Home
Scitech

நரி முகத்தில் முழித்த நாசா.! கெப்ளருக்கு செலவு பண்ணுண பணம் ஊ ஊ!

புறக்கோள்களைக் கண்டறிந்து அவை பற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்காக நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கெப்ளர் வான் தொலைநோக்கி (Kepler Space Telescope) மீண்டும் செயல் இழந்தது.

புறக்கோள்களைக் கண்டறிந்து அவை பற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்புவதற்காக நாசாவால் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட கெப்ளர் வான் தொலைநோக்கி (Kepler Space Telescope) மீண்டும் செயல் இழந்தது.

நரி முகத்தில்முழித்த நாசா! கெப்ளருக்கு செலவு பண்ணுணபணம் ஊ ஊ!


தொழில் நுட்பக் கோளாறால் நீண்ட நாட்கள் பாதிப்படைந்திருந்த கெப்ளர் விண்கலம் அதிலிருந்து மீண்டு தன்னுடைய பணியைத் தொடங்கிய சில நாட்களில் மறுபடியும் செயல் இழந்தது நாசா விஞ்ஞானிகளிடையே வருத்தத்ததை ஏற்படுத்தி உள்ளது.

பயன்பாட்டுக்கு  வந்த கெப்ளர்:

பயன்பாட்டுக்கு வந்த கெப்ளர்:

"மீண்டும் வெற்றிகரமாகத் தகவல்களை அனுப்பத் தொடங்கியிருந்த கெப்ளர் தொலைநோக்கி அடுத்த கட்டத் தகவல் சேகரிப்புக்குத் தயாராகியிருந்த சூழலில் மறுபடியும் செயல் இழந்து விட்டது" என நாசாவின் அறிக்கை தெரிவிக்கிறது. கெப்ளர் தொலை நோக்கி எரிபொருள் இன்றி செயல் இழந்த நிலைக்கு (no-fuel-use sleep mode) சென்று விட்டதாகக் கருதப்படுகிறது.

 செயல்பாட்டில் தடங்கள்:

செயல்பாட்டில் தடங்கள்:

கெப்ளர் தொலைநோக்கி விண்கலத்திற்காக எரிபொருள் வழங்குவதில் கடந்த சில மாதங்களாகவே சிக்கல் இருந்ததாக பொறியியல் அறிஞர்கள் கூறுகின்றனர். அதன் காரணமாக கெப்ளர் தொலைநோக்கி பகுதி அளவில்தான் செயல்பட்டு வந்தது. இருந்தும், புறக் கோள்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து அனுப்பியது. தற்போது அதனுடைய செயல்பாட்டில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

நாசாவுக்கு பெருமை கொடுத்த திட்டம்:

நாசாவுக்கு பெருமை கொடுத்த திட்டம்:

தன்னுடைய செயல்பாட்டில் சில தடுமாற்றங்களைச் சந்தித்த போதும் கெப்ளர் தொலை நோக்கி தன்னுடைய கடந்த காலத் தகவல் சேகரிப்பின் காரணமாக மிகப் பெரிய வெற்றிகளை நாசா விண்வெளி நிலையத்துக்குப் பெற்றுத் தந்தது எனலாம். அதன் காரணமாக நாசாவுக்குப் பெருமை தரும் திட்டங்களுள் ஒன்றாக, புறக் கோள்களைக் கண்டறிவதற்கான கெப்ளர் தொலை நோக்கி விண்கலத் திட்டம் திகழ்கிறது.

புறக்கோள்ளை கண்டறிந்தது:

புறக்கோள்ளை கண்டறிந்தது:

2009ஆம்ஆண்டு தொலை நோக்கியைத் தாங்கிய கெப்ளர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. அப்பொழுது இந்த விண்கலம் ஓராண்டுக்கு மட்டும் பயன்பாட்டில் இருக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால் இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகு ஏற்பட்ட சில தொழில் நுட்பக் கோளாறுகளின் காரணமாக K2 என்னும் புதிய திட்டத்தின் வழியாக கெப்ளர் தொலை நோக்கி விண்கலத் திட்டம் இணைக்கப்பட்டது. இந்த இரு திட்டங்களின் மூலமாக கெப்ளர் தொலைநோக்கி 2650-க்கும் மேற்பட்ட புறக் கோள்களைக் கண்டறிந்து அவை பற்றிய தகவல்களைப் பூமிக்கு அனுப்பியது. கெப்ளர் விண்கலம் அனுப்பிய தகவல்கள், விண்ணியல் அறிஞர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்து விட்டன எனலாம். அறிவியல் அறிஞர்கள் இதுவரை யூகித்திருந்த எண்ணங்களுக்கு மாறாக, அதிக எண்ணிக்கையிலான புறக் கோள்களைப் பற்றிய தகவல்களை இந்த விண்கலம் பூமிக்கு அனுப்பியிருந்ததுதான் இதற்குக் காரணம்.

டிஇஎஸ்எஸ்:

டிஇஎஸ்எஸ்:

இத்தகைய அரும் பெரும் சாதனைகளை நிகழ்த்திய கெப்ளர் தொலை நோக்கி விண்கலத்திற்கு மாற்றாக ஒரு புதிய தொலை நோக்கி உருவாக்கப்பட்டு அது விண்ணில் ஏவப்பட்டுள்ளது. புறக் கோள்களைக் கண்டறிந்து தகவல்களைப் பரிமாற்றுவதற்கான செயற்கைக் கோள் - TESS (Transiting Exoplanet Survey Satellite) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயற்கைக் கோள் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் விண்ணில் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக் கோள் இரண்டு ஆண்டுகளுக்குள், ஆயிரக்கணக்கான புறக் கோள்களைக் கண்டறிந்து, அவை பற்றிய தகவல்களை பூமிக்கு அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
NASAs Ailing Planet Hunting Kepler Telescope Is Offline Again : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X