Home
Scitech

பூமியில் போட்ட ஓட்டைகள் பற்றாமல், செவ்வாயில் ஓட்டை போடும் நாசா; ஏன் தெரியுமா.?

இன்சைட்டின் பணிகள் என்ன.? இது எம்மாதிரியான செவ்வாய் கிரக ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.?

By Muthuraj

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, வருகிற மே 5-ஆம் தேதி அன்று, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்யும் நோக்கத்திலான "இன்சைட் மிஷனை" (Insight Mission) விண்ணில் செலுத்தவுள்ளது.

பூமியில் போட்ட ஓட்டைகள் பற்றாமல், செவ்வாயில் ஓட்டை போடும்  நாசா; ஏன்.?

இதுவொரு "வழக்கமான" விண்வெளி ஏவலாக இருக்காது என்பது மட்டும் உறுதி, ஏனெனில் கூறப்படும் இன்சைட் மிஷன் ஆனது, புளோரிடாவின் ஜான் எஃப் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து கிளம்ப போவதில்லை, மாறாக, கலிபோர்னியாவில் உள்ள வான்டென்பெர்க் விமானப் படைத்தளத்தில் உள்ள யுனைட்டெட் லான்சன் அலையன்ஸில் (ULA) இருந்து கிளம்புகிறது.

இன்சைட்டின் பணிகள் என்ன.?

இன்சைட்டின் பணிகள் என்ன.?

இது ஒரு 'லாஜிஸ்டிக்ஸ்' சார்ந்த நடவடிக்கை என்றும், இது நாசாவின் பணத்தை அதிகமான சேமிக்க வழி வகுக்கும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூறி உள்ளனர். கலிபோர்னியாவிலிருந்து ஏவப்படும் முதல் அமெரிக்க இன்டர் பிளானட்டரி மிஷன் ஆன இன்சைட்டின் பணிகள் என்ன.? இது எம்மாதிரியான செவ்வாய் கிரக ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளது.?

எவ்வாறு வடிவமைக்கப்பட்டது.?

எவ்வாறு வடிவமைக்கப்பட்டது.?

செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கும் இன்சைட் ஆனது, பூமி உட்பட சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து பாறைகள் மிக்க கிரங்கங்களும் - சுமார் நான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் - எவ்வாறு வடிவமைக்கப்பட்டது என்பது சார்ந்த செயல்முறைகளை ஆழமாக ஆராயவுள்ளது.

கட்டமைப்பு மற்றும் கலவை.!

கட்டமைப்பு மற்றும் கலவை.!

"ஆழமாக ஆய்வு செய்ய உள்ளது" என்று கூறியதுமே புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆம், இன்சைட் மிஷன் ஆனது செவ்வாய் கிரகத்தின் உட்பகுதி மர்மங்களை, ஆழமாக துளை போட்டு ஆராய உள்ளது. இது செவ்வாய் கிரகத்தின் கட்டமைப்பு மற்றும் கலவை பற்றிய கேள்விகளுக்கும் விடையளிக்க உதவும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மார்ஸ்க்குவேக்ஸ்.!

மார்ஸ்க்குவேக்ஸ்.!

செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதிக்கு கீழே உள்ளதைக் கண்டுபிடிக்கும் நோக்கத்துடன் ஏவப்படும் முதல் பிளானட்டரி மிஷன் ஆன இன்சைட், செவ்வாய் கிரகத்தின் வெப்ப வெளியீட்டை அளவிடுவதன் மூலமும், பூமியில் ஏற்படும் "எர்த்க்குவேக்ஸ்"க்கு (Earthquakes - பூகம்பம்) சமமான "மார்ஸ்க்குவேக்ஸ்"களை கண்காணிப்பதின் விளைவாகவும், செவ்வாய் கிரகத்தின் உட்புறத்தை கற்று அறியும்.

மார்ஸ் கியூப் ஒன் (மார்கோ).!

மார்ஸ் கியூப் ஒன் (மார்கோ).!

செவ்வாய் கிரகத்தில், சுமார் ஆறு மாத காலம் நடக்கப்போகும் இந்த ஆய்வில், இன்சைட் மட்டும் தனியாக வேலை செய்யப்போவது இல்லை. இன்சைட் செல்லும் அதே ராக்கெட்டில் மார்ஸ் கியூப் ஒன் (மார்கோ) எனப்படும், ஒரு தனிப்பட்ட தொழில்நுட்ப பரிசோதனை திட்டத்தையும் நாசா அனுப்பவுள்ளது. மார்கோ, இரண்டு மினி ஸ்பேஸ் கிராஃப்ட்ஸ்களை கொண்டுள்ளது.

டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.!

டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாகும்.!

இன்சைட் மிஷன், நாசாவின் டிஸ்கவரி திட்டத்தின் ஒரு பகுதியாகும் என்பதும், கடந்த மார்ச் 2016-லேயே திட்டமிடப்பட்டிருந்த இந்த ரோபோட்டிக் மார்ஸ் லேண்டர் மிஷன் ஆனது, பிரதான கருவியில் ஏற்பட்ட தொடர்ச்சியான வாக்வெம் (vacuum) தோல்விகளின் விளைவாக தள்ளிவைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA sending robotic geologist to Mars to dig super deep. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X