செவ்வாய் கிரகப் புழுதிப் புயலில் சிக்கிய ஆப்பர்சுனிட்டி ரோவரை இன்னும் தொடர்பு கொள்ள முடியவில்லை!

மிக மோசமான பாதிப்புக்கு இடையிலும் ஆப்பர்சுனிட்டி ரோவர் கடந்த ஜீன் 10 ஆம் தேதி நாசாவில் உள்ள பொறியியல் விஞ்ஞானிகளுக்கு தகவல்களை ஒலிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

|

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆப்பர்சுனிட்டி ரோவர் கடந்த 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரத்தில் உலவி ஆய்வுத் தகவல்களை அனுப்பி வந்தது. செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் புழுதிப் புயலில் சிக்கிய இந்த ரோவரைக் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை.

நாசா : ஆப்பர்சுனிட்டி ரோவரை இன்னும் தொடர்பு கொள்ள  முடியவில்லை!

புழுதிப் புயலில் சிக்கியதன் காரணமாக சூரிய சக்தியால் இயங்கும் இதனுடைய பேட்டரிகள் செயல்படவில்லை. நாசா நிலையத்தில் உள்ள விஞ்ஞானிகள் இந்த ரோவரோடு தொடர்பு கொள்வதற்கு முயற்சித்து வருகின்றனர். இதுவரை இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

செவ்வாய் கிரக தொழில்நுட்ப ஊடகத் தொடர்பாளர்

செவ்வாய் கிரக தொழில்நுட்ப ஊடகத் தொடர்பாளர்

"கடைசியாக ஜீன் 10 ஆம் தேதி ரோவரோடு தொடர்பு கொள்ள முடிந்தது" என்கிறார், நாசாவின் செவ்வாய் மற்றும் செவ்வாய் கிரக தொழில்நுட்ப ஊடகத் தொடர்பாளர் ஆன்ட்ரூ குட் (Andrew Good).

"இதுவரை ரோவரோடு மீண்டும் தொடர்பு கொள்ள முடியவில்லை. செப்டம்பர் மாதத்தின் இடைப்பகுதியில் புழுதி விலகி சூரிய ஒளி படரும்பொழுது ரோவர் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்வதற்கு வாய்ப்பு ஏற்படும்." என நம்புகின்றனர் நாசா விஞ்ஞானிகள்.

 ரோவர்

ரோவர்

புயல் காரணமாக செவ்வாய் கிரகத்தை மூடியுள்ள புழுதி விலகாதவரை ஆப்பர்சுனிட்டி ரோவரோடு தொடர்பு கொள்வது சாத்தியமில்லை.

ஜீன் 10 ஆம் தேதிக்குப் பிறகு ரோவர் தன்னுடைய செயல்பாட்டை இழந்துள்ளது. இதனால் அதனுடைய ஆற்றல் குறைந்து போனது மட்டும் அல்லாமல் அதனுடைய திட்ட இலக்குக் கடிகாரமும் நின்று போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

ஜீன் 1

ஜீன் 1

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட மிகப்பெரும் புழுதிப் புயலில் சிக்கித்த தவித்த ஆப்பர்சுனிட்டி ரோவர் அங்குள்ள பள்ளத்தாக்கு ஒன்றில் இருளில் சிக்கிக் கொண்டதை கடந்த ஜீன் 1 ஆம் தேதி நாசா விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

சூரிய ஒளி

சூரிய ஒளி

ஆப்பர்சுனிட்டி ரோவர் தன்னுடைய இயக்கத்திற்குத் தேவையான ஆற்றலைச் சூரிய ஒளியில் இருந்து பெற்றுக் கொள்கிறது. தேவைக்கு ஏற்ப ஆற்றலைப் புதுப்பித்துக் கொள்கிறது. இதற்கென ரோவரில் சோலார் பேனல் பொருத்தப்பட்டுள்ளது.

ஜீன் 6 ஆம் தேதிக்குப் பிறகு ரோவரின் மின்கல ஆற்றல் வெகுவாகக் குறைந்தது. போதுமான ஆற்றல் இல்லாததால் அதனுடைய அறிவியல் ஆய்வுகள் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

மிக மோசமான பாதிப்புக்கு இடையிலும் ஆப்பர்சுனிட்டி ரோவர் கடந்த ஜீன் 10 ஆம் தேதி நாசாவில் உள்ள பொறியியல் விஞ்ஞானிகளுக்கு தகவல்களை ஒலிபரப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASAs Opportunity Rover Still Missing After Massive Martian Dusk Storm: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X