருப்பவர் பெக்கி விட்சன். உலக நாடுகளைச் சேர்ந்த பிற விண்வெளி வீரர்களோடு ஒப்பிடுகையில் இவர் எட்டாவது இடத்தில் உள்ளார்.

கனவு நிஜமானது

கனவு நிஜமானது

"நாசாவில் விண்வெளி வீரராகப் பணிபுரிய வேண்டும் என்னும் என்னுடைய கனவை நிஜமாக்கி, இப்பொழுது, விண்வெளி வீராங்கனையாக வாழ்ந்து கொண்டிருப்பதை நினைத்து அளவில்லாத பெருமிதம் அடைகிறேன்" என பெக்கி விட்சன் சந்தோசமடைகிறார்.

விண்வெளி வீரர் குழுவின் தலைவர்

விண்வெளி வீரர் குழுவின் தலைவர்

2009 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டுவரை அமெரிக்காவின் விண்வெளி வீரா் படைக் குழுவுக்குத் தலைவராகப் பொறுப்பேற்றிருந்தார் பெக்கி விட்சன். இத்தகைய பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணி என்கின்ற பெருமையையும், இத்தகைய பொறுப்புக்கு வரும் இராணுவத்தைச் சேர்ந்திராத முதல் நபர் என்கின்ற பெருமையையும் இணைந்து பெற்றார் இவர்.

சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்குப் பயணம்…

சர்வதேச விண்வெளி நிறுவனத்திற்குப் பயணம்…

நீண்ட காலச் செயல்திட்டங்களை நிறைவேற்றும் நோக்குடன் மூன்று முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் ( International Space Station - ISS) பயணம் மேற்கொண்டார். ஒவ்வொரு முறையும் தன்னுடைய தனித்திறனாலும் தன்னம்பிக்கையாலும் சாதனைகளை நிகழ்த்தினார்.

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதன் முதலாக 2002 ஆம் ஆண்டு பயணம் மேற்கொண்டார். அப்பொழுது 21 அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் நாசா அறிவியல் அலுவலராகத் திகழ்ந்தார்.

2008 ஆம் ஆண்டில் மீண்டும் ஒரு முறை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டார். சர்வதேச விண்வெளி நிலையத்தின் முதல் பெண் கமாண்டர் என்னும் பெருமையையும் அப்பொழுது பெற்றார்.

இரண்டு முறை கமாண்டர் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி

இரண்டு முறை கமாண்டர் பொறுப்பை ஏற்ற முதல் பெண்மணி

மூன்றாவது முறையாக 2016 ஆம் ஆண்டு விண்வெளி நிலையத்திற்குப் பயணம் மேற்கொண்டார். இம்முறை, 2016 நவம்பர் முதல் 2017 செப்டம்பர் வரை தங்கியிருந்தார். அப்பொழுது இரண்டாவது முறையாக விண்வெளி நிலையத்தின் கமாண்டர் பொறுப்பை ஏற்றார். இரண்டு முறை கமாண்டர் பொறுப்பை ஏற்ற பெண்மணி என்னும் பெருமைக்கு உரியவரானார்.

நீங்காத விண்வெளி நினைவுகள்

நீங்காத விண்வெளி நினைவுகள்

"என்னுடைய சாதனைப் பயணத்திற்குத் துணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. என்னுடைய வாழ்க்கையின் நினைவுப் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தால் நாசாவுக்காக நான் மேற்கொண்ட விண்வெளிப் பயணங்கள் மட்டும் எப்பொழுதும் தனித்தே நிற்கும்" என்கிறார் பெக்கி விட்சன்.

படிப்படியான முன்னேற்றம்

படிப்படியான முன்னேற்றம்

அமெரிக்காவின் மத்திய மேற்குப்பகுதி மாநிலமான லோவாவில் (Lowa) 1960 ஆம் ஆண்டு பிறந்தவர் பெக்கி விட்சன். 1989 ஆம் ஆண்டு, ஹீஸ்டனில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில், தேசிய ஆராய்ச்சிக் குழு இணை ஆய்வாளராகச் ( National Research Council Resident Research Associate) சேர்ந்தார். நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் நடைபெற்ற அறிவியல் ஆய்வுத் திட்டங்கள் பலவற்றில் ஆர்வமுடன் பங்கேற்றார். ஷட்டில் மிர் (Shuttle Mir Programme) செயல் திட்டத்தில் திட்ட விஞ்ஞானியாகவும், அமெரிக்க மற்றும் ரஷ்யத் திட்ட அறிவியல் செயற்குழுவில் (US - Russian Mission Science Working Group) இணைத் தலைவராகவும் பணியாற்றினார். இதன் பிறகு, 1996 ஆம் ஆண்டு அமெரிக்க விண்வெளி வீரர் படைக் குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புகழ்ந்து தள்ளும் நாசாவின் நிர்வாகி

புகழ்ந்து தள்ளும் நாசாவின் நிர்வாகி

" பெக்கி விட்சன், அமெரிக்க தேசிய உணர்வின் அடையாளம்" எனப் புகழாரம் சூட்டுகிறார், நாசாவின் நிர்வாகி ஜிம் பிரைடன்ஸ்டைன் (Jim Bridenstine).

"அவருடைய தீா்க்கமாக முடிவெடுக்கும் திறன், மன வலிமை, நற்பண்புகள், அறிவியல், ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் போன்றவற்றின் மீதான அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை நாசா மற்றும் அமெரிக்காவின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாசா பெக்கி விட்சனுக்கு பெரும் கடன்பட்டுள்ளது. நாசாவில் இருந்து பெக்கி விட்சன் ஓய்வு பெறுவது ஈடு செய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவுக்கும், நாசா விண்வெளி நிறுவனத்திற்கும் அவர் ஆற்றிய பங்களிப்புக்காக நன்றி கூறுகிறோம்" என்றும் ஜிம் பிரைடன்ஸ்டைன் உணர்ச்சிப் பெருக்குடன் பெக்கி விட்சனுக்கு விடை தருகிறார்.

Best Mobiles in India

English summary
NASA's Record-Breaking Astronaut Peggy Whitson Announces Retirement : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X