நாசா வெளியிட்டுள்ள வியாழன் கிரகத்தின் அற்புதமான தகவல்கள்

|

பூமி கொந்தளிப்பில் இருந்தாலும், நாசா அவ்வப்போது சூரிய குடும்பத்தில் உள்ள அபாரமான, அற்புதமான படங்களை பகிர்ந்து வருகிறது என்பது தெரிந்ததே. இதனால் நாம் இருந்த இடத்தில் இருந்தே வெகுதூரம் பயணிக்க முடிகிறது.

 நாசாவின் ஜூனோ

டேட்டாவின் அடிப்படையில் நாசா சமீபத்தில் அதிர்ச்சியூட்டும் வியாழன் குறித்த ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளது. ஆச்சரியப்படுவதற்கு இதை விட சிறந்த உதாரணம் எதுவுமில்லை என்று தான் எண்ண தோன்றுகிறது.

 வளிமண்டலத்தின் சுழல்கள்

வளிமண்டலத்தின் சுழல்கள்

நாசாவின் ஜூனோ விண்கலத்திலிருந்து. பிரம்மாண்டமான வியாழன் கிரகத்தின் வளிமண்டலத்தின் சுழல்கள் மற்றும் அதன் உன்னதமான பட்டைகள் மற்றும் கோடுகள் ஆகியவை பிரபஞ்சத்தின் இன்னொரு வடிவை இந்த புகைப்படம் காட்டுகிறது.

எல்லா புகழும் இந்தியாவுக்கே., உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக உருவெடுத்த Xiaomi!எல்லா புகழும் இந்தியாவுக்கே., உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக உருவெடுத்த Xiaomi!

இது படங்களை

ஜூனோகாம் கேமிராவில் இருந்து 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி அன்று எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வியாழன் கிரகத்தின் ஆச்சரியமான ஒன்றாகும். விஞ்ஞானி கெவின் எம். கில் என்பவர் தான் இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படங்களை எடுத்திருந்தார். இது படங்களை பார்க்கும்போது, ஜூனோ வியாழன் கிரகம் மேகங்களுக்கு மேலே 30,700 முதல் 62,400 மைல்கள் (49,500 முதல் 100,400 கிலோமீட்டர்) வரை சுற்றிக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 வியாழன் கிரகம்

வியாழன் கிரகம்

2016ஆம் ஆண்டு வியாழன் கிரகம் வந்த ஜூனோ விண்கலத்தின் முதல் குறிக்கோள் என்னவெனில் அந்த கிரகம் எவ்வாறு உருவானது என்பதை கண்டுபிடிப்பதுதான். நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே மற்ற பெரிய கிரகங்கள் எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றியும், வியாழன் மற்றும் அதன் சிறுகோள்கள் மற்றும் சிறிய கிரகங்களின் சுற்றுப்பாதைகளை எவ்வாறு பாதித்தது என்பதைக் கண்டறியவும் உதவுகிறது.

மிகப்பெரிய கிரகம்

மிகப்பெரிய கிரகம்

சூரியனைச் சுற்றி வரும் மிகப்பெரிய கிரகம் வியாழன் என்பது மட்டுமல்ல, அதில் மேலும் பல முக்கிய அதிசயங்கள் உள்ளன. சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற அனைத்து இடங்களில் கிடைக்கும் பொருட்களை விட இங்கு இரு மடங்கிற்கும் மேலாக கிடைக்கின்றன.

உருவாக்கத்தில் குறைந்தது 80 மடங்கு

அனைத்து கிரகங்கள், நிலவுகள், சிறுகோள்கள் மற்றும் வால்மீன்கள் உட்பட இங்கு மட்டும் இருமடங்கு என்பது ஒரு அதிசய செய்தி ஆகும். நாசா இந்த புதிய புகைப்படத்துடன் ஒரு முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி வியாழன் கிரகம் ஒரு நட்சத்திரத்தை ஒத்திருக்கிறது என்பதும், விஞ்ஞானிகள் அதன் உருவாக்கத்தில் குறைந்தது 80 மடங்கு அதிகமாக இருந்திருந்தால், அது ஒரு கிரகத்தை விட சிறியதானது என்று அழைக்கப்படும் ஒரு வகை நட்சத்திரமாக மாறக்கூடும் என்று விஞ்ஞானிகள் மதிப்பிடுகின்றனர்."

இருக்கும்போது உங்களுக்கு கூடுதல் நேரம்

நீங்கள் வீட்டிலேயே இருக்கும்போது உங்களுக்கு கூடுதல் நேரம் கிடைத்தால் வியாழன் கிரகத்தின் படங்களுடன் நீங்களே விளையாட நாசா உங்களை அழைக்கின்றது. வியாழன் குறித்த படங்கள் இங்கே கிடைக்கின்றன, முடிந்தால் மேல்-வலது மூலையில் உள்ள "பதிவேற்று" என்ற பட்டனை அழுத்தி அவற்றை ஜூனோகாம் இணையதளத்தில் இடுகையிடலாம்.

News Source: space.com

Best Mobiles in India

English summary
Nasa Shares Marvellous New Pictures Of The Biggest Planet Jupiter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X