ஓங்கி அடிச்ச புயல்: விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ-பார்க்கவே பயங்கரமா இருக்கு.!

|

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை இயான் புயல் நேற்று முன்தினம் தாக்கியது. குறிப்பாக பல நகரங்களில் எங்கு பார்த்தாலும் ஒரே வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் மணிக்கு 150 மைல் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

இயான் புயல்

இயான் புயல்

இந்நிலையில் புளோரிடா மாகணத்தை புரட்டிப்போட்ட இயான் புயலின் தாக்கம் குறித்து நாசா அமைப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் நாசா வெளியிட்ட வீடியோ பயங்கரமாக இருக்கிறது என்றே கூறலாம்.

Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..Google இல் உங்க போன் நம்பர், முகவரி, புகைப்படம் வருகிறதா? இதை எப்படி நீக்குவது? கூகிளின் புதிய விதி இதான்..

மீட்புப் பணிகள்

மீட்புப் பணிகள்

அதேபோல் இந்த புயல் மீட்புப் பணிகளில் இதுவரை 7 ஆயிரம் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டுள்ளனர் என்று புளோரிடா மாகாண கவர்னர் ரான் டி சாண்டிஸ் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புயலின் விளைவாக புளோரிடா மாகாணத்தில் சுமார் 22 லட்சத்துக்கும் அதிகமான வீடுகள் இருளில் மூழ்கின.

இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?இனி பஸ் எங்க இருக்குனு தெரிஞ்சே கிளம்பலாம்.. MTC அறிமுகம் செய்த புதிய Chennai bus app.. எப்படி உபயோகிப்பது?

4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து

4 ஆயிரம் விமான சேவைகள் ரத்து

மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக 2.5 மில்லியன் மக்களை வெளியேறும்படி நகர நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதவிர வெர்ஜீனியா, வட கரோலினா, தென் கரோலினா மாகாணங்களிலும் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு தினங்களில் 4 ஆயிரம்விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!டிக்கெட்டே விற்கலாம் போல: தியேட்டர் தர அனுபவம்., அட்டகாச சோனி 4கே அல்ட்ரா எச்டி பிராவ்யா ஸ்மார்ட்டிவி அறிமுகம்..!

வீடியோ

இந்நிலையில் அமெரிக்காவின் நாசா நிறுவனம் ஆனது தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது இயான் புயலை கடக்கும் நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றைதான் நாசா அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?நாசா நிலவில் அமைக்கும் முதல் விண்வெளி நிலையம்.. நிலவுக்கு தண்ணீர் பூமியில் இருந்து தான் வந்ததா? உண்மை என்ன?

415 கிலோமீட்டர்

குறிப்பாக பூமியில் இருந்து சுமார் 415 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக நாசா கூறுகிறது. பின்பு இந்த வீடியோ வெளியாகி பலரையும் திகைக்க வைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும். தற்போது இந்த வீடியோவை 1.6 மில்லியன் மக்கள் பார்த்திருக்கின்றனர்
என்பது குறிப்பிடத்தக்கது.

பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..பூமியை விட 11 மடங்கு பெரிய கிரகம் இது தானா? அம்மாடியோவ் எவ்வளவு பெருசு! வீடியோ பார்த்து வியந்த மக்கள்..

ஜோ பைடன்

ஜோ பைடன்

அதேபோல் இந்தப்புயலால் புளோரிடா மாகாணமே நிலைகுலைந்து போய் உள்ளது. மேலும் இயான் புயலால் புளோரிடா மாகாணம் முழுவதும் கடும்
துன்பத்தில் ஆழ்ந்துள்ளது என்று அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் இந்தப்புயலால் கணிசமான உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என அவர்குறிப்பிட்டார்.

18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!18வயது சிறுவனின் அசத்தல் கண்டுபிடிப்பு: சைக்கிள் கவுன்டர் கருவி- பெட்ரோல் விலை உயர்ந்தா சைக்கிள் ஓட்டுவோம்!

வரலாற்று நிகழ்வு

வரலாற்று நிகழ்வு

மேலும் தேசிய வானிலை சேவை இயக்குனர் கென் கிரஹாம் இது குறித்து பேசுகையில், இது பல ஆண்டுகளுக்கு நாம் பேசும் புயலாக இருக்கும். இது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார். குறிப்பாக இந்த புயல் அதிக பாதிப்புகளை ஏற்படுத்திவிட்டது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Image Credits: Nasa

Best Mobiles in India

English summary
NASA shares video of Hurricane Ian taken from space: Watch video: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X