நாசா, ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் இதர விண்வெளி நிறுவனங்களுக்கு ஆண்டு கட்டணம் 235000டாலர்! எதற்கு?

|

நாசா, ஈஎஸ்ஏ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் போன்ற விண்வெளி நிறுவனங்கள் செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதற்கு வருடாந்திர கட்டணம் வசூலிப்பதன் மூலம் வளர்ந்து வரும் விண்வெளி குப்பைகள் சிக்கலில் இருந்து தப்பலாம் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையி

கொலராடோ போல்டர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் விண்வெளி நிறுவனங்களிடம் இருந்து சுற்றுப்பாதை பயன்பாட்டுக் கட்டணங்களை வசூலிக்க சர்வதேச ஒப்பந்தம் தேவைப்படும் என்கின்றனர்.

மற்றும் விண்வெளி

சுற்றுப்பாதையில் உள்ள ஒவ்வொரு செயற்கைக்கோளுக்கும் வருடாந்திர கட்டணம் வசூலிப்பதன் மூலம், அவற்றை செலுத்திய நிறுவனங்கள் அவை தேவைப்படாதபோது அவற்றை அகற்ற ஊக்கத்தொகை வழங்கலாம் என்று இக்குழு கூறுகிறது.

செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளி குப்பைகள் உட்பட சுமார் 20,000க்கும் மேற்பட்ட பொருள்கள் பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் கூட்டமாக உள்ளன. மேலும் அந்பொருட்களுக்கு இடையிலான மோதல் ஆயிரக்கணக்கான சிறிய துண்டுகளை உருவாக்கக்கூடும்.

நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?நம்ம வீடு பிரமாண்டம் தான்: 32 இன்ச் ஸ்மார்ட் டிவி ரூ.15,000-க்கு கீழ்: எது சிறந்தது தெரியுமா?

தொழில்நுட்பம் அல்லது

விண்வெளி குப்பை சிக்கலைச் சமாளிப்பதற்கான செயல்திட்டங்கள், தொழில்நுட்பம் அல்லது நிர்வாகத்தில் கவனம் செலுத்தியுள்ளன. ஆனால் நிதி சலுகைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கட்டணத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கைக்கோள்களின் எண்ணிக்கையை குறைக்கும். அத்துடன் நிறுவனங்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்காக அதிக செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் இருந்து திரும்பப்பெறக்கூடும்.

பொதுவான வளமாகும்

"விண்வெளி ஒரு பொதுவான வளமாகும். ஆனால் நிறுவனங்கள் தங்கள் செயற்கைக்கோள்களை செலுத்தும்போது மற்ற நிறுவனங்களின் செயற்கைகோள்களின் மீது அது ஏற்படுத்தும் செலவைக் கணக்கிடுவதில்லை. செயற்கைக்கோள் விண்வெளி நிறுவனங்கள் தங்கள் ஏவுதல்கள் மற்ற ஆபரேட்டர்கள் மீது சுமத்தும் செலவுகளுக்கு நேரடியான காரணியாக இருக்கும் ஒரு கொள்கை எங்களுக்குத் தேவை ​​'என்று பொருளாதார வல்லுனர் மத்தேயு புர்கெஸ் கூறுகிறார்.

கட்டணங்கள், நேரடி

சுற்றுப்பாதை-பயன்பாட்டு கட்டணங்கள், நேரடி கட்டணம் அல்லது வர்த்தகம் செய்யக்கூடிய அனுமதிகளாக இருக்கலாம்.மேலும் அவை சுற்றுப்பாதை சார்ந்தவையாகவும் இருக்கலாம்.ஏனெனில் வெவ்வேறு சுற்றுப்பாதையில் உள்ள செயற்கைக்கோள்கள் மாறுபட்ட மோதல் அபாயங்களை உருவாக்குகின்றன.

மாதிரியில் முக்கியமானது

இதில் மிக முக்கியமானது, ஒவ்வொரு செயற்கைக்கோளின் கட்டணமும் மற்றொரு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் வைப்பதற்காக தொழில்துறைக்கு ஏற்படும் செலவை பிரதிபலிக்கும் வகையில் கணக்கிடப்படும் என்று புர்கெஸ் விளக்குகிறார்.

கூடுதல் மோதல் ஆபத்து மற்றும் விண்வெளி குப்பைகள் உற்பத்தியின் தற்போதைய மற்றும் எதிர்கால செலவுகள் ஆகியவை இதில் அடங்கும் செயற்கைக்கோளை செலுத்த ஆபரேட்டர்களின் முதலீடு தற்போதைக்கு முக்கிய காரணியாக இல்லை.


"எங்கள் மாதிரியில் முக்கியமானது என்னவென்றால், மற்ற ஆபரேட்டர்கள் மீது விதிக்கப்படும் மோதல் அபாயத்திற்கான செலவை செயற்கைக்கோள் ஆபரேட்டர்கள் செலுத்துகிறார்கள்" என்று இணை ஆசிரியர் டேனியல் காஃபின் கூறுகிறார்.

காலப்போக்கில் கட்டணம்

தூய்மையான சுற்றுப்பாதைகளின் மதிப்பு அதிகரிப்பதற்கு ஏற்ப காலப்போக்கில் கட்டணம் அதிகரிக்கும்.

ஆராய்ச்சியாளர்களின் மாதிரியில், உகந்த கட்டணம் ஆண்டுக்கு 14 சதவீதம் என்ற விகிதத்தில் உயர்ந்து, 2040 க்குள் ஒரு செயற்கைக்கோளுக்கான ஆண்டு கட்டணம் சுமார் 235,000 டாலர்களை எட்டும்.

Best Mobiles in India

English summary
NASA, SpaceX And Other Space Agencies Satellite Annual Fee Crosses 235000 Dollars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X