அதிநவீன விண்வெளி உடையை வடிவமைத்த நாசா! நிலவு பயணத்தில் அறிமுகம்.!

|

ஆர்ட்டெமிஸ் மிஷனின் ஒரு பகுதியாக சந்திரனுக்கு செல்லவுள்ள விண்வெளி வீரர்கள் அணியும் விண்வெளி உடை, தற்போதுள்ள உடையை போலவே தோற்றமளித்தாலும், மிகவும் சிக்கலான பணிகளையும் செய்யக்கூடிய வகையில் புதிய தொழில்நுட்பத்துடன் மறுவடிவமைக்கப்பட்டுள்ளது.

3டி ஸ்கேன்

3டி ஸ்கேன்

விண்வெளிவீரர்கள் சிறப்பாக செயல்பட அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய விண்வெளி உடைகள், கைகள் மற்றும் பொருட்களைத் தலைக்கு மேல் தூக்கும் வகையிலும், இடுப்பு மற்றும் முழங்கால் பகுதிகளில் நெகிழ்வுத்தன்மையுடனும், சந்திர மேற்பரப்பில் மென்மையான பயணத்திற்கு வழிவகுக்கின்றன.


ஒவ்வொரு விண்வெளி வீரரின் முழு உடலையும் 3டி ஸ்கேன் எடுத்து, அவர்களுக்கு மிகுந்த சவுகரியத்தையும் மற்றும் பரந்த அளவிலான செயல்படுதலை வழங்க நாசா திட்டமிட்டுள்ளது.

 குறைந்த ஈர்ப்புவிசை

குறைந்த ஈர்ப்புவிசை

அமெரிக்க விண்வெளி வீரரும், சந்திரனில் கடைசியாக நடந்த மனிதருமான ஜீன் செர்னனின் பிரபலமான வீடியோவில், அவர் சந்திரனின் மேற்பரப்பில் முயல்போல குதித்துக்கொண்டிருப்பது இணையத்தில் வைரலான ஒன்று. இது இந்த புதிய வடிவமைப்பை கொண்டு நாசா அகற்ற விரும்பும் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்றாகும்.

ஒன்றுக்கொன்று மாற்றக்கூடிய பகுதிகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த புதிய விண்வெளி உடையை, விண்வெளியின் குறைந்த ஈர்ப்புவிசை( மைக்ரோ கிராவிட்டி) அல்லது கிரக மேற்பரப்பிற்கு ஏற்றவாறு பயன்படுத்தப்படலாம்.

சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.!சத்தமில்லாமல் ஏர்டெல் டிஜிட்டல் டிவி மற்றும் டி2ஹெச் சேனல்களின் விலைகள் குறைப்பு.!

மேம்பட்ட தோள்பட்டை அமைப்பு

மேம்பட்ட தோள்பட்டை அமைப்பு

இதன்மூலம் கார்பன் டை ஆக்சைடு நிறைந்த வளிமண்டலங்களில் உயிர்வாழ்வதற்கான ஆக்ஸிஜன் அல்லது குளிர்ந்த வெப்பநிலைக்கு ஏற்றவாறு வெப்பப்படுத்துதல் அமைப்பு போன்ற சுற்றுச்சூழலை அடிப்படையாகக் கொண்ட செயல்பாடுகளை செய்ய விண்வெளி வீரர்களை இந்த புதிய உடை அனுமதிக்கும்.


இந்த விண்வெளி உடையின் பின்புறமுள்ள நுழைவு வழி மூலம், இது அணிந்திருப்பவர் விண்வெளி உடையில் நுழைய உதவுகிறது. மேலும் மேம்பட்ட தோள்பட்டை அமைப்பு மூலம் சிறந்த இயக்கம் மற்றும் பாதுகாப்பை வழங்குகிறது.

தலைக்கு மேலே பொருட்களை தூக்க முடியும்

தலைக்கு மேலே பொருட்களை தூக்க முடியும்

மிக முக்கியமாக இந்த விண்வெளி உடை இயக்கத்தை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பதால், விண்வெளி வீரர்கள் தங்கள் தலைக்கு மேலே பொருட்களை தூக்க முடியும்.

விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சுற்றுவதற்கு கால்கள் சார்ந்திருக்காமல் ஈர்ப்பு விசையை நம்பியிருப்பதால், பகுதி ஈர்ப்பு விசையில் இயங்குவதற்கு ஏற்றவாறு கால்சட்டை(பேன்ட்) மற்றும் காலணி(பூட்ஸ்) வடிவமைக்கப்பட்டிருக்கும்.

தெளிவான பாதுகாப்பு

தெளிவான பாதுகாப்பு

கீழ் உடற்பகுதி மேம்பட்ட பொருட்கள் மற்றும் கூட்டு தாங்கு உருளைகள் மூலம் வடிவமைக்கப்படும். ஒவ்வொரு விண்வெளி வீரருக்கும் கால்களுக்கு நெகிழ்வாக இருக்கும் ஹைக்கிங் பாணி காலணிகள் வழங்கப்படும்.


ஹெல்மட்டில் உள்ள தற்போதைய மைக்ரோஃபோன்கள், வியர்வை மற்றும் இதர அசவுகரியங்கள் போன்ற சிக்கல்களை சமாளிப்பதற்காக நாசா அதை மாற்றியமைத்து, குரல்வழி மூலம் செயல்படுத்தப்பட்டு புதிய அமைப்பை மேல் உடல் பகுதியில் இணைக்கவுள்ளது. மேலும் விண்வெளி வீரர்களின் தலைக்கவசமும் முற்றிலும் மாற்றியமைக்கப்படவுள்ளது.

எந்தவொரு உடைகள் மற்றும் கண்ணீர் அல்லது கிரக அமைப்புகளின் சிராய்ப்பு மற்றும் குப்பைகளின் கீறல்கள் ஆகியவற்றிலிருந்து அழுத்தப்பட்ட குமிழியைப் பாதுகாக்கும் தெளிவான பாதுகாப்பு வைசர்(Visor) இருக்கும்.

விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்விரைவில்: புதிய ஹானர் 20 லைட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

2024ஆம் ஆண்டின் இறுதியில்

2024ஆம் ஆண்டின் இறுதியில்

இதிலுள்ள விரைவான-இடமாற்று செயல்பாடு (Quick swap) என்பது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் நடப்பதற்கு முன்னும் பின்னும் வைசரை மாற்ற முடியும். இதன் மூலம் அதை பழுதுபார்ப்பதற்காக பூமிக்கு திருப்பி அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை.


நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்தில் உள்ள மானுடவியல் மற்றும் பயோமெக்கானிக்ஸ் பிரிவில், சந்திரனுக்கு பயணிக்கவுள்ள விண்வெளி வீரர்கள் விண்வெளியில் எதிர்பார்க்கப்படும் இயக்கங்களை செய்யும்போது முழு உடல் 3 டி ஸ்கேன் செய்யப்படும். இதன்மூலம் கிடைக்கும் முப்பரிமாண மாடல் மூலம், விண்வெளி வீரர்களுக்கு சவுகரியமான விண்வெளி உடைகளை நாசா தயாரிக்கும்.


2024ஆம் ஆண்டின் இறுதியில் சந்திரனின் தென்துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப நாசா இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த தலைமுறை விண்வெளி உடைகள் உள்பட பல மிஷன்களை வெற்றிகரமாக முடிக்கும் வகையில் நாசா அதிக கால அளவை இலக்காக கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
NASAs generation space suits astronauts going moon freedom ability: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X