“நீல் ஆம்ஸ்ட்ராங் கொடுத்த பரிசு எங்கே?” அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் மீது பெண் வழக்கு.!

லாரா சிக்கோவின் தந்தை பெயர் டாம் முர்ரே. இவர் அமெரிக்க விமானப் படையில் விமான ஓட்டியாக இருந்தபோது நீல் ஆம்ஸ்ட்ராங்க் உடன் நீண்ட நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.

|

நீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்த, நிலவிருந்து எடுத்து வந்த மண் துகள்கள் அடங்கியை குப்பியை எடுத்துச் சென்றது தொடர்பாக, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவின் மீது ஒரு பெண் வழக்குத் தொடுத்துள்ளார். சந்திரனில் தரையிறங்கி நடந்த உலகின் முதல் மனிதன் என்னும் பெருமைக்கு உரியவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க். அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் 1969 ஆம் ஆண்டு இச்சாதனையை நிகழ்த்தினார்.

“நீல் ஆம்ஸ்ட்ராங்  கொடுத்த பரிசு எங்கே?” நாசா மீது பெண் வழக்கு.!

லாரா சிக்கோ (Laura Cicco) என்னும் பெண்மணிதான் நாசாவின் மீது வழக்குத் தொடுத்துள்ளவர். அமெரிக்காவின் ஃபெடரல் நீதி மன்றத்தில் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார். நிலவில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் துகள்களை ஒரு சிறு கண்ணாடிக் குப்பியில் அடைத்து நீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்ததாக இவர் குறிப்பிட்டுள்ளார். லாரா சிக்கோவின் தந்தையின் நெருங்கிய நண்பராக இருந்தவர் நீல் ஆம்ஸ்ட்ராங்க் என வாசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

 நண்பரின் மகளுக்குப் பரிசு

நண்பரின் மகளுக்குப் பரிசு

லாரா சிக்கோவின் தந்தை பெயர் டாம் முர்ரே. இவர் அமெரிக்க விமானப் படையில் விமான ஓட்டியாக இருந்தபோது நீல் ஆம்ஸ்ட்ராங்க் உடன் நீண்ட நாட்கள் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார். 1970 ஆம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங்க் தன்னுடைய நண்பரின் மகளான லாரா சிக்கோவிடம் சந்திரனில் இருந்து கொண்டு வந்த துகள்கள் அடங்கிய குப்பியைப் பரிசாகக் கொடுத்துள்ளார். அப்பொழுது லாராவுக்கு வயது 10.

விண் வெளிப் பொருட்களும் அமெரிக்கச் சட்டமும்

விண் வெளிப் பொருட்களும் அமெரிக்கச் சட்டமும்

தற்போது வழக்குத் தொடுத்துள்ள லாரா சிக்கோ, நாசா நிறுவனம் தனிநபர்களிடம் இருந்து சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் எந்தப் பொருட்களும் தனிநபர்களிடம் இருந்தால் அதனைக் கைப்பற்றும் வழக்கம் கொண்டது. எனவே. தன்னிடமிருந்து பரிசுக் குப்பியையும் எடுத்துச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிப்பதாகக் குற்றம் சுமத்தி வழக்குத் தொடுத்துள்ளார்.

சட்டப்பூர்வமான உரிமை

சட்டப்பூர்வமான உரிமை

அமெரிக்கக் குடிமக்கள் சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட பொருட்களை வைத்திருக்கக் கூடாது என எந்தச் சட்டமும் தடுக்கவில்லை. எனவே, லாரா சிக்கோ நீல் ஆம்ஸ்ட்ராங்க் தனக்குப் பரிசாகக் கொடுத்த பொருளை வைத்திருப்பதற்கு சட்டப்படி முழு உரிமையும் பெற்றவர் என லாராவின் வழக்கறிஞர் வாதிடுகிறார்.

நிலவின் துகள்கள்தான் என உறுதி

நிலவின் துகள்கள்தான் என உறுதி

லாரா சிக்கோ வைத்திருந்த குப்பியிலிருந்த மண் துகள் சந்திரனில் இருந்து எடுத்துவரப்பட்ட மண் துகள்களை ஒத்திருந்ததாக அதனை ஆய்வு செய்த அறிவியல் அறிஞர்கள் கருதுகின்றனர்.

லாரா சிக்கோவின் வாதம்

லாரா சிக்கோவின் வாதம்

இதற்கு முன்னர், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த வயதான பெண்மணி ஒருவரிடமிருந்து நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட நினைவுச்சின்னம் ஒன்றை நாசா எடுத்துச் சென்றுவிட்டது. இது அப் பெண்மணிக்கு, விண்வெளி ஆய்வுத் திட்டப் பொறியாளராக இருந்த அவருடைய கணவர் பரிசாகக் கொடுத்திருந்தது. என்கின்ற விவரத்தையும் லாரா சிக்கோ நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே தன்னுடைய பரிசுப் பொருளையும் நாசா எடுத்துச் சசென்றிருக்க வாய்ப்புள்ளதாக லாரா சந்தேகிக்கிறார்.

இந்த வழக்குத் தொடர்பாகக் கருத்துக் கேட்ட போது, " இது தொடா்பாகக் கருத்துச் சொல்வது பொருத்தமாக இருக்காது" என நாசாவின் செய்தித் தொடர்பாளர் மறுத்து விட்டார்.

நீல் ஆம்ஸ்ட்ராங்க் உதிர்த்த பொன் மொழிகள்

நீல் ஆம்ஸ்ட்ராங்க் உதிர்த்த பொன் மொழிகள்

1969 ஆம் ஆண்டு, நீல் ஆம்ஸ்ட்ராங்க், ஆல்டிரின், மைக்கேல் காலின்ஸ் ஆகிய மூவரும் அப்போல்லோ 11 லூனார் என்னும் விண்வெளி ஸ்பேஸ் கிராஃப்ட் மூலமாக சந்திரனுக்குச் சென்றனர். நீல் ஆம்ஸ்ட்ராங்க் நிலவின் மேற்பரப்பில் இறங்கி இரண்டரை மணி நேரம் உலவினார். நிலவின் மேற்பரப்பில் முதன் முதலாக எட்டு வைத்த மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங்க் உதிர்த்த வார்த்தைகள் அழியாப் புகழ்ப் பெற்று விளங்குகின்றன. " நிலவின் மேற்பரப்பில் நான் எடுத்து வைக்கும் இந்தச் சிறிய எட்டு, மனித சமூகத்தைப் பொறுத்த வரை மிகப் பெரும் பாய்ச்சல் ஆகும் ("That's one small step for man, one giant leap for mankind.)" என்னும் வார்த்தைகள் அவருடைய சரித்திர சதனையை விளக்கி நிற்கின்றன.

Best Mobiles in India

English summary
NASA Sued by Woman Over Lunar Dust Gifted by Neil Armstrong : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X