செவ்வாய் கிரகத்தில் புழுதிப் புயல் ஓயவில்லை,ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தொடர்பின்றித் தவிக்கும் நாசா!

இந்தப் புழுதிப் பயல் ஆப்பர்சுனிட்டி ரோவரின் பாதையை முற்றிலுமாக மறைத்து விட்டது. சூரிய ஒளியை முற்றிலுமாக இழந்த ரோவர் புழுதியால் சூழப்பட்ட இருளால் தவித்து நிற்கிறது.

|

கடந்த ஜீன் மாதம் செவ்வாய் கிரகத்தில் மிகப்பெரும் புழுதிப் புயல் ஏற்பட்டது. அப்புழுதிப் புயலால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆப்பர்சுனிட்டி ரோவர் பெரும் பாதிப்பினைச் சந்தித்தது. அன்றிலிருந்து ரோவருடன் நாசாவுக்கு இருந்த தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆப்பர்சுனிட்டி ரோவருடன் தோடர்பை ஏற்படுத்த நாசா இதுவரை எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.

செவ்வாய் கிரகத்தில்  புழுதிப் புயல் ஓயவில்லை: நாசா!

2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட புயலின் பாதிப்பையும் அதிலிருந்து மீள எடுத்துக் கொண்ட காலப் பகுதியையும் ஆய்வு செய்த விஞ்ஞானிகள், தற்போது ஏற்பட்ட புழுதிப் புயலின் பாதிப்பு வருகின்ற செப்டம்பர் மாதத்தில் விலகும் என எதிர்பார்க்கின்றனர். தூசுப் படலம் முழுவதுமாக விலகி, ஆப்பர்சுனிட்டி ரோவரின் பேட்டரிகள் சார்ஜ் ஆனவுடன் அது மீண்டும் நாசாவுடன் தொடர்பு கொள்ளும் என இவர்கள் கூறுகின்றனர்.

மே 30- ஆம் தேதி அன்று சிறிய அளவில் உருவான புழுதிப் புயல் ஜீன் 20 ஆம் தேதியளவில் மிகப் பெரும் புயலாக மாறியதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தப் புழுதிப் பயல் ஆப்பர்சுனிட்டி ரோவரின் பாதையை முற்றிலுமாக மறைத்து விட்டது. சூரிய ஒளியை முற்றிலுமாக இழந்த ரோவர் புழுதியால் சூழப்பட்ட இருளால் தவித்து நிற்கிறது.

செவ்வாய் கிரகத்தில்  புழுதிப் புயல் ஓயவில்லை: நாசா!

ஆப்பர்சுனிட்டி ரோவர் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் சக்தியின் மூலம்தான் இயங்குகிறது. விஞ்ஞானிகள் தற்போது ஆய்வுப் பணிகளை நிறுத்திவிட்டு ரோவரின் பேட்டரியைப் பாதுகாப்பதிலும் அதனை மீண்டும் இயங்க வைக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளனர்.

ஜீலை மாத 18 ஆம் தேதி நிலவரப்படி, ரோவரின் பேட்டரிகள் இயங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை, என நாசா தெரிவித்துள்ளது.

கெட்டதிலும் ஒரு நல்ல விசயமாக புழுதிப் புயலால் எழுந்த தூசுப் படலத்தால் ரோவருக்கு ஒரு நன்மையும் அமைந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமான குளிர் இருக்கும். ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் குளிர் இருந்தால் ரோவரின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்படும். தற்போது இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமான கடுங்குளிர் நிலவுகிறது. ஆனால் ரோவரைச் சுற்றிலும் அடர்ந்த தூசுப் படலம் சூழ்ந்துள்ளதால் குளிரின் நேரடி பாதிப்பில் இருந்து ஆப்பர்சுனிட்டி ரோவர் தப்பித்துள்ளது.

ஆனால் 15 ஆண்டுகளாக செவ்வாய் கிரகத்தில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டு இருக்கும் ரோவருக்கு இது கடுமையான சோதனைக் காலமாக அமைந்து விட்டது. புழுதிப் புயலின் பாதிப்பிலிருந்து விடுபட பல வாரங்கள் அல்லது சில மாதங்கள் ஆகும் எனத் தெரிகிறது.

வானம் தெளிவடையத் தொடங்கினாலும், ஆப்பர்சுனிட்டி ரோவரின் சோலார் பேனலைச் சுற்றிப் படர்ந்திருக்கும் தூசுப் படலம் அதனுடைய உடனடிச் செயல்பாட்டுக்குத் தடையாக இருக்கும். அதனால் ரோவர் தன்னுடைய பேட்டரியை ரீசார்ஜ் செய்வதில் தாமதம் ஏற்படும். பலமான காற்று வீசினால் தூசுப் படலம் அகலும் என்றாலும் அது முழுமையான தேவையைப் பூர்த்தி செய்யாது என நாசா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

செவ்வாய் கிரகத்தில்  புழுதிப் புயல் ஓயவில்லை: நாசா!

நாசா நிலையத்தில் உள்ள ஆப்பர்சுனிட்டி ரோவரின் ஆய்வுக் குழுவினர், எப்பொழுது ரோவரில் இருந்து சிக்னல் வரும் என்று ஆவலுடன் காத்திருக்கின்றனர். அதே வேளையில் செவ்வாய் கிரக ஆய்வில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், எப்போதாவது ஏற்படும் இது போன்ற புழுதிப் புயலைப் பற்றி ஆய்வு செய்யக் கிடைத்த அரிய சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்குடன் புழுதிப் பயல் பற்றிய தங்களுடைய ஆய்வைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

The Mars Reconnaissance Orbiter (MRO), Mars Odyssey, Mars Atmosphere and Volatile EvolutioN (MAVEN) போன்ற விண்வெளி ஆய்வு ஓடங்கள் செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட புழுதிப் புயலையும், அதனைத் தொடர்ந்து அங்கு ஏற்பட்டுள்ள வானிலை மாற்றங்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

க்யூரியாசிட்டி ரோவரும் (Curiosity rover) செவ்வாய் கிரக மேற்பரப்பில் ஏற்பட்டுள்ள புழுதிப் புயலைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA Says No Contact With Mars Opportunity Rover Since Dust Storm Hit: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X