நாசா சேகரித்த சிறுகோளில் உயிர்களுக்கான அடையாளமா? 4.5 பில்லியன் ஆண்டு சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் படம்

|

தேசிய ஏரோநாட்டிக்ஸ் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா, 4.5 பில்லியன் ஆண்டுகள் பழமையான சிறுகோளின் அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தைப் படம்பிடித்துள்ளது. விண்வெளியில் பூமிக்கு அப்பால் இருக்கும் இந்த சிறுகோள் புத்தகத்தைப்படத்தை நாசா தற்பொழுது அதன் சமூக வலைதளபக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த சிறுகோளை நாசா விண்வெளியில் எப்படிப் படம்பிடித்து? நாசா பூமிக்குக் கொண்டுவரும் சிறுகோளின் துகள்கள் பற்றி சில கூடுதல் சுவாரசியமான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

சிறுகோள் பாறைகளை சேகரிக்கும் ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்

சிறுகோள் பாறைகளை சேகரிக்கும் ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம்

நாசா படம்பிடித்துப் பகிர்ந்துள்ள இந்த சிறுகோள் பென்னு (Bennu) என்று அழைக்கப்படுகிறது. இந்த பென்னு சிறுகோளின் புகைப்படத்தை ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் (Osiris Rex spacecraft) விண்வெளியில் படம்பிடித்துள்ளது. ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் ஏற்கனவே அதற்குக் கொடுக்கப்பட்ட மிஷனை முடித்துவிட்டு பூமியை நோக்கி திரும்பிக்கொண்டிருக்கிறது. ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் விண்வெளியில் உள்ள பண்டைய சிறுகோளில் இருக்கும் பொருளிலிருந்து பாறைகள் மற்றும் தூசுகளின் மாதிரியுடன் பூமிக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறது.

சிறுகோள் துகளில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறு

சிறுகோள் துகளில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறு

ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் எடுத்துவரும் விவன்வெளி பாறைகள் மற்றும் தூசிகளின் பயணத்தின்போது, இந்த புகைப்படத்தை கிளிக் செய்துள்ளது. ஒசிரிஸ் ரெக்ஸ் விண்கலம் எடுத்து வரும் மாதிரிகளில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் தடயங்களை நாசா கண்டறிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது தண்ணீருக்கான ஒரு முக்கிய மூலக்கூறாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிர்வாழும் திறன் சிறுகோளின் பாறை மேற்பரப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

சிறுகோள் மாதிரிகள் அடங்கிய காப்ஸ்யூலை பூமிக்கு அனுப்பும் ஓசிரிஸ்-ரெக்ஸ்

சிறுகோள் மாதிரிகள் அடங்கிய காப்ஸ்யூலை பூமிக்கு அனுப்பும் ஓசிரிஸ்-ரெக்ஸ்

ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மூலக்கூறுகளின் தடயங்கள், தண்ணீருக்கான அடையாளானால் என்றும், இதனால் உயிர்கள் உருவாவதற்கான சாத்தியங்கள் நாசா பூமிக்குக் கொண்டுவரும் அந்த மாதிரிகளில் அதிகம் பொதிந்துள்ளது என்று ஓசிரிஸ்-ரெக்ஸ் மிஷனின் முதன்மை ஆய்வாளர் டான்டே லாரெட்டா 2018 இல் தெரிவித்திருக்கிறார். ஓசிரிஸ்-ரெக்ஸ், பூமிக்குத் திரும்பும் பயணம் சுமார் இரண்டு ஆண்டுகள் ஆகும். விண்கலம் பின்னர் சிறுகோள் மாதிரிகள் அடங்கிய ஒரு காப்ஸ்யூலை பூமி நோக்கி விண்வெளியில் இருந்து வெளியேற்றும்.

உலகளவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் மாதிரிகள்

உலகளவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும் மாதிரிகள்

விண்வெளி பாறைகளின் மாதிரியைப் பூமிக்கு எடுத்து வரும் காப்ஸ்யூல், உட்டாவின் உள்ள ஒரு தொலைதூர பகுதியில் பத்திரமாகத் தரையிறங்கும் என்று நாசா கூறியுள்ளது. உலகளவில் உள்ள ஆராய்ச்சி ஆய்வகங்களுக்கு இந்த மாதிரிகள் விநியோகிக்கப்படும் என்று நாசா கூறுகிறது, ஆனால் 75 சதவீத மாதிரிகள் ஹூஸ்டனில் உள்ள ஜான்சன் விண்வெளி மையத்தில் எதிர்கால தலைமுறையினருக்கும், இன்னும் உருவாக்கப்படாத தொழில்நுட்பங்களுடன் சில ஆய்வுகளை மேற்கொள்ளப் பாதுகாக்கப்படும் என்று நாசா கூறியுள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

OSIRIS-REx விண்கலம் தான் அமெரிக்காவின் முதல் சேகரிப்பு விண்கலம்

OSIRIS-REx விண்கலம் தான் அமெரிக்காவின் முதல் சேகரிப்பு விண்கலம்

மினிவேன் அளவிலான OSIRIS-REx விண்கலம், லாக்ஹீட் மார்ட்டினால் சுமார் 800 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டு, 2016 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இது , விண்வெளி சென்று சிறுகோள் பொருட்களின் மாதிரியைச் சேகரித்துத் திருப்பி பூமிக்கு அனுப்பும் பணியைச் செய்யும் முதல் அமெரிக்காவின் விண்கலம் OSIRIS-REx மட்டும் தான். இதற்கு முன்பு, இத்தகைய சாதனையை நிகழ்த்திய ஒரே நாடாக ஜப்பான் மட்டுமே பார்க்கப்படுகிறது.

உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது - நாசா

உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது - நாசா

இந்த சிறுகோள் மாதிரிகள், சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய மண்டலத்தின் உருவாக்கத்திலிருந்து எஞ்சியிருக்கும் சிறுகோள்கள் குப்பைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என்று நாசா கூறியுள்ளது. இந்த சிறுகோள் மாதிரி, பூமியில் வாழ்வின் தோற்றம் பற்றிய தடயங்களை வைத்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதேபோல், நாசா செவ்வாய்க் கிரகத்தில் உயிர்களுக்கான தடயங்களைத் தேடி வருகிறது. செவ்வாய்க் கிரகத்தின் நிலத்தடியில் உயிர்கள் இருக்க வாய்ப்புள்ளது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

Best Mobiles in India

English summary
NASA shared image of asteroid Bennu has been taken by the Osiris Rex spacecraft : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X