விண்வெளியில் குப்பை கொட்டிய விண்வெளிவீரர்! இன்ஸ்டாவில் வீடியோ போட்ட நாசா..

|

நாசா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளியில் குப்பையை கொட்டும் விண்வெளி வீரரின் வீடியோவை பகிர்ந்து, நெட்ஃபிக்ஸ்-ன் சுகாதார பிரபலமான மேரி கொண்டாவின் தாரகமந்திரத்தை ஒளிபரப்பியுள்ளது.

லூகா பர்மிடானோ

லூகா பர்மிடானோ

கடந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆல்பா மேக்னடிக் ஸ்பெக்ட்ரோமீட்டரை (ஏஎம்எஸ்) சரிசெய்யும் போது, விண்வெளி வீரரான லூகா பர்மிடானோ அகற்றிய உபயோகமில்லாத கவசத்தை விண்வெளியில் வீசுவதை அந்த வீடியோ காண்பிக்கிறது.

உபயோகமில்லாத கவசம்

உபயோகமில்லாத கவசம்

"இந்த உபயோகமில்லாத கவசம் மகிழ்ச்சியை தூண்டியதா? சில நேரங்களில் நீங்கள் இனிமேலும் உங்களுக்கு பயன்படாதவற்றை இப்படி விட்டுவிட வேண்டும்" என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தான பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது.

அண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா! பலே திட்டம்..அண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா! பலே திட்டம்..

அந்த கவசத்தை

பர்மிட்டானோ அந்த கவசத்தை அப்படியே விண்வெளியில் விட்டுவிட்ட நிலையில், அது விண்கலத்தில் இருந்து அழகாக மிதந்தது கொண்டிருக்கிறது. அது இறுதியில் மேல் வளிமண்டலத்தில் சிதைந்துவிடும்.

ஐரோப்பிய விண்வெளி

அவரும், அவரது சக விண்வெளி வீரரான ட்ரூ மோர்கனும் இன்று காலை மீண்டும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே உள்ள சாதனத்தை பழுதுபார்க்கத் தொடங்கினர். இந்த சாதனம் 148 பில்லியனுக்கும் அதிகமான காஸ்மிக் கதிர் நிகழ்வுகளை ஆய்வு செய்துள்ளது.

ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் இத்தாலிய விண்வெளி வீரர் பர்மிடானோ மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் தற்போதைய எக்ஸ்பெடிஷன் 61 க்கு கட்டளையிடும் நாசாவின் மோர்கன் ஆகிய இருவரும், நவம்பர் 15 அன்று ஏ.எம்.எஸ் பழதுபார்க்கும் முதல் நிகழ்வின் விண்வெளி நடைபயணத்தை நிகழ்த்தினர்.

அந்த விண்வெளி நடை ஆறு மணி நேரம் 39 நிமிடங்கள் நீடித்தத நிலையில், 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள காஸ்மிக்-ரே டிடெக்டரில் தோல்வியுற்ற குளிரூட்டும் முறையை சரிசெய்ய அதிக பணிகள் இருப்பதால் இன்னும் குறைந்தது நான்கு முறை இந்த நிகழ்வு தேவைப்படும்.

"இந்த அற்புதமான பரிசோதனையில் திறந்த-இதய அறுவை சிகிச்சையாகக் (Opeb heart surgery) கருதக்கூடியதை நாங்கள் செய்யப் போகிறோம்" என்று தனது 15வது எக்ஸ்ட்ரா வெகிகுலர் ஆக்டிவிடி (ஈ.வி.ஏ) க்கு முன்னதாக பர்மிட்டானோ கூறினார்.

ஈ.வி.ஏ மூலம்

இது இந்த ஈ.வி.ஏவை மிகவும் சவாலானதாக மாற்றும் விஷயங்களின் கலவையாகும். உங்களுக்கு நிச்சயமாக அணுகல் சிக்கல் உள்ளது . ஏ.எம்.எஸ் என்ற தொலைதூரப் பகுதியில் கைப்பிடிகள் அல்லது இருப்பிடங்கள் இல்லாமல் உள்ளது. ஏனெனில் இது ஈ.வி.ஏ மூலம் சரிசெய்யக்கூடிய வகையில் கட்டமைக்கப்படவில்லை. "எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கருவியை சென்றடைந்து பாதுகாப்பு கவசத்தை அகற்ற துவங்குவதற்கு அவர்களுக்கு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் பிடித்தது. ஒரு சமயத்தில் ஒருவரால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.சில தசாப்தங்களுக்கு முன்னர் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பழுதுபார்த்ததிலிருந்து இந்த விண்வெளிப் நடைகளை மிகவும் கடினமானதாக நாசா கருதுகிறது. இன்று காலை இக்குழு மற்றொரு ஆறு மணி நேரம் 30 நிமிட விண்வெளி நடை பயணத்தைத் தொடங்கியது. இது இந்த ஆண்டின் பத்தாவது நடைபயணமாகும்.

7.5 டன் எடையுள்ள

7.5 டன் எடையுள்ள இந்த ஏ.எம்.எஸ், சுற்றுப்பாதை ஆய்வகத்தின் ஒரு பக்கத்தில் அமைந்துள்ளது மற்றும் இது 2011 முதல் இருண்ட பொருட்களை பற்றி ஆராய்ச்சி செய்கிறது.

டிசம்பர் 2 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மூன்றாவது விண்வெளி நடையில், புதிய பம்ப் தொகுதியை இணைப்பது மற்றும் புதிய குளிரூட்டும் குழாய்கறை மாற்றியமைப்பது ஆகியவை அடங்கும்.

news source: dailymail.co.uk

Best Mobiles in India

English summary
NASA shares video ISS astronaut tossing debris shield depths space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X