நினைச்சாலும் பார்க்க முடியாத கோணங்கள்.. நச்சுனு எடுத்து அனுப்பிய NASA!

|

அமெரிக்காவின் நாசா விண்வெளி அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்துகிறது.. குறிப்பாக நாசா பல வருடங்களுக்கு முன்பு நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பியது.

நிலவு மற்றும் செவ்வாய்

நிலவு மற்றும் செவ்வாய்

அதன்பின்பு கடந்த 50 ஆண்டுகளாக நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் பரிசோதனை முயற்சி நிறைவேறவில்லை. மேலும் தற்போது நாசாநிலவு மற்றும் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சைலண்டா சம்பவம் செய்த Vivo: 12ஜிபி ரேம் உடன் கம்மி விலையில் அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் போன்!சைலண்டா சம்பவம் செய்த Vivo: 12ஜிபி ரேம் உடன் கம்மி விலையில் அறிமுகமான ஸ்பெஷல் எடிஷன் போன்!

ஆர்டெமிஸ்-1

ஆர்டெமிஸ்-1

மேலும் வரும் 2025-ம் ஆண்டுக்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ள நாசா அமைப்பு. இதன் ஒரு பகுதியாக நிலவுக்கு ஆர்டெமிஸ் என்ற ராக்கெட் அனுப்பும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. ஆனாலும் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஆட்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் ஆர்டெமிஸ்-2 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரமிக்க வைக்கும் மூன்று 5G போன்கள் அறிமுகம்: எவ்வளவு அழகு.. அசத்திய Vivo நிறுவனம்.! எப்போது விற்பனை?பிரமிக்க வைக்கும் மூன்று 5G போன்கள் அறிமுகம்: எவ்வளவு அழகு.. அசத்திய Vivo நிறுவனம்.! எப்போது விற்பனை?

ஓரியன் (orion)

ஓரியன் (orion)

குறிப்பாக தற்போது அனுப்பப்பட்ட ஆர்டெமிஸ்-1 ராக்கெட் உதவியுடன் ஓரியன் (orion) என்ற விண்கலம் நிலவின் மேற்பரப்பில் இறங்கி ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது. குறிப்பாக இந்த ஆர்டெமிஸ்-1 ஆனது 42 நாட்களில் 1.3 மில்லியன் மைல்கள் பயணிக்கும் என்று கூறப்படுகிறது.

Amazon, Flipkart-ல பொய் பொய்யா பேசுறாங்க.! அதிரடியா ரெடியாகும் அரசாங்க ஆணை.! என்னாச்சு தெரியுமா?Amazon, Flipkart-ல பொய் பொய்யா பேசுறாங்க.! அதிரடியா ரெடியாகும் அரசாங்க ஆணை.! என்னாச்சு தெரியுமா?

ஆர்டெமிஸ்-1 ராக்கெட்

அதேபோல் தொழில்நுட்பக் கோளாறு, சூறாவளி புயலால் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் ஏவும் திட்டம் பல முறை தள்ளி வைக்கப்பட்ட சூழலில், கடந்த 16-ந்தேதி விண்ணில் ஒருவழியாக ஏவப்பட்டது. மேலும் நாசாவின் ஓரியன் விண்கலம் நிலவு மண்டலத்திற்குள் நுழைந்து உள்ளது. இந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பிலிருந்து அதிக உயரத்தில், அதேவேளையில், பூமியைச் சுற்றி வரும் நிலவின் பயண திசைக்கு எதிர் திசையிலும் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கசகசனு இல்லாம ஒரே கேமரா தான்: சின்னதா க்யூட்டா அறிமுகமான Samsung 5G ஸ்மார்ட்போன்!கசகசனு இல்லாம ஒரே கேமரா தான்: சின்னதா க்யூட்டா அறிமுகமான Samsung 5G ஸ்மார்ட்போன்!

 படங்களைப் பகிர்ந்து கொண்டது

குறிப்பாக இந்த ஓரியன் விண்கலத்தின் உள்ளேயும் வெளியேயும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த விண்கலம் ஆள் இல்ல விண்கலமாகும். பின்பு நாசாவின் ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் ராக்கெட்டில் ஓரியன் ஏவப்பட்ட உடனேயே, அது நாசாவுடன் படங்களைப் பகிர்ந்து கொண்டது.

Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!Redmi அங்குட்டு போ.. Realme இங்குட்டு போ! வெறும் ரூ.14,799 க்கு புது மாடலை இறக்கிவிட்ட OnePlus!

அதிக வைரலாகி உள்ளது

அதிக வைரலாகி உள்ளது

தற்போது நிலவை நெருங்கிய ஓரியன் பூமி மற்றும் சந்திரனைப் பற்றிய காட்சிகளைப் பகிர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது ஓரியன் எடுத்த படங்கள் தான் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. மேலும் இந்த விண்கலம் நிலவின் முக்கிய மண்டலத்திற்குள் நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேண்டாம்னு சொல்ல முடியாத விலையில் அறிமுகமான 43-இன்ச் GloLED TV.. அப்படி என்னப்பா விலை?வேண்டாம்னு சொல்ல முடியாத விலையில் அறிமுகமான 43-இன்ச் GloLED TV.. அப்படி என்னப்பா விலை?

நிலவின் அருகில் இருந்து பூமி எப்படி தெரியும்?

நிலவின் அருகில் இருந்து பூமி எப்படி தெரியும்?

மேலும் இப்போது நிலவின் அருகில் இருந்து பூமி எப்படி தெரியும் என்றும் படம் பிடித்துக் காட்டியுள்ளது அந்த விண்கலம். அதாவது நிலவின் மேற்பரப்பு பெரிதாகவும், தூரத்தில் சிறிய பந்து போல பூமி தெரியும் படத்தைத் தான் நாசா தற்போது வெளியிட்டுள்ளது. இதுதவிர வீடியோவும் வெளியாகியுள்ளது.

கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?கல் நெஞ்ச காரங்க.. கருணையே காட்டாத 7 கம்பெனிகள்.. கொத்து கொத்தாக பணி நீக்கம்.. இருப்பதிலேயே யார் மோசம்?

3 டம்மிகள்

3 டம்மிகள்

அதேபோல் நிலவில் மனிதர்கள் வசிக்கலாமா என்பதை அறியும் வகையில் சோதனையாக மனித திசுக்களைப் பிரதிபலிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட மனித உடல்களை போன்ற 3 டம்மிகள் இந்த ஆர்டெமிஸ்-1 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அதாவது நிலவில் மற்றும் விண்வெளியில் உள்ள கதிர்வீச்சுகள் மனித உடல்களை எந்த அளவுக்குத் தாக்கும் என்பதை கண்டறிய இந்த மாதிரி பொம்மைகள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

photo courtesy: nasa, timesnownews, livemint

Best Mobiles in India

English summary
NASA shared the views of the earth and the moon as seen from Artemis 1 spacecraft: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X