Home
Scitech

அங்கே சூரிய வெளிச்சமே படாது.. அதனால் அங்கே? நிலவின் முதுகு பற்றிய நெடுநாள் மர்மத்தை உடைத்த NASA விஞ்ஞானி!

சூரிய வெளிச்சத்தை அதிகம் பார்த்திடாத நிலவின் பின்பக்கத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை பற்றிய முக்கிய உண்மையை நாசாவை (NASA) சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் வெளிப்படுத்தி உள்ளார்.

அதென்ன உண்மை? நிலவின் (Moon) சில பகுதிகளில் ஏன் சூரிய வெளிச்சம் படுவதில்லை? அங்கே அப்படி என்னதான் இருக்கிறது? இதோ விவரங்கள்:

அதென்ன உண்மை?

அதென்ன உண்மை?

நாசா விஞ்ஞானி வெளிப்படுத்திய உண்மை என்னவென்பதை பற்றி பார்க்கும் முன், நிலவின் முதுகு என்றால் என்ன? அது குறித்த மர்மம் முதல் முதலாக எப்போது அம்பலமானது? நிலவின் பின்பக்கத்தை நம்மால் ஏன் பார்க்க முடிவதில்லை? என்பதை பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்!

உங்களில் பலருக்கும் தெரியும் - நிலவின் முதுகை, அதாவது சந்திர கிரகத்தின் பின்பக்கத்தை பூமியில் இருக்கும் எவராலும் பார்க்கவே முடியாது என்று!

இந்த காரணத்தினால் தான் நிலவின் பின்பக்கமானது - டார்க் சைட் ஆப் தி மூன் (Dark side of the Moon) அல்லது ஃபார் சைட் தி மூன் (Far side of the Moon). அதாவது நிலவின் இருண்ட பகுதி என்கிற பெயரை பெற்றது.

1959 வரை ஒரு மர்மமாகவே இருந்தது!

1959 வரை ஒரு மர்மமாகவே இருந்தது!

1959 வரையிலாக, இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் - சோவியத் யூனியனை சேர்ந்த லூனா 3 (Luna 3) என்கிற விண்கலம் வழியாக புகைப்படமாக்கப்படும் வரையிலாக, நிலவின் பின்பக்கமானது ஒரு பெரிய மர்மமாகவே இருந்தது.

பின்னர் 1968 ஆம் ஆண்டில், அப்பல்லோ 8 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள் சந்திரனை சுற்றி வந்தபோது, நிலவின் பின்பக்கத்தை நேரில் பார்த்த முதல் மனிதர்களாகினர்.

சந்திரனும் சுழல்கிறது.. இருந்தும் அதன் பின்பக்கத்தை ஏன் பார்க்க முடியவில்லை?

சந்திரனும் சுழல்கிறது.. இருந்தும் அதன் பின்பக்கத்தை ஏன் பார்க்க முடியவில்லை?

எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் - சந்திரனும் சுழல்கிறது தான், ஆனால் அது பூமியை சுற்றி வரும் அதே வேகத்தில் சுழல்கிறது.

அதாவது சந்திரன் பூமியை சுற்றி வர எடுக்கும் நேரத்தில், அதன் அச்சில் (Axis) இருந்தபடி ஒரு முழு சுழற்சியை நிறைவு செய்கிறது. விஞ்ஞானிகள் இதை சின்க்ரனைஸ் ரோட்டேஷன் (Synchronous rotation) என்று கூறுகிறார்கள்.

இதன் விளைவாக பூமியில் இருந்து பார்க்கும் போது, எப்போதுமே சந்திரனின் முன்பக்கம் மட்டுமே காட்சி அளிக்கும்; பின்பக்கத்தை பார்க்கவே முடியாது!

சுமார் 8.2 கிமீ ஆழம்!

சுமார் 8.2 கிமீ ஆழம்!

நிலவின் முன்பக்கத்துடன் ஒப்பிடும்போது, அதன் பின்பக்கமானது மிகவும் கரடுமுரடான நிலப்பரப்பாக உள்ளது.

அதுமட்டுமின்றி விண்கற்கள் தாக்கிய பெரிய-பெரிய பள்ளங்களும் அங்கே உள்ளன. இன்னும் குறிப்பிட்டு சொன்னால் நமது சூரிய குடும்பத்திலேயே (Solar System) உள்ள மிகப்பெரிய பள்ளங்களில் ஒன்றான சவுத்-போல் எய்ட்கன் பேசின் (South Pole-Aitken basin) நிலவின் பின்பக்கத்தில் தான் உள்ளது.

அந்த பள்ளத்தின் விட்டம் என்னவென்று தெரியுமா? சுமார் 2,500 கிமீ ஆகும் மற்றும் அதன் ஆழம் சுமார் 6.2 முதல் 8.2 கிமீ இருக்கலாம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இப்படியாக நிலவின் பின்பக்கம் குறித்து பல வகையான சுவாரசியங்கள் இருக்கும் நிலைப்பாட்டில், நாசாவை சேர்ந்த ஒரு விஞ்ஞானி "டார்க் சைட் ஆப் தி மூன்" குறித்த இன்னொரு உண்மையையும் வெளிப்படுத்தி உள்ளார்!

அதென்ன உண்மை?

அதென்ன உண்மை?

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவை சேர்ந்த கேசி ஹொன்னிபால் (Casey Honniball) என்கிற விஞ்ஞானி, சந்திர கிரகம் குறித்த பல வகையான கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது நெடுநாள் மர்மமாக இருக்கும் ஒரு கேள்வியும் கேட்கப்பட்டது. அது "சந்திரனில் தண்ணீர் இருக்கிறதா?" என்கிற கேள்வியே ஆகும்.

அதற்கு பதில் அளிக்கும் பொருட்டு, "சந்திர கிரகத்தில் சூரிய ஒளியை ஒருபோதும் பெறாத சில பகுதிகள் உள்ளன. எனவே அந்த பகுதிகள் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும், ஆக அந்த பகுதிகளில் நிறைய பனிக்கட்டிகள் இருக்கலாம்!" என்று கூறினார்!

ஆக சந்திரனின் பின்பக்கத்தில், அதிக அளவிலான தண்ணீர் இருக்கலாம் என்கிற உண்மையும் தெரிய வந்துள்ளது!

அந்த பனிக்கட்டிகளை உருக்கி குடிக்கலாமா?

அந்த பனிக்கட்டிகளை உருக்கி குடிக்கலாமா?

நிலவில் இருக்கும் பனிக்கட்டிகள், பூமியில் இருப்பதை போல மிகவும் தூய்மையான நீராக இருக்க வாய்ப்பில்லை.

அவைகள் நிலவின் மண்ணுடன் கலக்கப்பட்டு இருக்கலாம்; அல்லது மேற்பரப்பிற்கு கீழே ஆழமாக புதைக்கப்பட்டு இருக்கலாம் அல்லது வெறுமனே ஒரு பனிக்கட்டியாக கூட இருக்கலாம்.

தற்போது ஐஸ் கட்டிகள்.. வருங்காலத்தில் எரிபொருள்!

தற்போது ஐஸ் கட்டிகள்.. வருங்காலத்தில் எரிபொருள்!

எப்படி பார்த்தாலும் அவைகளை நேரடியாக பருக முடியாது. இருப்பினும் வருங்கால விண்வெளி ஆராய்ச்சிகளின் ஒரு பகுதியாக, நிலவில் தரை இறங்கும் விண்வெளி வீரர்கள், அங்கே கிடைக்கும் பனிக்கட்டிகளை குடிநீராக மாற்றுவார்கள் அல்லது சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜனாக மாற்றுவார்கள் அல்லது ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தி, மற்ற கிரகங்களுக்கு செல்வார்கள் என்று கேசி ஹொன்னிபால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்!

Photo Courtesy: NASA / Wikipedia

More from GizBot

Best Mobiles in India

English summary
NASA Scientist Revealed That The Moon Have Water In The Form Of Ice
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X