1000 அடி அகலத்தில் பூமிக்கு வரும் ஆபத்து - நாசா எச்சரிக்கை!
இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டம் எப்போதுமே சந்தேகத்திலேயே இருக்கும்.
உலகம் அழிய வாய்ப்பு உள்ளதா? என்கிற கேள்விக்கும் , பேய், பிசாசு, பூதம் இருக்கிறதா? என்கிற கேள்விக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை. இந்த இரண்டிற்குமே, சாத்தியமான காரணங்கள் இருக்கிறது தான் என்று நம்புவர்களுக்கு அது சாத்தியம் தான. இல்லாதவர்களுக்கு - அது சாத்தியம் இல்லை தான்.

இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட ஒரு கூட்டம் இருக்கிறது, அந்த கூட்டம் எப்போதுமே சந்தேகத்திலேயே இருக்கும். அவர்களுக்கு அவ்வப்போது வல்லுனர்களின் ஆலோசனைகளோ, அறிவுரையோ அல்லது அறிவிப்போ தேவைப்படும். அப்படியான ஒரு அறிவிப்பை தான் சமீபத்தில் நாசா வழங்கி உள்ளது. அந்த அறிவிப்பு அவ்வளவு சுலபமாக கடந்து போக முடியாது. ஏனெனில் அது வெறும் ஒரு அறிவிப்பு ,மட்டுமல்ல, அதுவொரு எச்சரிக்கையும் கூட!

பூமியோடு மோதுமா? பூமியை கடந்து செல்லுமா?
சுமார் 1000 அடி நீளம் கொண்ட ஒரு விண்கல் பூமி கிரகத்தோடு மோதல் நிகழ்த்த வாய்ப்பு உள்ளதாக நாசா அறிவித்து உள்ளது.ஆராய்ச்சியாளர்களால் அப்போபிஸ் என்று அழைக்கப்படும் இந்த விண்கல் ஆனது பூமிக்கும் நிலவிற்கும் இடையே இருக்கும் அளாவிலான தொலைவில் (அதாவது 19,000 மைல்) பூமியை கடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதன் பயணப்பாதையில் குறுக்கீடுகள் அல்லது மாறுதல்கள்!
கணிப்பின் படி அப்போபிஸ் விண்கல் ஆனது வெறுமனே கடந்து சென்று விட்டால் ஒரு சிக்கலும் கிடையாது. மாறாக அதன் பயணப்பாதையில் ஏதேனும் குறுக்கீடுகள் அல்லது மாறுதல்கள் ஏற்படும் பட்சத்தில் தான் ஆபத்து காத்திருக்கிறது. அப்போபிஸ் என்பது ஒரு எகிப்திய பெயராகும், எபெப் என்பது பண்டைய எகிப்திய சூரிய கடவுள் ஆனா ராவின் எதிரியின் பெயர் ஆகும்.

எப்போது நிகழும்?
துல்லியமாக இந்த தேதியில், இந்த நேரத்தில் நடக்கும் என்று கூற முடியாவிட்டாலும் கூட, அடுத்து வரும் சில ஆண்டுகளில் நடக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விண்வெளி நிகழ்வை, பூமி கிரகத்தில் இருக்கும் சுமார் இரண்டு பில்லியன் மக்களால் காண முடியும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த விண்வெளி நிகழ்வானது பூமியோடு அவ்வளவு நெருக்கமாக நடக்கவுள்ளது.

எப்போது நிகழும் என்று ஏன் கணிக்க முடியவில்லை?
அப்போபிஸ் விண்கல் ஆனது குறிப்பிட முடியாத ஒரு சுற்றுவட்ட பாதையின் கீழ் சூரியனை சுற்றி வருகிறது. அது அப்படியே சுற்றும் பட்சத்தில், அது பூமியியோடு மோதல் நிகழ்த்தி, கோடிக்கணக்கான மதிப்பிலான சேதங்களையும் சில உயிர் பலிகளையும் ஏற்படுத்தும் சாத்தியக்கூறு உள்ளதாக நாசா அறிவித்து உள்ளது.

ஒரு முழு நகரத்தையும் கூட அழிக்க முடியும்!?
அமெரிக்காவை சார்ந்த மைக்கேல் க்ரீன்ஸ்டைனின் கருத்துப்படி, "நாசா விஞ்ஞானிகளின் படி, சுமார் 300 அடி அகலம் கொண்ட ஒரு விண்கல்லால் (அல்லது சிறுகோளால்) ஒரு முழு நகரத்தையும் கூட அழிக்க முடியும். இந்நிலைப்பாட்டில், பூமியுடன் ஆன அப்போபிஸின் மோதல் சாத்தியமாகும் பட்சத்தில் பெரும் அழிவுகளை பூமி எதிர்கொள்ளலாம். ஏனெனில் இது 1000 அடிகளுக்கு மேலான அகலத்தை கொண்டு உள்ளது. சுமார் 19000 மைல்கள் என்கிற தொலைவானது கேட்பதற்கு வேண்டுமானால் மிகவும் தூரமாக பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் நாசா விஞ்ஞானிகள்படி, பூமிக்கு இவ்வளவு அருகாமையில் இந்த அளவிலான ஒரு விண்வெளி பொருள் கடப்பது எனபது மிகவும் அரிதான நிகழ்வு ஆகும்.

மோதல் நிகழாத பட்சத்தில்!
ஒருவேளை அப்போபிஸ் ஆனது பூமியை பாதுகாப்பாக கடந்து சென்று விட்டால், ஆராய்ச்சியாளர்களுக்கு அது ஒரு நல்ல விருந்தாக அமையும். ஏனெனில் மிகவும் அருகாமையில் கடந்து செல்லும் ஒரு விண்கல்லை உன்னிப்பாக ஆராயும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைக்கும். குறிப்பாக முன் எப்போதும் ஆராய்ந்து பார்க்க முடியாத, ஒரு விண்கல்லின் மேற்பரப்பு விவரங்களை ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கி மூலம் அவர்களால் ஆராய மற்றும் கண்காணிக்க முடியும்.

மோதுவதற்கு இரண்டு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது!
சூரியனை சுற்றி வரும் இந்த விண்கல் ஆனது அதன் எதிர்கால போக்கில் பூமியை தாக்கும் ஒரு சிறிய வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த விண்கல்லின் ஆரம்பகால பயன்பாதையின் படி, இது பூமியோடு மோதுவதற்கு இரண்டு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது. 2004 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விண்கல்லின் மேலும் சில ஆரம்பகால ஆய்வின் படி இது பூமியை தாக்காத பட்சத்தில் நிலவுடன் மோதலாம்.


Click it and Unblock the Notifications