விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட முதல் 8K வீடியோ.!

சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்த கேமராவை கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் கார்கோ ரீசப்ளை மிஷன் விண்கலன் சுமந்து சென்றன.

|

நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி அமைப்பு இணைந்து சர்வதேச விண்வெளி மையத்தில்(International Space Station - ISS) உள்ள விண்வெளி வீரர்கள் பற்றிய புதிய வீடியோ ஒன்றை தயாரித்துள்ளனர். ஆனால் இது நாம் ஏற்கனவே பார்த்த சாதாரண வீடியோக்களை போல இல்லை. இந்த வீடியோ 8k அல்ட்ரா ஹை டெபனிசன் தரத்தில் படம்பிடிக்கப்பட்ட முதல் வீடியோ ஆகும். ஹீலியம் 8k கேமராவில் இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது.

விண்வெளியில் இருந்து அனுப்பப்பட்ட முதல் 8K வீடியோ.!
சர்வதேச விண்வெளி மையத்திற்கு இந்த கேமராவை கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் கார்கோ ரீசப்ளை மிஷன் விண்கலன் சுமந்து சென்றன. இந்த வீடியோ மூலம் சர்வதேச விண்வெளி மையத்தில் விண்வெளி வீரர்கள் எப்படி பணியாற்றுகின்றனர், எப்படி ஆய்வுகளை நடத்துகின்றனர் என்பது காண்பிக்கப்படுகிறது. இவ்வீடியோவில் காண்பிக்கப்படும் பல்வேறு ஆய்வுகளில், மரபணு தொடர்கள் மூலம் விண்வெளி மையத்தில் உள்ள நுண்ணுயிரிகளை கண்டறியும் பெஸ்ட் இன்வெஸ்டிகேசன், விண்வெளி மற்றும் பூமியில் தாவரங்கள் வளரும் ஒப்பீடு, பல்வேறு துகள்களுக்கு இடையேயான மாறக்கூடிய விசைகளை அடிப்படையாக கொண்ட BCAT-CS ஆய்வு போன்றவையும் அடக்கம்.


"விண்வெளி மைய ஆய்வுகளுக்கான பார்வையாளர்களுக்கு ஈடுபாடு ஏற்படுத்தும் எங்கள் திறனை மேம்படுத்தும் வகையில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் நாங்கள் மிகுந்த உற்சாகமாகிறோம். இமேஜினரி பெடிலிடி ஏற்படும் ஒவ்வொரு மேம்பாடும் பூமியில் உள்ள மனிதர்களுக்கு விண்வெளி அனுபவத்தை அருகாமையில் தருவதுடன், மனிதர்களின் வாழ்வை மேம்படுத்தும் வகையில் விண்வெளிக்கலம் என்ன செய்கிறது மற்றும் பிரபஞ்சத்தை முழுவதுமாக அறிந்துகொள்ளவும் அனுமதிக்கிறது"என்கிறார் துணை திட்ட விஞ்ஞானி டேவிட் ப்ராடி.

முன்னதாக இரு நீர்த்துளிகள் விண்வெளியில் இணைவது, உணவு நிறமூட்டல் உள்ளிட்ட பல ஆச்சர்யமூட்டும் 4k வீடியோக்களை நாசா வெளியிட்டது. தற்போது வெளியிடப்போகும் 8k வீடியோவை உலகிலுள்ள பலர் பார்க்கமுடியாது ஏனெனில் பல்வேறு திரைகளில் 8k வீடியோக்களை திரையிடும் வசதி இன்னும் இல்லை.

அதேசமயம் நாசா அதன் பெர்மி காமா-ரே ஸ்பேஸ் டெலஸ்கோப்-ன் 10வது ஆண்டுவிழாவை சமீபத்தில் கொண்டாடியுள்ளது. மேலும் தனது 21 புதிய காமாரே விண்மீன்களுக்கு காமிக்ஸ் கதாபாத்திரங்களின் பெயரை சூட்டியுள்ளது. அதில் ஹல்க், காட்ஜில்லா என பெயரிடப்பட்டது ஒன்றும் அடக்கம்.


"ஒளியின் வலுவான வடிவம் தான் காமா கதிர்கள்" எனக்கூறியுள்ள நாசா, ஒளியை சரியான சூழ்ந லையில் தேவையான அளவு காமா கதிர்களாக ஆச்சர்யமூட்டும் வகையில் மாற்றம் செய்ய முடியும்

எனவும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA and the ESA send the first 8K video from space: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X