“நட்சத்திரங்கள் கிரகங்களை சிதைக்கின்றன” - கவனித்துச் சொன்ன நாசா.!

  “ஒர் இளம் நட்சத்திரம் தன் அருகே உள்ள கிரகத்தை அல்லது கிரகங்களை மோதி அழிப்பதைப் பார்க்கும் அனுபவத்தை இப்பொழுதுதான் விஞ்ஞானிகள் முதன் முதலாகப் பெற்றிருக்கக் கூடும்” என நாசாவின் சந்திரா எக்ஸ் ரே ஆய்வகத்தில் (Chandra X-ray Observatory) பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர்.

  “நட்சத்திரங்கள் கிரகங்களை சிதைக்கின்றன” - கவனித்துச் சொன்ன நாசா.!

  “கிரகங்கள் சிறிய நட்சத்திரங்களின் மீது விழுந்து சிதைந்து போகும் என்பதை, ஆய்வுக் கருத்துக்கள் மூலமாகவும், கணினி வரைபடங்கள் மூலமாகவும் அறிந்திருந்த நாங்கள் இப்பொழுதுதான் முதன் முதலாக நேரடியாககக் கவனிக்கக் கூடிய வாய்ப்பைப் பெற்றுள்ளோம்” என்கிறார் மூத்த ஆய்வாளர், ஹான்ஸ் மோரிட்ஸ் கென்தர் (Hans Moritz Guenther). இவர் அமெரிக்காவின் மசாசூட்ஸ் நகரில் அமைந்துள்ள தொழில்நுட்ப நிறுவனத்தில் வான் இயற்பியல் மற்றும் விண்வெளி ஆராய்ச்சித் துறையில் மூத்த ஆய்வாளராக உள்ளார்.

  “திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையிலான எங்களுடைய ஆய்வுகள் சரியானதாக இருந்தால், ஓர் இளம் நட்சத்திரம் ஒரு கிரகத்தை அல்லது கிரகங்களை விழுங்குவதை அல்லது அழிப்பதை நேரடியாக கவனிக்கக் கிடைத்த வாய்ப்பு இதுதான் முதல் முறையாகும்.” என்கிறார் ஹான்ஸ் மோரிட்ஸ்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  பூமியிலிருந்து சுமார் 450 ஓளியாண்டுகளின் தூரத்தில்

  பூமியிலிருந்து சுமார் 450 ஓளியாண்டுகளின் தூரத்தில் உள்ள தாய் நட்சத்திரம் தற்போது கிரகங்களின் சிதைவுகளை விழுங்கும் பணியில் மும்முரமாக உள்ளது. இந்தச் சிதைவுகள் இளம் நட்சத்திரம் மற்றும் கிரகங்களின் மோதல்களால் ஏற்பட்டவையாகும். என, வானியல் ஆய்வு இதழில் (Astronomical Journal) வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை மூலம் தெரிய வருகிறது.

  சிறிய கிரகங்கள் தங்களுடைய இருப்பு நிலையைத் தக்க வைத்துக் கொள்ள எத்தகைய இடா்பாடுகளை எதிர் கொள்ள வேண்டியுள்ளது என்பது பற்றிய ஆய்வுக்கு இந்தப் புதிய கண்டுபிடிப்பு மிகவும் உறு துணையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

  பத்தாண்டுகளுக்கு ஒரு முறை

  "RW Aur A" என்னும் பெயர் கொண்ட இளம் நட்சத்திரத்தைப் பற்றி 1937 ஆம் ஆண்டிலிருந்து ஆய்வு செய்து வரும் வானியல் அறிஞர்கள் அது அடைந்து வரும் மாறுபாடுகளைக் கண்டு குழப்பமடைந்து உள்ளனர்.

  சில பத்தாண்டுகளுக்கு ஒரு முறை இந்த நட்சத்திரத்தின் ஒளி சற்று மங்கி மீண்டும் பிரகாசமடைவதைக் கண்டு பிடித்துள்ளனர். சமீப ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தின் ஒளி அடிக்கடி மங்குவதையும் மீண்டும் பிரகாசமடைவதற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்வதையும் வானவியல் குறித்து ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

  ஒளிமங்கிய நிலைக்குக் காரணம்

  இந்த நட்சத்திரத்தின் சமீபத்திய ஒளிமங்கிய நிலைக்குக் காரணம் என்னவென்பதை தற்போது கண்டறிந்துள்ளனர். இரண்டு சிறிய கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கலாம், அதில் ஒன்று மற்றொன்றைவிட அளவில் பெரியதாக இருந்திருக்கும்.

  முன்னர் காணப்பட் ஒளி

  மோதிய கிரகங்களின் சிதைவுகள் நட்சத்திரங்களின் மீது விழுந்திருக்கலாம். இந்தச் சிதைவுகள் அடர்ந்த தூசுப் படலத்தையும் ஒரு வகையான வாயுப் படலத்தையும் ஏற்படுத்தியிருக்கும். அதன் காரணமாக நட்சத்திரத்தின் ஒளி மங்கியிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

  நட்சத்திரங்களில் இதற்கு முன்னர் காணப்பட் ஒளி மங்கலுக்கும் இது போன்ற நிகழ்வுகள் காரணமாக இருக்கலாம். இரண்டு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதியிருக்கலாம் அல்லது ஏற்கனவே மோதிய கிரகங்களின் சிதைவுகள் நட்சத்திரங்களின் மீது விழுந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

  சூரிய மண்டலத்துக்கு வெளியே

  சூரிய மண்டலத்துக்கு வெளியே உள்ள கிரகங்களைப் பற்றி அறிந்து கொள்வதிலும் அது எவ்வாறு உருவாகின்றன என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதிலும் தற்போதைய ஆய்வாளர்கள் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நட்சத்திரங்கள் மற்றும் பிற கிரகங்களுடன் மோதுவதால் சிறிய கிரகங்கள் சிதைந்து போகின்றன என்கின்ற தகவலும், அவை சிதைவுறாமல் இயங்குவதை முடிவு செய்யும் காரணிகள் எவை என்பதைப் பற்றிய ஆய்வுகளும் மிகந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  NASA Sees First Sign of One Young Star Devouring Planets: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more