பூகம்பம் முதல் சுனாமி வரை.. ஆபத்தோடு ஆரம்பிக்கும் நவ.1..? விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

|

2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதமானது ஆபத்தோடு தான் ஆரம்பிக்கும் என்பது போல் தெரிகிறது.

வழக்கமாக டிசம்பர் மாதத்தில் தான் சுனாமி, நிலநடுக்கம் போன்ற வார்த்தைகள மேலோங்கும். இம்முறை நவம்பர் மாதமே, அதுவும் 1 ஆம் தேதியே ஆபத்தோடு ஆரம்பமாகிறது!

விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்

நாம் அனைவரும் வருகிற நவம்பர் 1 ஆம் தேதியை "பாதுகாப்பாக" கடக்கும் வரையிலாக, எதற்குமே உத்திரவாதம் இல்லை.. எதையுமே உறுதியாக சொல்ல முடியாது என்று நாசா (NASA) விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

எச்சரிக்கை விடுக்கும் அளவிற்கு என்ன ஆபத்து வருகிறது? நவம்பர் 1 ஆம் தேதியன்று அப்படி "என்ன தான்" நடக்க போகிறது? "அது" நடந்தால் நமக்கெல்லாம் என்ன ஆகும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

பாதுகாப்பான தூரத்தில்!

பாதுகாப்பான தூரத்தில்!

கடந்த சில மாதங்களாகவே, பல வகையான விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் ஆனது - சத்தம் போடாமல் - பூமியை கடந்து சென்ற வண்ணம் உள்ளன.

அப்படியாக, மிகவும் பாதுகாப்பான தூரத்தில் பூமியை கடந்து சென்ற அந்த விண்கற்கள் மற்றும் சிறுகோள்கள் ஆனது 100 முதல் 500 அடி அகலம் கொண்ட சிறிய "விண்வெளிப் பாறைகளே" ஆகும்.

25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!25 மணி நேரமாக மாறப்போகும் 1 நாள்.. விஞ்ஞானிகள் புட்டுப்புட்டு வைக்கும் 3 உண்மைகள்!

இதுவரைக்கும் பார்த்ததெல்லாம் ஒன்றுமே இல்லை!

இதுவரைக்கும் பார்த்ததெல்லாம் ஒன்றுமே இல்லை!

வருகிற நவம்பர் 1 ஆம் தேதி பூமியை "நோக்கி வரும்" ஒரு விண்கல் ஆனது "இதுவரைக்கும் பார்த்ததெல்லாம் ஒன்றுமே இல்லை" என்று கூறும் அளவிற்கு மிகப்பெரியதாக இருக்க போகிறது!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் கூற்றுப்படி, நவம்பர் 1 ஆம் தேதியன்று நம்மை நோக்கி வரும் அந்த விண்கல்லின் அளவு - சுமார் 2500-அடி ஆகும். அதுமட்டுமின்றி, NASA விஞ்ஞானிகள் இந்த விண்கல்லை "அபாயகரமானது" என்றும் வகைப்படுத்தி உள்ளனர்.

தரைமட்டமாக்கும்!

தரைமட்டமாக்கும்!

2500 அடி நீளமுள்ள ஒரு விண்கல் என்பது மிகவும் ஒரு அபாயகரமான விண்வெளி பொருள் ஆகும். இந்த அளவிலான ஒரு விண்கல், நமது கிரகத்தைத் தாக்கினால் அது கற்பனைக்கு எட்டாத அழிவுகளை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

ஏனெனில் இந்த அளவிலான ஒரு விண்கல் / சிறுகோள் ஆனது பூமியைத் தாக்கினால், அது நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தூரத்திற்கு நிலத்தை சிதைக்கும்; தரைமட்டமாக்கும்.

நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை நரகம் இப்படி தான் இருக்குமோ? தங்கத்தை "உருக்கும்" புதிய கிரகம் கண்டுபிடிப்பு!

பூகம்பங்கள் முதல் டெக்டோனிக் மாற்றங்கள் வரை!

பூகம்பங்கள் முதல் டெக்டோனிக் மாற்றங்கள் வரை!

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமி மீதான ஒரு விண்கல் மோதல் ஆனது நிலப்பரப்பை மட்டுமே அழிக்காது. அது பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள், காட்டுத் தீ மற்றும் டெக்டோனிக் மாற்றங்கள் போன்றவற்றையும் ஏற்படுத்தும்.

இதெல்லாம் அறிந்த பிறகு, நமக்குள் எழும் ஒரே கேள்வி - நவம்பர் 1 ஆம் தேதி பூமியை நோக்கி வரும் 2500 அடி விண்கல் ஆனது பூமி மீது மோதுமா? அல்லது மோத வாய்ப்பு உள்ளதா? என்பது மட்டுமே ஆகும்!

மணிக்கு 84,528 கிலோமீட்டர் வருகிறது!

மணிக்கு 84,528 கிலோமீட்டர் வருகிறது!

நவம்பர் 1 ஆம் தேதியன்று பூமியை நோக்கி வரும் 2500 அடி விண்வெளிப் பாறையின் பெயர் - ஆஸ்ட்ராய்டு 2022 ஆர்எம்4 (Asteroid 2022 RM4) ஆகும். இது முதன் முதலில் கடந்த ஆண்டு செப்டம்பர் 12 அன்று தான் கண்டறியப்பட்டது.

இந்த சிறுகோள் மணிக்கு 84,528 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. உண்மையிலேயே இது மிகவும் ஆபத்தான ஒரு வேகம் ஆகும். ஏனென்றால், பெரும்பாலான விண்கற்கள் ஆனது மணிக்கு 25,000 - 50,000 கிமீ என்கிற வேகத்தில் தான் பயணிக்கும்!

செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!செவ்வாய் கிரகத்தில் ஓட்டை போட்ட NASA.. உள்ளே காத்திருந்த அதிர்ச்சி!

கடைசி நிமிடம் வரை எதற்குமே உத்திரவாதம் இல்லை!

கடைசி நிமிடம் வரை எதற்குமே உத்திரவாதம் இல்லை!

மணிக்கு 84,528 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் ஒரு விண்கல்லின் பயணப்பாதையை கணிப்பது கடினம். ஏனென்றால், கடைசி நேரத்தில் கூட ஏதேனும் திசைதிருப்பல்கள் நடக்கலாம். அப்படி நடக்கும் பட்சத்தில், அந்த விண்கல் அருகில் உள்ள எந்தவொரு கிரகத்தின் மீதும் மோதலாம்!

இந்த காரணத்தால் தான், நாசா விஞ்ஞானிகள் இந்த விண்கல்லை "அபாயகரமானது" என்று வகைப்படுத்தி உள்ளனர்.

கணிப்புகளின்படி..

கணிப்புகளின்படி..

"அபாயகரமானது" என்று வகைப்படுத்தப்பட்டது ஒருபக்கம் இருக்க, தற்போது வரையிலாக இந்த விண்கல் ஆனது பூமியில் இருந்து சுமார் 1.3 மில்லியன் கிலோமீட்டர்கள் என்கிற "மிகவும் பாதுகாப்பான" தொலைவில் தான் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் நவம்பர் 1 ஆம் தேதியை நாம் பாதுகாப்பாக கடக்கும் வரை, எதையுமே உறுதியாக சொல்ல முடியாது!

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

வானியலாளர்களுக்கு பெரும் கவலை!

வானியலாளர்களுக்கு பெரும் கவலை!

1.3 மில்லியன் கிலோமீட்டர்கள் என்கிற அளவிற்கு நெருங்கி வரும் விண்கற்களை மட்டும் அல்ல, 7.4 மில்லியன் கிலோமீட்டருக்கு இடைவெளியில் நெருங்கி வரும் எந்தவொரு விண்கல்லுமே எந்தவொரு சிறுகோள்களுமே அபாயகரமானதாகவே பார்க்கப்படுகிறது.

நவம்பர் 1 ஆம் தேதியன்று பூமியை கடக்கவுள்ள ஆஸ்ட்ராய்டு 2022 RM4 ஆனது, அளவில் பெரிதாகவும் இருக்கிறது அதே சமயம் மிகவும் நெருக்கமாகவும் வருகிறது.

இப்படி இரண்டு "அபாயகரமான" அளவுகோல்களையும் இது பூர்த்தி செய்வதால், இந்த விண்கல் வானியலாளர்களுக்கு மத்தியில் ஒரு பெரும் கவலையாக உருமாறி உள்ளது!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA Warning that a Dangerous Asteroid Named 2022 RM4 coming towards Earth on November 1st

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X