2033 ஆம் ஆண்டில் மனிதர்களைச் செவ்வாயில் தரையிறக்கும் நாசா.!

மனிதர்களைச் செவ்வாயில் 2033 ஆம் ஆண்டிற்குள் தரையிறக்கும் என்று தெரிவித்துள்ளது.

|

நாசா விண்வெளி மையம், அமெரிக்க விண்வெளி வீரர்களை 2024 ஆம் ஆண்டுக்குள் நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மனிதர்களைச் செவ்வாயில் 2033 ஆம் ஆண்டிற்குள் தரையிறக்கும் என்று தெரிவித்துள்ளது.

நிலவின் திட்டம் 2024

நிலவின் திட்டம் 2024

நிலவில் மனிதர்களை இறக்கும் இலக்கை 2024 ஆம் ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்று நாசா தெரிவித்துள்ளது. நாசாவின் 2020 ஆம் ஆண்டின் நிதியாண்டில் உள்ள வரவு செலவுத் திட்டத்தில் செவ்வாய் திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் நிலவின் திட்டம்

ஐந்து ஆண்டுகளுக்குள் நிறைவடையும் நிலவின் திட்டம்

நிலவின் திட்டத்தை அமெரிக்கா விண்வெளி வீரர்களுடன் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்குள் முடித்தாக வேண்டும் என்று நாசாவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

செவ்வாயின் திட்டம்

செவ்வாயின் திட்டம்

சரியான நேரத்தில் நிலவின் திட்டத்தை முடித்தால் தான் செவ்வாயின் திட்டத்தை உரிய நேரத்தில் முடிக்க இயலுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தயாராகி வரும் டெல்டா IV & ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கோன் ஹெவி

தயாராகி வரும் டெல்டா IV & ஸ்பேஸ்எக்ஸ் ஃபால்கோன் ஹெவி

டெல்டா IV கனரக ராக்கெட்டுகள் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கோன் ஹெவி போன்ற வணிக ராக்கெட்டுகள் உதவியுடன் செவ்வாய் திட்டத்தை வெற்றியடையச் செய்ய அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. தொழில்நுட்ப ரீதியான சவால்கள், உந்துதல் திறன், ஏவுதளம் திறன் மற்றும் டாக்ஸிங் திறன் போன்ற அதீத சிறப்பம்சங்களுடன் தயாராகி வருகிறது.

21 பில்லியன் கோடி செலவில் தயாராகும் செவ்வாய் திட்டம்

21 பில்லியன் கோடி செலவில் தயாராகும் செவ்வாய் திட்டம்

நிலவின் திட்டம் மற்றும் செவ்வாய் திட்டம் என இரண்டு திட்டங்களுக்கும் சேர்த்து 21 பில்லியன் கோடி செலவாகும் என்று நாசா தனது நிதிநிலை கூட்டத்தில் தெரிவித்துள்ளது. நிலவின் திட்டத்தை 2028 ஆம் ஆண்டில் முடித்துவிட்டு செவ்வாய் திட்டத்தை 2033 ஆம் ஆண்டிற்குள் நிறைவு செய்யுமென்று நாசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
NASA says it can put humans on Mars by 2033 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X