மரண பீதியில் அமெரிக்கா.. "இது" நடக்குற வரைக்கும் பேச்சு மூச்சு இருக்காது!

|

சீனாவோ? ரஷ்யாவோ? யார் கண் வைத்தார்கள் என்று தெரியவில்லை!

ஒட்டுமொத்த உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் கீழ் அமெரிக்கா செய்த ஒரு முயற்சியானது, ஆரம்பத்திலேயே சறுக்கலில் முடிய.. இரண்டாவது முயற்சியோ, பெரிய ஆபத்தில் முடிய பார்த்தது!

அதென்ன முயற்சி?

அதென்ன முயற்சி?

ஆபத்தில் முடிய பார்த்த அந்த முயற்சி - அமெரிக்காவின் ஆர்டெமிஸ் 1 மிஷன் (Artemis 1 Mission) ஆகும்.

அறியாதோர்களுக்கு ஆர்டெமிஸ் (Artemis) என்பது, நிலவை ஆய்வு செய்வதற்காக, ரோபோட் மற்றும் மனிதர்களை சந்திர கிரகத்திற்கு அனுப்ப உள்ள ஒரு விண்வெளி திட்டமாகும்!

யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை யாருகிட்ட? மீண்டும் ஒருமுறை உலக நாடுகளை "வாய் பிளக்க" வைக்கும் இந்தியா!

மரண பீதியில் அமெரிக்கா!

மரண பீதியில் அமெரிக்கா!

ஆர்டெமிஸ் திட்டத்தின் கீழ் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (European Space Agency), ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சி (, Japan Aerospace Exploration Agency) மற்றும் கனடியன் ஸ்பேஸ் ஏஜென்சி (Canadian Space Agency) ஆகிய மூன்று "கூட்டாளர்கள்" இருந்தாலும் கூட..

இது முழுக்க முழுக்க அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் தலைமையின் கீழ் நடக்கும் ஒரு திட்டமாகும்; எனவே தான் அமெரிக்கா கொஞ்சம் பீதியாக இருக்கிறது!

பீதியாகும்படி என்ன நடந்தது?

பீதியாகும்படி என்ன நடந்தது?

நாசாவின் ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஆனது சில வாரங்களுக்கு முன்பே விண்ணில் செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக.. இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால் எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட கசிவு காரணமாக.. அதுவும் ஒருமுறை அல்ல, திட்டமிடப்பட்ட இரண்டு முறையுமே ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை ஏவும் முயற்சி கைவிடப்பட்டது.

100-க்கு 99 பேர்.. இந்த போட்டோவில் தெரிவது என்னவென்று கண்டுபிடிக்க மாட்டாங்க!100-க்கு 99 பேர்.. இந்த போட்டோவில் தெரிவது என்னவென்று கண்டுபிடிக்க மாட்டாங்க!

3-வது முறை.. வெற்றிகரமாக ஏவப்படுமா?

3-வது முறை.. வெற்றிகரமாக ஏவப்படுமா?

இரண்டு தோல்விகளுக்கு பிறகு, ஆர்டெமிஸ் 1 ராக்கெட் ஆனது வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதில் எந்த சிக்கலும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக.. நாசா தனது புதிய ராக்கெட்டுக்கான எரிபொருளை நிரப்பும் செயல்முறையை "முன்கூட்டியே" சோதனை செய்து பார்த்துள்ளது.

வேதனையில் முடிந்ததா.. அந்த சோதனை ?

வேதனையில் முடிந்ததா.. அந்த சோதனை ?

இல்லை - வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆர்ட்டெமிஸ் 1 ​​மிஷனின் லான்ச் டைரக்டர் ஆன சார்லி பிளாக்வெல்-தாம்சன், இந்த சோதனைக்காக நாங்கள் நிர்ணயித்த அனைத்து நோக்கங்களையும் எங்களால் நிறைவேற்ற முடிந்தது என்று கூறி உள்ளார்

ஆர்டெமிஸ் மிஷனில் எந்த தவறும் நடந்துவிட கூடாது என்பதில் நாசா மிகவும் கவனமாக இருக்கிறது. ஏனென்றால் இப்போதைக்கு வேண்டுமானால் இது ஒரு ஆளில்லாத (மனிதர்கள் இல்லாத) விண்வெளி பயணமாக இருக்கலாம்.

செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?செவ்வாய் கிரகத்தில் கேட்ட சத்தம்.. அதுவும் 4 முறை கேட்டது! என்னது அது?

ஆனால் எதிர்காலத்தில்?

ஆனால் எதிர்காலத்தில்?

இதே ஆர்டெமிஸ் மிஷனின் கீழ், மனிதர்கள் "மீண்டும்" சந்திர கிரகத்திற்கு அனுப்பப்பட உள்ளனர்.

ஆம்! ஆர்ட்டெமிஸ் 2 ஆனது விண்வெளி வீரர்களை நிலவிற்கு அழைத்து செல்லும். அதே சமயம் ஆர்ட்டெமிஸ் 2 ஆனது சந்திர மண்ணில் கால் வைக்கும் முதல் பெண்மணியை சுமந்து செல்லும்!

போட்டிக்கு சீனாவும் வருகிறது!

போட்டிக்கு சீனாவும் வருகிறது!

நாசாவை போலவே, அமெரிக்காவின் முக்கிய போட்டியாளராக கருதப்படும் சீனாவும் கூட, சந்திர கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளில் தீயாக வேலை செய்து வருகிறது!

சமீபத்தில், சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான சிஎன்எஸ்ஏ (China National Space Administration -CNSA) ஆனது, நிலவில் இருந்து கொண்டுவரப்பட்ட மாதிரிகளில் முற்றிலும் புதிய கனிமத்தை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்திருந்தது.

லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத லண்டன் அருகே விழுந்த விண்கல்லுக்குள் இருந்த நம்ப முடியாத "பொருள்"!

அதுமட்டுமா? இன்னொரு

அதுமட்டுமா? இன்னொரு "வேலை"யையும் பார்த்தது!

அமெரிக்காவை போலவே சீனாவும் கூட நிலவில் தரை இறங்க திட்டமிட்டுள்ளது. அதற்காக சீனா, நிலவில் மொத்தம் 10 இடங்களையும் தேர்வு செய்துள்ளது.

அந்த இடத்தில் தான் சீனா தன் "வேலை"யை காட்டி உள்ளது. அது என்னவென்றால், நாசா தேர்வு செய்து வைத்துள்ள சில இடங்களையும், சீனா தன் பட்டியலில் சேர்த்துள்ளது!

இப்படியெல்லாம் குடைச்சல்கள் வந்தால்.. அமெரிக்காவால் எப்படி நிம்மதியாக விண்வெளி ஆராய்ச்சியை நிகழ்த்த முடியும்? நீங்களே சொல்லுங்களேன்!

Photo Courtesy: NASA, Wikipedia

Best Mobiles in India

English summary
NASA Successfully Done Fuel Test Artemis 1 Moon Rocket to Launch on September 27

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X