Home
Scitech

பம்பர வடிவ பென்னு விண்கல்லில் தரையிறங்க வெற்றிகரமாக இடத்தை தேர்வுசெய்த நாசா..

நாசா நிறுவனம் தனது விண்கல் மாதிரி சேகரிப்பு பணிக்காக, முன்னர் முன்மொழியப்பட்ட நான்கு இடங்களில் ஒரு வருட ஆய்வுக்குப் பிறகு இறுதியாக ஒரு தளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது.

பம்பர வடிவிலான இந்த விண்கல்

பம்பர வடிவிலான இந்த விண்கல்

'101955 பென்னு' என்று பெயரிடப்பட்டுள்ள பம்பர வடிவிலான இந்த விண்கல், 1,614 அடி (492 மீ) அகலம் கொண்டது. பூமிக்கு அருகில் உள்ள இது, 2175 ஆண்டு முதல் 2199ம் ஆண்டிற்குள் பூமியைத் தாக்குவதற்கு 1-ல் 2,700 பங்கு ஒட்டுமொத்த வாய்ப்பைக் கொண்டுள்ளது.

நைட்டிங்கேல்

நைட்டிங்கேல்

தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 'நைட்டிங்கேல்' என அழைக்கப்படுகிற முதன்மை மாதிரி தளம், அந்த விண்கல்லின் வடக்கு அரைக்கோளத்தில் ஒரு புதிய பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது.

தோற்றம், அலைவரிசை விளக்கம், வள அடையாளம், பாதுகாப்பு, ரெகோலித் எக்ஸ்ப்ளோரர் அல்லது ஓசிரிஸ்-ரெக்ஸ் ( The Origins, Spectral Interpretation, Resource Identification, Security, Regolith Explorer - or OSIRIS-Rex) என அழைக்கப்படும் விண்கலம், டிசம்பர் 2018 முதல் பென்னுவை பகுப்பாய்வு செய்து வருகின்றது.

 பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி

இந்த விண்கலம் அதன் பணியில் வெற்றி பெற்றால், ஒரு விண்கல்லின் மாதிரிகளை பகுப்பாய்வுக்காக பூமிக்கு திருப்பி அனுப்பிய முதல் அமெரிக்க விண்கலம் என்ற பெருமையை ஓசிரிஸ்-ரெக்ஸ் விண்கலம் பெறும்.

நாசா ஆராய்ச்சியாளர்களைப் பொறுத்தவரை, பென்னு சூரிய மண்டலத்தின் பிறப்பிலிருந்து ஒரு காலகுடுவை போல செயல்பட்டு ,அதன் உருவாக்கம் மற்றும் பரிணாம வளர்ச்சி பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும் என எண்ணுகின்றனர்.

 கரிம சேர்மங்களின் உருவாக்கம்

கரிம சேர்மங்களின் உருவாக்கம்

அதன் கார்பன் நிறைந்த மேற்பரப்பு, பூமியில் உயிரினங்களின் தோற்றத்தை செயல்படுத்தும் கரிம சேர்மங்களின் உருவாக்கம் குறித்த ஒரு புரிதலை ஏற்படுத்தும்.


இந்த விண்கலத்தால் சேகரிக்கப்பட்ட நெருக்கமான தரவின் அடிப்படையில், பென்னுவில் உள்ள நான்கு பரிந்துரைக்கப்பட்ட மாதிரி தளங்களின் திறனை மதிப்பிடுவதற்கு OSIRIS-REx குழு கடந்த சில மாதங்களாக செயலாற்றிவந்தது.

விண்கற்களுக்கு பறவைகளின் பெயர்

விண்கற்களுக்கு பறவைகளின் பெயர்

'கிங்பிஷர்', 'நைட்டிங்கேல்', 'ஓஸ்ப்ரே' மற்றும் 'சாண்ட்பைப்பர்' என அழைக்கப்பட்ட அந்த நான்கு தளங்கள் ஒவ்வொன்றும் ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்டன. ஏனெனில் அவை ஓசிரிஸ்-ரெக்ஸின் பாதுகாப்பிற்கு மிகக் குறைவான ஆபத்துக்களை ஏற்படுத்தும் அதேசமயம், சிறந்த மாதிரி திறனைக் கொண்டுள்ளன.


விண்கற்களுக்கு பறவைகளின் பெயர் அடிப்படையிலான பெயரிடும் முறை பின்பற்றி பென்னு என்ற பெயரும் இடப்பட்டது. இது சூரியன், படைப்பு மற்றும் மறுபிறப்பு ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் பண்டைய எகிப்திய பறவை தெய்வத்திலிருந்து எடுக்கப்பட்டது.

நைட்டிங்கேல் தளம்

நைட்டிங்கேல் தளம்

OSIRIS-REx பென்னுவிலிருந்து சிறிய (.8 அங்குலங்கள் / 2 செ.மீ க்கும் குறைவான விட்டம்) மாதிரிகளை முதலில் மெதுவாக சிறுகோள் மேற்பரப்பில் இறங்குவதன் மூலம் சேகரிக்கும்.


விண்கலத்தின் ரோபோ கையின் முடிவில் ஒரு சேகரிப்பு கரண்டியில் மாதிரிகளை நிரப்ப, அதன் மீது நைட்ரஜன் வாயு வெடிக்கவைக்கப்படும்.


பரிந்துரைக்கப்பட்ட நான்கு தளங்களில் சிறந்தது என தேர்வான நைட்டிங்கேல் தளம், பென்னுவின் வடக்கே ஒரு புதிய பள்ளத்திற்குள் 460 அடி (140 மீட்டர்) அகலத்தில் அமைந்துள்ளது.

 வெப்பநிலை மற்றும் பள்ளத்தின் இளம் வயது

வெப்பநிலை மற்றும் பள்ளத்தின் இளம் வயது

பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட படங்களின் படி, அதன் பாறை மேற்பரப்பு பொருள் 'ரெகோலித்' என்று அழைக்கப்படுபவை. அவை நிறத்தில் இருண்டதாகவும், அதன் மேற்பரப்பு ஒப்பீட்டளவில் மென்மையாகவும் இருப்பதைக் காட்டுகிறது.


குறைந்த வட வெப்பநிலை மற்றும் பள்ளத்தின் இளம் வயது என்பதை வைத்து பார்க்கையில், நைட்டிங்கேலில் உள்ள மேற்பரப்பு பொருள் நன்கு பாதுகாக்கப்பட்டு ஒப்பீட்டளவில் புதிதாக வெளிப்படும். இதன் மூலம் OSIRIS-REx விண்கல்லின் 'சிறந்த' மாதிரியை எடுக்க முடியும். இதிலிருந்து விஞ்ஞானிகள் பென்னுவின் புவியியல் வரலாற்றை புனரமைக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
NASA selects site asteroid sample collection mission four potential candidates : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X