Home
Scitech

ஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா!

சூரிய புயல் குமிழிகள் வெளியேற்றப்படும் இடம் என இந்த ஹைட்ரஜன் சுவர் விஞ்ஞானிகளால் விவரிக்கப்பட்டுள்ளது.

நாசாவில் பணியாற்றும் விஞ்ஞானிகள் சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்துள்ளனர். இது முன்னதாக சரியாக நிர்ணயிக்கப்படவில்லை என நினைக்கப்பட்டது. தற்போது நாசாவின் நியூ ஹாரிசான் விண்கலம் அந்த கண்ணுக்கு தெரியாத எல்லையை காணமுடிகிறது என தெரிவித்துள்ளனர். நமது சூரிய குடும்பத்தின் முனையில் அமைந்துள்ள இதற்கு "ஹைட்ரஜன் சுவர்" என பெயரிட்டுள்ளனர்.

ஹைட்ரஜன் சுவர் : சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையை கண்டறிந்த நாசா!

சூரிய புயல் குமிழிகள் வெளியேற்றப்படும் இடம் என இந்த ஹைட்ரஜன் சுவர் விஞ்ஞானிகளால் விவரிக்கப்பட்டுள்ளது. இங்கு உள்ள நட்சத்திர மண்டலங்களின் பரப்பளவு மிகவும் சிறியதாக இருந்தாலும, சூரிய புயல்கள் கடக்க அனுமதிக்காத அளவுக்கு வலுவாக உள்ளது. அதே நேரத்தில், சூரிய புயலின் உள்ளே பாயும் அளவிற்கு வலுவானது அல்ல. இது சூரியபுயலை உட்புறமாக அழுத்தும் ஒரு சுவர் போல செயல்படுகிறது.

சூரியபுயல்

சூரியபுயல்

சூரியபுயல் வடிவில் சூரியன் தொடர்ந்து ஏராளமான துகள்கள் மற்றும் ஆள்றலை வெளியேற்றிக்கொண்டே உள்ளது. அவை சூரியனின் சுற்றுவட்டப்பாதையையும் தாண்டி பயணிக்கின்றன. ப்ளூட்டோவிற்கு அப்பால் சூரியபுயல், விண்வெளியில் நமது பால்வெளி அண்டத்தின் உள்ளே உள்ள அண்ட ஆற்றலுடன் இணைக்கின்றன என தற்போது வரை விஞ்ஞானிகள் நம்பி வருகின்றனர்.

ஹைட்ரஜன் சுவரை உருவாக்குகின்றன

ஹைட்ரஜன் சுவரை உருவாக்குகின்றன

புதிய ஆதாரங்களின் படி, சூரியபுயல் சுமந்து வரும் துகள்கள் மற்றும் ஆற்றல் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒன்றிணைந்து ஹைட்ரஜன் சுவரை உருவாக்குகின்றன. இந்த பகுதியில் தான் சூரிய துகள்கள், விண்மீன் துகள்களுடன் இணைந்து ஒரு கட்டமைப்பை உருவாக்குகின்றன. விண்வெளியில் பொதுவாக காணப்படும் துகள் ஹைட்ரஜன் ஆகும்.

நியு ஹாரிசான்

நியு ஹாரிசான்

சூரியன் முழுவதும் ஹைட்ரஜனால் நிரம்பியுள்ள நிலையில், அது எரிந்து ஆற்றலையும், சூரியனில் உள்ள மந்த வாயுவான ஹீலியத்தையும் உருவாக்குகிறது. நியூ ஹாரிசான் அனுப்பிய தரவுகளின் மூலம், சூரிய குடும்பத்தின் வெளிப்புற எல்லையானது ஹைட்ரஜனால் ஆனது என நாசா விஞ்ஞானிகள் நம்புகின்றனர். நியு ஹாரிசான் மூலம் சேகரிக்கப்பட்ட புதிய ஆதாரங்கள் மற்றும் அவற்றின் ஆய்வு முடிவுகள் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகளால் வெளியிடப்பட்டது.

 இந்த கண்டுபிடிப்பு இறுதியானது இல்லை

இந்த கண்டுபிடிப்பு இறுதியானது இல்லை

எனினும், இந்த கண்டுபிடிப்பு இறுதியானது இல்லை எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். நியு ஹாரிசான் உண்மையில் விஞ்ஞானிகள் நம்பும்படி ஹைட்ரஜன் சுவரை கண்டறியாமல், புற ஊதாக்கதிர்களை கண்டறிந்திருக்கலாம் என்கின்றனர்.

2006 ஜனவரி

2006 ஜனவரி

2006 ஜனவரியில் விண்ணில் செலுத்தப்பட்ட நியூ ஹாரிசான், 2015ல் ப்ளூட்டோவை கடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA scientists find outer boundary of solar system, call it hydrogen wall: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X