செவ்வாய் கிரகத்தில் புழுதிப்புயல்! தொடா்பு துண்டிக்கப்பட்ட நாசாவின் “Opportunity Rover”

“ஆய்வுத் திட்டக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் வருத்தத்தில் உள்ளனர்.” என்கிறார், நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு ரோவர் திட்டத்தின் மேலாளர், ஜான் கல்லாஸ் (John Callas).

|

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புழுதிப் புயல் அக்கிரகத்தின் பெரும் பகுதியைப் பாதித்துள்ளது. அதன் காரணமாக நாசாவின் 15 ஆண்டு கால ஆய்வுத்திட்டத்திற்குத் துணையாக இருந்த ஆப்பர்சூனிட்டி ரோவர் (Opportunity Rover) என்னும் ரோபோடிக் இயந்திரத்துடன் இணைந்த வான்வெளி வாகனம் கடும் பாதிப்பு அடைந்திருக்கும் என அச்சம் எழுந்துள்ளது.

செவ்வாய் கிரகத்தில்  புழுதிப்புயல்! சிக்கிய “Opportunity Rover”.!

நாசாவில் உள்ள ஜெட் புரபல்சன் ஆய்வகத்தைச் (JPL) சேர்ந்த பணியாளர்கள் ரோவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை. ரோவரின் பேட்டரிகள் தங்களுடைய சக்தியை இழந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. கடந்த மே மாதம் 30ஆம் தேதி தோன்றிய இந்தப் புழுதிப் புயல், ரோவர் சுற்றி வந்த பகுதியில் சூரியனை முழுவதுமாக மறைத்து விட்டது. அதனால் ரோவர் இருட்டுக்குள் சிக்கிக் கொண்டது. ரோவர், தான் இயங்குவதற்குத் தேவையான ஆற்றலை சூரிய ஒளியின் மூலமே பெறுகிறது. சூரிய ஒளி தடைப்பட்டதால் ரோவர் தன்னுடைய பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய இயலவில்லை.

நாசா

நாசா

"ஆய்வுத் திட்டக் குழுவில் உள்ள ஒவ்வொருவரும் வருத்தத்தில் உள்ளனர்." என்கிறார், நாசாவின் செவ்வாய் கிரக ஆய்வு ரோவர் திட்டத்தின் மேலாளர், ஜான் கல்லாஸ் (John Callas). தற்போது ஆப்பர்சுனிட்டி ரோவரின் அறிவியல் ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புழுதிப் புயலில் இருந்து ரோவரைக் காப்பதற்காக அவ்வாறு செய்துள்ளதாக ஜான் கல்லாஸ் கூறுகிறார்.

"தற்போது நாங்கள் காத்திருப்பு நிலையில் உள்ளோம். ரோவரிடம் இருந்து சிக்னலை எதிர்பார்த்து ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறோம். நாங்கள் கவலையோடு இருந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. புழுதிப் புயல் அகன்ற பிறகு, ரோவர் எங்களிடம் மீண்டும் தொடர்பு நிலைக்குத் திரும்பும் என நம்புகிறோம்." எனவும் அவர் கூறுகிறார்.

கடிகாரம்

கடிகாரம்

ரோவரில் பொருத்தப்பட்டுள்ள கடிகாரம், குறிப்பிட்ட கால இடைவெளியில் ரோவரின் பவர் லெவலை சோதித்து அறிய ரோவரில் உள்ள கம்பியூட்டரைத் தூண்டும். தேவையில்லாத நேரத்தில் பேட்டரியில் அதிகப்பபடியாக சார்ஜ் ஏறுவதை இக் கம்ப்யூட்டர் தடுக்கும். குறிப்பாக இரவு நேரங்களில் ரோவரில் உள்ள பவரைக் குறைக்க இக்கணிப்பொறி உதவும். குறைந்த அளவிலான பவருடன் நீண்ட நேரம்கூட இந்த ரோவரால் செயல்பாட்டில் இருக்க முடியும்.

பேட்டரியில் கொஞ்சம்கூட சார்ஜ் இல்லாத நிலை

பேட்டரியில் கொஞ்சம்கூட சார்ஜ் இல்லாத நிலை

பேட்டரியில் கொஞ்சம்கூட சார்ஜ் இல்லாத நிலையில் செவ்வாய் கிரகத்தில் நிலவும் மித மிஞ்சிய குளிரால் ரோவர் முற்றிலும் முடங்கிப் போய்விடக் கூடிய ஆபத்து உள்ளது. கடந்த வாரம் ரோவரில் பதிவு செய்யப்பட்ட வெப்ப நிலை -20 டிகிரி பாரன்ஹீட் ( -29 டிகிரி சென்டிகிரேடு) ஆகும். புயலால் ஏற்பட்ட புழுதிச் சூழல், செவ்வாய் கிரகத்தின் வெப்ப நிலை மாறுபாட்டிலிருந்து ரோவரை இயற்கையாகக் காப்பாற்றும் கேடயமாகவும் அமைய வாய்ப்புண்டு என்கின்றனர் நாசாவின் பொறியியல் வல்லுநர்கள். -67F (-55C) அளவுக்குக் கடும் குளிரான நிலையிலும் கூட ஆப்பர்சுனிட்டி ரோவர் தன்னைத் தற்காத்துக் கொண்டு இயங்கும் வலிமையுடையது. தற்போதைய நிலையில் ரோவர் இருக்கும் செவ்வாய் கிரகப் பகுதியல் மிகக் குறைந்த அளவு வெப்ப நிலையாக -33F (-36C) டிகிரி வெப்ப நிலை இருக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது

ஆப்பர்சுனிட்டி தன்னுடைய இரட்டை ரோவரான ஸ்பிரிட்டுடன் (Spirit) 2004 ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. 90 நாட்கள் நிலவியல் (geology) சார்ந்த ஆய்வுப் பணிக்காக அனுப்பப்பட்ட இந்த இரண்டு விண்வெளி ரேபோடிக் இயந்திரங்களும் தங்களுடைய இலக்கையும் தாண்டிப் பல ஆண்டுகள் ஆய்வுப் பணியில் ஈடுபட்டன. 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ஸ்பிரிட் செவ்வாயிலிருந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருந்தது. அதன் பிறகு ஸ்பிரிட் மணலில் சிக்கிக் கொண்ட போது அதனை நாசாவால் மீட்டெடுக்க இயலவில்லை. ஆப்பர்சுனிட்டி ரோவர் மட்டும் அல்லாமல், கியூரியாசிட்டி ரோவரையும் செவ்வாய்க்கு நாசா நிறுவனம் அனுப்பியது. கடந்த மாதம், மார்ஸ் இன்சைட் (Mars InSight ) என்னும் ரோவரையும் அனுப்பியுள்ளது. செவ்வாய் கிரகத்தின் உட்பகுதியில் அமைந்துள்ள நிலவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்ட இந்த ரோவர் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் செவ்வாய் கிரகத்தில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புழுதிப் புயல்

புழுதிப் புயல்

வருடந்தோறும் செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஏற்படுவது வழக்கம். ஆனால் எப்பொழுதாவது அப்புயலால் செவ்வாய் கிரகத்தின் பெரும் பகுதி பாதிப்புக்கு உள்ளாக நேரிடும். இதற்கு முன்னர் 2007 ஆம் ஆண்டு பெரும் புழுதிப் புயல் ஏற்பட்டது.

செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில்

செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில்

தற்போது ஏற்பட்டுள்ள இந்தப் புழுதிப்புயலால் செவ்வாய் கிரகத்தின் தரைப்பகுதியில் உள்ள காற்றில் வெப்பநிலை கூடியுள்ளது. மேற்பகுதியில் உள்ள காற்றின் வெப்பநிலை குறைவாக உள்ளது. வெப்பமான காற்று மேலெழும்பும் பொழுது புழுதியை வானத்தில் சோ்க்கிறது. இத்தகைய புழுதி சில வாரங்கள் வரை நீடிக்கும். சில நேரங்களில் சில மாதங்கள் வரை கூட நீடிக்கும். காற்றின் வெப்ப நிலை சமநிலையை எட்டியவுடன் இப்புழுதிப் புயல் நின்றுவிடும்.

இயற்கையானதுதான்

இயற்கையானதுதான்

இத்தகைய புழுதிப் புயல் இயற்கையானதுதான் என்றாலும் அதனைப் புரிந்துகொள்வது கடினம். நாசா வானுக்கு அனுப்பிய மூன்று செயற்கைக் கோள்களுள் ஒன்றான மார்ஸ் ரெகனைசேன்ஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter ) செயற்கைக் கோளின் முக்கிய நோக்கம், செவ்வாய் கிரகத்தின் வானியல் நிலைகளை ஆய்வு செய்வது ஆகும்.

புழுதிப் புயல் அடங்கியதும் ஆப்பர்சுனிட்டி ரோவரோடு மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சியில் நாசாவின் பொறியியல் வல்லுநர்கள் ஈடுபடுவர். தொடர்பு கிடைத்தவுடன் அவர்களுக்கு அடுத்த சிக்கல் காத்திருக்கிறது. ரோவரின் மேல் படிந்துள்ள கடுமையான தூசுப்படலத்தை அகற்றுவதுான் அந்தச் சிக்கல்.

Best Mobiles in India

English summary
NASA's Opportunity Rover Silenced by Dust Storm on Mars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X