கொரோனா தொற்று காரணமாகப் பூமியில் ஏற்பட்ட 'அந்த' மிகப்பெரிய மாற்றம்.. நாசா விஞ்ஞானிகள் மகிழ்ச்சி..

|

கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இதன் மூலம் மக்கள் பெரிதளவில் தொற்று எதுவும் ஏற்படாமல் பாதுகாக்கப்பட்டனர். அதை விடப் பூமியில் ஏகப்பட்ட மாற்றங்கள் இந்த ஊரடங்கு காலத்தில் நிகழ்ந்துள்ளது என்பதை நாசா தற்போழுது குறிப்பிட்டுக் கூறியுள்ளது. கொரோனா மூலம் பூமிக்கு நிகழ்ந்த மிகப்பெரிய நன்மை 'இது' என்று நாசா தற்பொழுது இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டியுள்ளது.

பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

பூமியில் ஏற்பட்ட மிகப்பெரிய மாற்றம்

கொரோனா தொற்றுநோய் பரவல் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையைக் கிட்டத்தட்ட ஒரு வருடமாகப் பதித்து வருகிறது. உலகம் முழுக்க உள்ள பல நாடுகளிலும் ஆரம்ப காலத்தில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, இப்பொழுது மக்கள் சமூக இடைவெளியுடன், பாதுகாப்பு முக கவசங்களுடன் ஆள் அடையாளம் தெரியாமல் சுற்றி வருகின்றனர்.

கொரோனா பூமிக்கு செய்த நன்மை

கொரோனா பூமிக்கு செய்த நன்மை

மனிதர்களின் இயல்புநிலையை பாதிக்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த காலகட்டத்தில் பூமிக்கு சில நன்மைகளை கொரோனா செய்துள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் சமீபத்திய ஆய்வின் மூலம் இந்த தகவல் தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தான் முக்கிய காரணமா?

இது தான் முக்கிய காரணமா?

பூமிக்கு நிகழ்ந்த இந்த மிகப்பெரும் நன்மை குறித்து இயற்கை ஆர்வலர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அப்படி கொரோனா பூமிக்கு என்ன நன்மையைச் செய்தது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம். நாசா குறிப்பிட்டுக் கூறியிருக்கும் நன்மை நிகழ முக்கிய காரணமே மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரியளவில் மாற்றம் காண்ட காற்று மாசு

பெரியளவில் மாற்றம் காண்ட காற்று மாசு

மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்பட்டதினால் வாகனப் போக்குவரத்து கணிசமாகக் குறைந்தது. இதன் காரணமாக உலகம் முழுக்க வாகன போக்குவரத்தினால் ஏற்படும் காற்று மாசு என்பது வழக்கத்தை விடப் பெரியளவில் மாற்றம் கொண்டுள்ளதை நாசா தற்பொழுது கண்டுபிடித்துள்ளது.

எரிபொருள் பயன்பாடு உலகளவில் குறைந்துள்ளதா?

எரிபொருள் பயன்பாடு உலகளவில் குறைந்துள்ளதா?

குறிப்பாகப் பல நாடுகளிலும் இன்னும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது, இதனாலும் இன்னும் வாகன போக்குவரத்துக்கு அதிகரிக்காமல் இருக்கிறது என்று கூறப்படுகிறது. பூமியில் உள்ள காற்று மாசுபாடு என்பது கணிசமாகக் குறைந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. வாகனப் போக்குவரத்து குறைந்துள்ளதாலும், தொழிற்சாலைகள் முடங்கியிருந்ததாலும் எரிபொருள் பயன்பாடு உலகளவில் குறைந்துள்ளது.

பூமியில் நைட்ரஜன் டையாக்ஸைட் வெளியேற்றம் குறைப்பு

பூமியில் நைட்ரஜன் டையாக்ஸைட் வெளியேற்றம் குறைப்பு

இதன் காரணமாக உலகளவில் உள்ள நைட்ரஜன் டையாக்ஸைட் வெளியேற்றம் கிட்டத்தட்ட 20 சதவீதம் குறைந்துள்ளதாக நாசா ஆய்வாளர்கள் சமீபத்திய அறிகையில் குறிப்பிட்டுள்ளனர். மொத்தமாக 46 நாடுகளிலிருந்து கிடைத்த தரவுகளின் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்று நாசா கூறியுள்ளது. இந்த ஆய்வு நடத்தப்பட்ட 61 நகரங்களில் 50 நகரங்களில் நைட்ரஜன் டையாக்ஸைட் அளவு 20 முதல் 50 விழுக்காடு குறைந்துள்ளது.

நாசா ஆய்வுக் குழு வெளியிட்ட தகவல்

நாசா ஆய்வுக் குழு வெளியிட்ட தகவல்

நியூ யார்க் மற்றும் மிலன் ஆகிய நகரங்களில் உள்ள காற்றின் நைட்ரஜன் டையாக்ஸைட் அளவுகள் 45 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக உலகம் முழுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்குகளால் காற்றின் தரம் தற்பொழுது உயர்ந்துள்ளது என்றும், இதனால் காற்றில் பாசிட்டிவான தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றும் நாசா ஆய்வுக் குழு தலைவர் கிறிஸ்டொபர் கெல்லர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nasa Study Shows How Covid Lockdown Reduced Global Pollution Level By 50 Percentage : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X