இஸ்ரோ திட்டம் காப்பியடித்த நாசா: நிலவின் தென்துருவத்தில் மனிதர்களா?

|

உலக அரங்கில் இன்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றது இஸ்ரோ. பல்வேறு நாடுகளும் இந்தியாவையும் இஸ்ரோவையும் அவ்வளவு சிறிதாக எடை போட முடியாது.

இஸ்ரோ திட்டம் காப்பியடித்த நாசா: நிலவின் தென்துருவத்தில் மனிதர்களா?

இஸ்ரோ கடந்த 2017ல் ஓரே நேரத்தில், 104 செயற்கோள்களை செலுத்தி சாதனை செய்தது. மேலும், சந்திராயன்-1 நிலவுக்கு அனுப்பி தண்ணீர் இருப்பதை கண்டுபிடித்து உலகிற்கு முதன் முதலில் கூறியது.

இதுவரை எந்த நாடும் செய்யாத சாதனையாக சந்திராயன்-2 நிலிவின் தென் துருவத்தில் தரையிறங்கி சாதனை செய்ய இருக்கின்றது.

இந்நிலையில், இஸ்ரோவின் திட்டத்தை காப்பி அடித்து, முதல்முறையாக நிலிவன் தென் துவருத்திற்கு மனிதர்களை அனுப்பி ஆய்வு செய்து உலக அரங்கில் பெயர் வாங்கி கொள்ளலாம் என்று நாச வேலையில் இறங்கியுள்ளது நாசா.!

 சந்திராயன்-2

இஸ்ரோ நிறுவனம் நிலவின் தண்ணீர் இருப்பதை சந்திராயன்-1 முதல் முறையாக உலகிற்கு கண்டறிந்து கூறியது. இந்த செயற்கைகோள் செயழிந்ததால், சந்திராயன்-2 திட்டம் தயார் ஆனது. பிறகு பல்வேறு தடைகளாலும், தொழில்நுட்ப கோளாறுகளாலும் விண்ணிற்கு செலுத்த தடை ஏற்பட்டது.

வெற்றிகரமாக செலுத்தப்பட்டது

சந்திராயன் -2 விண்கலனை இஸ்ரோ திட்டமிட்ட ஸ்ரீ ஹரிகோட்ட விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் அனுப்பியது. இதுவரை எந்த நாடும் நிலவின் தென் துவருத்திற்கு விண்கலனை அனுப்ப வில்லை. இதில் பல்வேறு இடையூறுகள் இருக்கின்றது. இதையும் தாண்டி இஸ்ரோ வெற்றிகரமாக அனுப்பியது.

தடைகளை தகர்த்தது

சந்திராயன்-2 திட்டத்திற்கு நிதி அளிப்பது முதல் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. இந்த திட்டம் ஒரு வழியாக செயல்பாட்டிற்கு வந்தாலும், தொழில்நுட்ப கோளாறு உட்பட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது. இதையும் ஒரு வழியாக சரிசெய்து வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பியது.

கூகுள்பிளே ஸ்டோரில் பாதுகாப்பாக யுபிஐ கட்டணம்செலுத்த புதிய வசதி.!கூகுள்பிளே ஸ்டோரில் பாதுகாப்பாக யுபிஐ கட்டணம்செலுத்த புதிய வசதி.!

இஸ்ரோவின் பெருமை

ஓரே நேரத்தில் 104 செயற்கைகோள்ளையும் கடந்த 2017ம் ஆண்டு விண்வெளிக்கு செலுத்தியது. பிறகு, இஸ்ரோ குறைந்த விலையில் பல நாட்டு செயற்கோள்ளையும் செலுத்தி வருகின்றது.

முதல் முயற்சியில் சந்திராயன்-1 வெற்றிகரமாக ஏவியது. இது நிலவில் தண்ணீர் இருப்பதை முதல் முதலில் உலகிற்கு கண்டுபிடித்து கூறியது.
உளவு செயற்கைகோள், நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்டவைகளையும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றது.

மேலும் ஒரு சாதனை

இந்நிலையில், இஸ்ரோ நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்-2 இதுவரை எந்த நாடும் தரையிறக்கவில்லை. தற்போது, வெற்றிகரமாக இஸ்ரோ சந்திராயனை தரையிறக்க போகின்றது. அங்கு இருண்ட பகுதியாகவும் இருப்பதால் தண்ணீர், மனிதர்கள் வாழ ஏற்ற சூழ்நிலைகள் இருப்பது குறித்தும் ஆராயவும் இருக்கின்றது.

<strong>விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!</strong>விமானம் மூலம் சேட்லைட் ஏவும் இஸ்ரோ: மிரளும் நாடுகள்.!

லேண்டர் விக்ரம்:

நிலவில் சந்திராயன்-2 சென்றடைந்துள்ளது. பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளுக்கும் மத்தியில், வெற்றிகரமாக லேண்டர் விக்ரமை பிரித்துள்ளது. சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்குவது உறுதியாகியுள்ளதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். வரும் (செப்.7ம் தேதி) நிலவின் தென் துவருத்தில் சந்திராயன்-2 வெற்றிகரமாக தரையிறங்க இருக்கின்றது.

சந்திராயன்-2 முக்கியமானது

நிலவின் தென்துருவத்தில் சந்திராயன்- செய்யும் ஆராய்ச்சி மிகவும் முக்கியமாக இருக்கும் என்று விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் தெரிவித்துள்ளார்.

நாசா உன்னிப்பாக கவனிக்கிறது

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த 'நாசா' முன்னாள் விஞ்ஞானி டொனால்ட் ஏ தாமஸ் கூறுகையில், உலக நாடுகள் அனைத்தும் விண்வெளியில் ஒரே கூரையின் கீழ் பயணித்து வருகின்றன. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 தரையிறங்குவதை 'நாசா' உன்னிப்பாகவும் ஆர்வமாகவும் கவனித்து வருகிறது.

மனிதர்களை அனுப்பும் நாசா

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள் மிகவும் முக்கியமானது. அடுத்த 5 ஆண்டுகளில் நிலவின் தென் துருவத்திற்கு மனிதர்களை அனுப்ப 'நாசா' முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோ திட்டம்  காப்பி

நாசா முன்னோடியாக விண்வெளியில் இருந்தாலும், இந்தியாவின் இந்த சீறிய வளர்ச்சியை கண்டு பயந்து நடுகின்றது. மேலும், இந்த பகுதியில் மனிதர்களை இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அனுப்பி ஆய்வும் செய்யும் முன்னர் தனது ஆய்வை துவங்க வேண்டும் என்று நினைத்துள்ளது.

<strong>3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!</strong>3.5மில்லியன் ஆண்டுகள் பழமையான நம் முன்னோர் இவர் தான்! அதிசய கண்டுபிடிப்பு.!

நாசாவின் நாசவேலை

மற்ற நாடுகள் உலகின் முதன் முறையாக இந்த பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினால் தனது பெயருக்கும், புகழுக்கும் பங்கம் ஏற்படும் என்று நாசா அறிந்துள்ளது. இதனால் மற்றவர்களுக்கு பெயரும் புகழும் கிடைக்கா கூடாது என்று இந்த நாசா நாச வேலையில் இறங்கியுள்ளது.

Best Mobiles in India

English summary
NASA sending humans to the moons south pole: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X