வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும், ஒரு காலத்தில் நிலவு..!

|

நாசாவின் சமீபத்திய ஆய்வின் படி, மூன்று முதல் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர், சந்திரன் ஆனது தற்போது இருப்பதை போலின்றி தாக்கல் உரிய சூழ்நிலையை கொண்டிருந்ததாக அறியப்பட்டுள்ளது.

வேறு வழியில்லை நம்பித்தான் ஆகவேண்டும், ஒரு காலத்தில் நிலவு..!

அதாவது நிலவு ஒரு காலத்தில் தீவிர எரிமலை செயல்திறன் கொண்டிருந்ததாகவும், அவைகள் உருகிய வாயுக்களை நிலவின் மேற்பரப்பில் உமிழ்ந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

இருண்ட சூழலில் மூழ்கியிருந்துள்ளது

இருண்ட சூழலில் மூழ்கியிருந்துள்ளது

இந்த வெடிப்புகள், கார்பன் மோனாக்சைடு போன்ற வாயு கலவைகளை எடுத்துசென்று, சந்திரனை சுற்றிய ஒரு நிலையில்லாத தட்பவெப்ப சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இதன்விளைவாக சுமார் 70 மில்லியனுக்கும் அதிகமான ஆண்டுகளுக்கு முன்பு, நிலவு ஒரு இருண்ட சூழல் கொண்ட கடந்த காலத்தில் மூழ்கியிருந்துள்ளது என்பதை நாசா கண்டுபிடித்துள்ளது.

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்.!

3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர்.!

எர்த் அண்ட் பிளானட்டரி சயின்ஸ் லெட்டர்ஸ் ஜர்னலில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வானது, நிலவின் வளிமண்டலமானது சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் அடர்த்தியாக இருந்ததாகவும், அதில் சல்பர் (கந்தகம்) மற்றும் தண்ணீரின் தடயங்கள் கூட இருந்திருக்கலாம் என்றும் கூறுகிறது.

எரிமலை குழம்பிலான கடற்பகுதி.!

எரிமலை குழம்பிலான கடற்பகுதி.!

சந்திரனின் உட்பகுதி சூடாக இருந்தின் விளைவாக எரிமலைகளின் வெடிப்பு ஒரு மிகப்பெரிய எரிமலை குழம்பிலான கடற்பகுதிகளை உருவாக்கி அதன் பின்னர் அது குளிர்ந்து நிலவின் மேற்பரப்பில் இன்று நாம் காணக்கூடிய இருண்ட கருங்கல் இணைப்புகளை உருவாக்கியுள்ளது.

ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான்.!

ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான்.!

இந்த ஆய்வின் முடிவு, நிலவின் மீதான நமது பார்வையை ஒட்டுமொத்த பார்வையையும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை. காற்றில்லாத, பாறைகள் நிறைந்த பிரதேசமாக காணப்படும் நிலவு ஒரு காலத்தில் தற்போது காணப்படும் செவ்வாய் கிரகம் போன்றதொரு சூழலில் சூழப்பட்டிருந்துள்ளது என்பதை ஏற்றுக்கொள்வது சற்று கடினம் தான். ஆனால் நமக்கு வேறு வழியில்லை, இதை நம்பித்தான் ஆக வேண்டும்.!

பூமியுடன் 3 மடங்கு அதிக நெருக்கம்.!

பூமியுடன் 3 மடங்கு அதிக நெருக்கம்.!

அம்மாதிரியான வளிமண்டலத்தை சந்திரன் கொண்டிருந்தபோது, தற்போது காணபப்டுவதை விட பூமியுடன் 3 மடங்கு அதிக நெருக்கத்தோடு இருந்துள்ளது. அப்படியானால் அது வானத்தில் கிட்டத்தட்ட 3 மடங்கு பெரியதாக காட்சியளித்திருக்கும்; ஆனால் இப்போதிருப்பதுபோல ரம்மியமாகவும், கண்களுக்கு குளிர்ச்சியானதாகவும் இருந்திருக்காது.

Best Mobiles in India

English summary
NASA study reveals something extraordinary about the history of our MOON. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X