78 கிலோ குப்பையை விண்வெளியில் இருந்து தூக்கி போட்ட நாசா; இதோ வீடியோ!

|

என்னது? விண்வெளியில் இருந்து குப்பைகளை தூக்கி போட்டு விட்டதா? அப்போது அது பூமியில் வந்து விழுமா? ஏன் இப்படி செய்தது? அந்த குப்பை பையில் என்னென்ன குப்பைகள் உள்ளன? இப்படி உங்களுக்குள் பல நியாயமான கேள்விகள் எழலாம்.

குறிப்பாக "இப்படி செய்ய நாசாவிற்கு அதிகாரம் உண்டா?" என்கிற கேள்வி எழலாம்!

"அங்கேயும்" குப்பை கொட்ட ஆரம்பித்து விட்டார்களா?

ஆம்! ஆனால் இது நேற்றோ, இன்றோ நடக்கும் கதை அல்ல. பல ஆண்டுகளாகவே நடக்கிறது. எனவே விண்வெளியில் "குப்பைகளை கொட்ட" நாசாவிற்கு அதிகாரம் உண்டா? இஸ்ரோவிற்கு அதிகாரம் உண்டா என்கிற கேள்விக்கே இங்கே இடமே இல்லை.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தை சொன்னால், உங்களுக்கு இன்னும் நன்றாக புரியும்.

கடந்த ஜனவரி 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, பூமியின் சுற்றுப்பாதையில், 128 மில்லியனுக்கும் அதிகமான 1 சென்டி மீட்டர் நீளமுள்ள குப்பைகளும், சுமார் 900,000-க்கும் அதிகமான 1 - 10 சென்டி மீட்டர் நீளமுள்ள குப்பைகளும், தோராயமாக 34,000 க்கும் மேலான 10 சென்டி மீட்டர் நீளமுள்ள குப்பைகளும் உள்ளன.

இப்படியாக விண்வெளி, கடந்த பல ஆண்டுகளாவே வளர்ச்சிகளாலும், குப்பைகளாலும் நிரம்பி உள்ளது.

விண்வெளி குப்பைகள் என்றால் என்ன? அவைகள் பூமியின் மேல் வந்து விழுமா?

விண்வெளி குப்பைகள் என்றால் என்ன? அவைகள் பூமியின் மேல் வந்து விழுமா?

செயல் இழந்த ஒரு பெரிய செயற்கைகோள் முதல் ராக்கெட்டில் இருந்து விழுந்த ஒரு சின்ன பெயிண்ட் பிளெக்ஸ் வரை எல்லாமே விண்வெளி குப்பைகள் தான்.

ஸ்பேஸ் ஜங்க்ஸ் (Space Junks) அல்லது ஸ்பேஸ் டெப்ரிஸ் (Space Debris) என்றும் அழைக்கப்படும் இந்த விண்வெளி குப்பைகள், 600 கிமீக்கு கீழே என்கிற சுற்றுப்பாதையில் இருக்கும் பட்சத்தில், அது சில ஆண்டுகளுக்குள் பூமிக்கு திரும்பும்.

ஒருவேளை 800 கிமீ உயரத்தில் இருந்தால், அதன் சுற்றுப்பாதை சிதைவுக்கான (Orbital Decay) நேரம் பெரும்பாலும் நூற்றாண்டுகளில் அளவிடப்படுகிறது.

அதுவே 1,000 கிமீக்கு மேல் இருந்தால், அந்த குப்பைகள் பொதுவாக ஆயிரம் ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பூமியை சுற்றிக்கொண்டே தான் இருக்கும். அதாவது பெரும்பாலான விண்வெளி குப்பைகளுமே பூமி மேல் வந்து விழாது என்று அர்த்தம்!

இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!இஷ்டத்துக்கு யூஸ் பண்ணாதீங்க! ஆதார் அட்டை குறித்து அரசாங்கம் கடும் எச்சரிக்கை!

நாசா தூக்கிப்போட்ட 78 கிலோ குப்பை!

நாசா தூக்கிப்போட்ட 78 கிலோ குப்பை!

இதுவரையிலாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்தபடி ஆராய்ச்சி செய்யும் விண்வெளி வீரர்கள், மாதக்கணக்காக தாங்கள் சேகரித்த குப்பைகளை சிக்னஸ் கார்கோ வாகனத்தின் (Cygnus cargo vehicle) வழியாகவே "வெளியேற்றி" வந்தனர்.

குறிப்பிட்ட சிக்னஸ் கார்கோ வாகனம், குப்பைகளால் நிரப்பட்டதும் அது விண்வெளி நிலையத்திலிருந்து டி-ஆர்பிட் (de-orbit) செய்யப்படும். பின் அது பூமியின் வளிமண்டலத்தில் நுழையும்போது முழு விண்கலமும் "திட்டமிடப்பட்ட தீ விபத்து"க்கு இரையாகும். அதாவது நாசாவின் பொறியாளர்கள் சிக்னஸை தீப்பிடிக்க செய்வார்கள்.

ஆனால் இனிமேல் சேகரிக்கப்படும் குப்பைகளை தூக்கிப்போட நாசா ஒரு புதிய வழிமுறையை கண்டுபிடுத்து, அதை சோதனையும் செய்து பார்த்துவிட்டது.

நேரடியாக ஐஎஸ்எஸ்-இல் இருந்தே தூக்கிபோடுவது!

நேரடியாக ஐஎஸ்எஸ்-இல் இருந்தே தூக்கிபோடுவது!

கடந்த ஜூலை 2 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தின் கமர்ஷியல் பிஷப் ஏர்லாக்கில் (Commercial Bishop Airlock) இருந்து சுமார் 172 பவுண்டு (அதாவது 78 கிலோ கிராம்) குப்பைகள் ஒரு 'ஸ்பெஷல் பேக்' (Special bag) மூலம் "நேரடியாக" விண்வெளிக்குள் வெளியேற்றப்பட்டது. (அந்த வீடியோ கட்டுரையின் முடிவில் உள்ளது)

இந்த தகவலை நானோராக்ஸ் (Nanoracks) ஒரு செய்திக்குறிப்பின் வழியாக உறுதிப்படுத்தி உள்ளது. விண்வெளியில் இருந்து குப்பைகளை அகற்றுவதற்காக இந்த ஏர்லாக் அமைப்புகளை உருவாக்கியது நானோராக்ஸ் தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த 78 கிலோ பையில் என்னென்ன குப்பைகள் உள்ளன?

அந்த 78 கிலோ பையில் என்னென்ன குப்பைகள் உள்ளன?

ஐஎஸ்எஸ்-இல் இருந்து வெளியேற்றப்பட்ட 78 கிலோ குப்பையில் பயன்படுத்தப்பட்ட நுரை (Used foam), பேக்கிங் பொருட்கள், கார்கோ டிரான்ஸ்பர் பைகள், அலுவலக பொருட்கள், குழுவினரின் சுகாதார பொருட்கள் மற்றும் குழுவினரின் ஆடைகள் இருப்பதாக நானோராக்ஸ் பிரதிநிதிகள் தெரிவித்து உள்ளனர்.

அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?அப்போ இவ்ளோ வருஷம் Windows 98-ஐ வச்சி தான் Mars-ல தண்ணீ தேடுனீங்களா?

இந்த புதிய வழியால் என்ன நன்மை?

இந்த புதிய வழியால் என்ன நன்மை?

இந்த புதிய கழிவு அகற்றல் அமைப்பின் (waste disposal system) மூலம், ஐஎஸ்எஸ் குழுவினர் 600 பவுண்டுகள் வரையிலான குப்பைகளை கொள்கலனில் (container) நிரப்ப முடியுமாம். ஒரு கட்டத்தில் அது விண்வெளி நிலையத்தில் இருந்து "வெளியிடப்பட்ட" பிறகு மீண்டும் அந்த ஏர்லாக் காலியாகுமாம்.

இதுதவிர்த்து, இந்த "புதிய சுற்றுப்பாதை கழிவுகளை அகற்றும் தொழில்நுட்ப சோதனை" குறித்து வேறெந்த தகவலும் பகிரப்படவில்லை. ஆனால் இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்ததாக நாசாவின் ஜான்சன் விண்வெளி மையத்துடன் இணைந்து செயல்பட்ட நானோராக்ஸ் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு முன் இதுபோல் நடந்துள்ளதா?

இதற்கு முன் இதுபோல் நடந்துள்ளதா?

"இதுவே முதல் முறை!" என்று நாசா கூறினாலும் கூட, 1970 கள் மற்றும் 1980 களில் சோவியத் சல்யுட் விண்வெளி நிலையங்களில் இருந்து "இதுபோன்ற" குப்பை பைகள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டன என்பதே உண்மை!

Photo, Video Courtesy: NASA, Voyeger Space

Best Mobiles in India

English summary
NASA throws out 78 Kg Garbage in Space Video Released

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X