சாத்தியமுள்ள வாழ்க்கைக்கு ஆதரவு அளிக்கும் ட்ராப்பிஸ்ட்-1பி மற்றும் 1சி..!

|

பூமி போன்றே உள்ள வேற்று கிரகங்களை கண்டறிதல் என்பது ஒட்டுமொத்த விண்வெளி ஆராய்ச்சிகளின் முக்கியமான நோக்கங்களில் ஒன்றாக திகழ்கிறது. சூரிய மண்டலத்திற்கு வெளியே ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி வரும் கிரகம் - எக்ஸோபிளான்ட் (exoplanets) எனப்படுகிறது.!

பெரும்பாலான எக்ஸோபிளான்ட்கள் வாழத் தகுந்தவைகளாக இருக்காது. மீறி கண்டுபிடிக்கப்பட்டால் அது விண்வெளி ஆராய்ச்சியின் ஒரு மைல்கல்லாகவே பார்க்கப்படுகிறது. அப்படியானதொரு மைல்கல் தான் - ட்ராப்பிஸ்ட்-1பி ( TRAPPIST-1b) மற்றும் ட்ராப்பிஸ்ட்-1சி (TRAPPIST-1c)..!

முதல் தேடல் :

முதல் தேடல் :

நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பயன்படுத்தி நமது சூரியனுக்கு அப்பால் உள்ள பூமியின் அளவு கொண்ட கிரகங்கள் மற்றும் அதன் சூழ்நிலைகள் சார்ந்த முதல் தேடல் மேற்க்கொள்ளப்பட்டது.

வாழத்தக்க கோள்கள் :

வாழத்தக்க கோள்கள் :

அந்த தேடலில் சூரிய குடும்பத்திற்கு வெளியேயுள்ள சுமார் 40 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இரண்டு சாத்தியமுள்ள வாழத்தக்க கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

வாயு உலகங்கள் :

வாயு உலகங்கள் :

ட்ராப்பிஸ்ட்-1பி ( TRAPPIST-1b) மற்றும் ட்ராப்பிஸ்ட்-1சி (TRAPPIST-1c) என்று அழைக்கப்படும் அந்த கோள்களில் பொதுவாக வாயு உலகங்கள் காணப்படும் ஹைட்ரஜன் ஆதிக்க சூழ்நிலை இல்லை.

செயல்பாடு :

செயல்பாடு :

அதாவது ஹைட்ரஜன்-ஹீலியம் பற்றாக்குறையானது அங்கு உயிர் வாழ்வதற்கான அதிக வாய்ப்பினை வழங்குகிறது. அங்கு குறிப்பிடத்தக்க ஹைட்ரஜன் ஹீலியம் உறை இருந்திருந்தது என்றால் சாத்தியமுள்ள வாழ்க்கைக்கு ஆதரவு அளிக்கும் கிரீன்ஹவுஸ் போன்ற செயல்பாடு இல்லாமல் போயிருக்கும்.

500 மில்லியன் ஆண்டுகள் :

500 மில்லியன் ஆண்டுகள் :

இவ்விரண்டு கிரகங்களும் குறைந்தது 500 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஒரு சிவப்பு குள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. அந்த சிவப்பு குள்ள நட்சத்த்திரத்தை ஒரு முறை முழுதாய் சுற்றி வர ட்ராப்பிஸ்ட்-1பி 2.4 நாட்களும், ட்ராப்பிஸ்ட்-1சி,1.5 நாட்களும் எடுத்துக் கொள்கின்றன.

20 மற்றும் 100 முறை :

20 மற்றும் 100 முறை :

உடன் பூமி-சூரிய நெருக்கத்தை விட அந்த இரண்டு கோள்களும் 20 மற்றும் 100 முறை என்ற அளவீட்டில் தங்கள் சுற்றுபாதை நட்சத்திரத்துடன் நெருக்கமாக உள்ளன.

வெப்பநிலை :

வெப்பநிலை :

நமது சூரியனை விட சிவப்பு குள்ள நட்சத்திரமானது சற்று மங்கலாக இருப்பதால் ட்ராப்பிஸ்ட்-1சி'யில் வாழத்தக்க மண்டலங்கள் கொண்ட மிதமான வெப்பநிலை மற்றும் திரவ நீர் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள்.

மதிப்பீடு :

மதிப்பீடு :

கூடுதலான ஆய்வுத்தகவல்கள் மூலம் ஒருவேளை அங்கு மீத்தேன் அல்லது நீர் அம்சங்கள் கண்டுபபிடிக்கப்படலாம் அதன் பின்னரே அதன் சூழ்நிலைகால் ஆழமாக மதிப்பீடு செய்யப்படும்..!

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பழங்கால பால்பெக் கோவில் ஏலியன்களின் தரையிறங்கும் தளமாக விளங்கியதா.?


அவிழும் சூரிய குடும்ப மர்ம முடிச்சுகள், தொடரும் நாசா..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல்-தொழிற்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

Read more about:
English summary
NASA’s Hubble spots two potentially habitable exoplanets. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X