செவ்வாய் கிரகத்தில் குடிநீர்! செவ்வாய் கிரகத்தின் புதையல் மேப்பை வெளியிட்ட நாசா!
நாசா வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையின் படி செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள பனிப் பாறைகளை மனிதர்களுக்கு தேவைப்படும் குடிநீராகவும், ராக்கெட் எரிபொருளாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது. இத்துடன் செவ்வாய் கிரகத்தில் குடிநீர் கிடைக்கும் புதையல் மேப் வரைபடத்தையும் வெளியிட்டுள்ளது.

மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு
நாசா, விண்வெளி ஆராய்ச்சியில் பல புதிய சாதனைகளைப் படைக்க மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. நாசாவின் வருங்கால பெரிய திட்டங்களில், குறிப்பாக மனிதர்களை நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தில் வாழ வைப்பதற்கான சாத்தியத்தை தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது. இதற்கான சாத்தியக் கூறுகளை விஞ்ஞானிகள் இன்னும் ஆழமாகத் தேடிவருகின்றனர்.

செவ்வாய் கிரகத்தின் புதையல் வரைபடம்
நாசா இந்த வாரம் வெளியிட்டுள்ள புவி இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வறிக்கையின் இதழில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. இந்த புதிய ஆய்வறிக்கையில், செவ்வாய் கிரகத்தில் குடிநீர் கிடைக்கும் பனிக்கட்டிகளின் தகவல் மற்றும் அவை உள்ள இடத்தின் புதையல் வரைபடத்தையும் நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளது, ஆனால் அவை உறைந்துள்ளது என்று உறுதிப்பட தெரிவித்துள்ளனர்.

ஆழமற்ற இடத்தில் உள்ள குடிநீர் பனிக்கட்டிகள்
செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த நீர் பனிக்கட்டிகள், செவ்வாய் கிரகத்தில் உள்ள ஆர்கேடியா பிளானிட்டியா என்று அழைக்கப்படும் இடத்தில் அதிகளவில் காணப்படுவதாக நாசா தெரிவித்துள்ளது. இந்த பனிக்கட்டிகள் ஆழமற்ற இடத்தில்தான் இருக்கிறது என்று அந்த பகுதியின் வரைபடம் எடுத்துக்காட்டுகிறது.

ஆர்பிட்டர் உதவியுடன் கண்டுபிடிப்பு
இந்த ஆர்கேடியா பிளானிட்டியா பகுதி, மனிதர்கள் குடிப்பதற்க்கு தேவையான குடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருளிற்கு தேவையான எரிபொருள் கிடைக்கும் முக்கிய தளமாகச் செய்வாய் கிரத்தில் இந்த இடம் இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மார்ஸ் ரெக்கொன்னைசன்ஸ் ஆர்பிட்டர் மற்றும் மார்ஸ் ஒடிசி ஸ்பேஸ்கிராஃப்ட் (Mars Reconnaissance Orbiter and the Mars Odyssey spacecraft) உதவியுடன் இந்த தகவலை விஞ்ஞானிகள் சேகரித்துள்ளனர்.

எவ்வளவு ஆழத்தில் உள்ளது தெரியுமா?
நீர்வளத்துடன் இருக்கும் இந்தப் பகுதியில் உள்ள பனிக்கட்டிகளை எடுக்க ராட்சஸ இயந்திரங்கள் எதுவும் தேவையில்லை என்றும், வெறும் மணல் வாரும் மண்வெட்டி இருந்தால் மட்டும் போதுமானது என்று விஞ்ஞானிகள் தங்களின் புதிய ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர். நீர் பனிக்கட்டிகள் மணல் போன்ற பொருளிற்கு கீழே சில சென்டிமீட்டர் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

குடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் தேடும் திட்டம்
செவ்வாய் கிரகத்தில் மனிதர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் ராக்கெட் எரிபொருள் தேடும் திட்டத்தை 'இன் சிட்டு ரெஸோர்ஸ் யுட்டிலைசேஷன் (in situ resource utilization)' என்ற பெயரின் கீழ் நாசா தீவிர ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

பல்வேறு விஞ்ஞானி குழுவுடன் தொடரும் ஆராய்ச்சி
இந்த திட்டத்தின் கீழ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள இந்த நீர்வளம் கொண்ட பகுதி நிச்சயம் எதிர்காலத்தில் பயனுள்ளதாய் இருக்குமென்று நாசா தெரிவித்துள்ளது. இன்னும் செவ்வாய் கிரகம் பற்றிய பல தகவல்களை நாசா தொடர்ந்து பல்வேறு விஞ்ஞானி குழுக்களுடன் மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications