நிலவிலிருந்து பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களை வெட்டியெடுக்கும் நாசா!

|

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் பிளாட்டினம் போன்ற விலைமதிப்பற்ற பொருட்களுக்காக நிலவின் மேற்பரப்பை தோண்டும் பணிகள் துவங்கும் என நாசா அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தெரிவித்தனர்.

 ஜிம் பிரையன்ஸ்டின்

ஜிம் பிரையன்ஸ்டின்

நாசா நிர்வாகியான ஜிம் பிரையன்ஸ்டின் இதுகுறித்து கூறுகையில், ஆர்வம் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புதிய முன்னேற்றங்கள் ஆகியவை சேர்ந்து, மனிதர்களால் இதற்கு முன்பு அணுகமுடியாத பல்வேறு பொருட்களை கண்டறிந்து எடுக்க உதவும் என்றார்.

நிலவில் சுரங்கங்கள்

நிலவில் சுரங்கங்கள்

நாசா மீண்டும் சந்திரனுக்கு திரும்புவதற்காகவும் மற்றும் அங்கு ஒரு நிரந்தர அமைப்பை நிறுவி நிலவில் சுரங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கவும் நோக்கமாக கொண்டு புதிய பில்லியனர்கள் குழு ஒன்று உதவ முன்வந்துள்ளதாக ஜிம் தெரிவித்துள்ளார்.

ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

வரலாற்று ரீதியாக இல்லாத வணிக பங்குதாரர்கள்

வரலாற்று ரீதியாக இல்லாத வணிக பங்குதாரர்கள்

'பில்லியனர்கள் உண்மையில் விண்வெளி மற்றும் அதுதொடர்பான ஆய்வுகளில் முதலீடு செய்கிறார்கள். மேலும் நாசா அதன் மூலம் பலனடைய முடியும்' என்கிறார் ஜிம்.

வரலாற்று ரீதியாக இல்லாத வணிக பங்குதாரர்கள் எங்களுக்கு உள்ளதால், அவர்கள் செலவுகளை ஏற்றுக்கொண்டு உதவுவார்கள். அவர்கள் அவர்களது சொந்த முதலீடுகளை செய்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு வாடிக்கையாளர்கள் வேண்டும். ஆனால் அது நாசாவாக இருக்கவேண்டிய அவசியமில்லை" என்கிறார் ஜிம்.

ஜெஃப் பெஸோஸ்

ஜெஃப் பெஸோஸ்

அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோஸ், மற்றும் ஸ்பேஸ் எக்ஸ்ன் எலன் மஸ்க் போன்ற பில்லியனர்களைத் தான் குறிப்பிடுகிறார் ஜிம்.

ஜிம்-ன் கருத்தை எதிரொலிக்கும் வகையில் இந்த வார துவக்கத்தில், தனியார் ஏரோஸ்பேஸ் நிறுவனமான ப்ளூ ஆரிஜினின் உரிமையாளரான பெசோஸ், க்யிக் லூனார் டிரான்ஸிட் மூலம் நிலவிற்கு தொழில்நிறுவனங்களை மாற்ற முடியும் என தெரிவித்தார்.

 உலோகத் தாதுக்கள் உற்பத்தி

உலோகத் தாதுக்கள் உற்பத்தி

'ஒப்பீட்டளவில் விண்வெளியில் மிகவும் சிக்கலான விஷயங்களை உருவாக்கி, பின்னர் அந்த பொருட்களை மீண்டும் பூமிக்கு அனுப்புவது மிகவும் மலிவானதாகவும் எளிமையாகவும் இருக்கும் 'என்கிறார் பெசோஸ் .மேலும் நிலவில் உள்ள தாதுக்களில், குறிப்பாக உலோகத் தாதுக்கள் உற்பத்தி, கட்டுமானம் மற்றும் பலவற்றில் பயனுள்ளதாக இருக்கும்.

பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.!

கணினி சிப்கள் தயாரிக்கப் பயன்படும் சிலிக்கான்

கணினி சிப்கள் தயாரிக்கப் பயன்படும் சிலிக்கான்

'நிலவில் டன் கணக்கில் பிளாட்டினம் வகையை சேர்ந்த உலோகங்கள், அரிய-பூமி உலோகங்கள் ஆகியவை இருக்கலாம். அவை பூமியில் மிகவும் மதிப்புமிக்கவை 'என்கிறார் ஜிம்.

பிளாட்டினத்தைத் தவிர, கணினி சிப்கள் தயாரிக்கப் பயன்படும் சிலிக்கான், அத்துடன் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கும், மூட்டு மாற்றீடு செய்வதற்கும் மற்றும் பலவற்றிற்கும் பயன்படுத்தப்படுகின்றடைட்டானியம் மற்றும் அலுமினியம் ஆகியவை நிலவில் அதிகளவு இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது

செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது

சீனாவுடனான வர்த்தக பதட்டங்களுக்கு மத்தியில் அந்த உலோகங்கள் அமெரிக்காவில் மிகவும் மதிப்புமிக்கவையாக மாறியுள்ளன. அரிய பூமி பொருட்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை சீனாவிலிருந்து கிடைக்கின்றன.

ஏற்கனவே நாசா அந்த உலோகங்களுக்காக நிலவை ஆய்வு செய்ய தனது பணியில் முன்னேறி, சந்திர மேற்பரப்பு மற்றும் சிறுகோள்களில் உள்ள இயற்கை வளங்களை தோண்டியெடுக்கும் பல்வேறு செயல்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளது.

ஆப்டிகல் மைனிங்

ஆப்டிகல் மைனிங்

நாசாவின் புதுமையான மேம்பட்ட கருத்துகள் (என்ஐஏசி) திட்டத்தின் மூலம், விண்வெளி சுரங்க பணியை யதார்த்தமாக்கக்கூடிய ரோபோ ரோவர்கள் மற்றும் சுரங்க தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை ஆராயத் தொடங்குவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக "ஆப்டிகல் மைனிங்" என்ற சிறந்த கருத்துரு, சந்திரனின் மேற்பரப்பை லேசர் ஒளிக்கதிர்களால் வெடிக்கவும், அதன் விளைவாக ஏற்படும் குப்பைகளை சேகரிக்கவும் பயன்படுத்தலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA-says-start-harvesting-precious-resources-like-platinum-moon-century : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X