சூப்பர் எர்த் கண்டுபிடிப்பு! வசிக்கத்தக்க கிரகம்: இதோ வீடியோ ஆதாரம்.!

|

வெறும் 31 ஒளி ஆண்டுகள் தொலைவில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிக நெருக்கமான உலகங்களில் ஒன்றின் மேற்பரப்பில் திரவ நீர் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

நாசாவின் டெஸ் அல்லது டிரான்ஸ்டிங் எக்ஸ்ப்ளெட்

நாசாவின் டெஸ் அல்லது டிரான்ஸ்டிங் எக்ஸ்ப்ளெட்

நாசாவின் டெஸ் அல்லது டிரான்ஸ்டிங் எக்ஸ்ப்ளெட் சர்வே சாட்டிலைட் என அழைக்கப்படும் சூப்பர் சக்திவாய்ந்த சுற்றுப்பாதை தொலைநோக்கியானது வேற்றுகிரகங்களை கண்டறிய விண்வெளியில் உலவி வரும் நிலையில், ஹைட்ரா விண்மீன்தொகுப்பில் உள்ள நட்சத்திரத்திற்கு அருகில் ஒரு புதிய கிரகம் சுற்றிவருவதை கண்டறிந்துள்ளது. இதை உறுதிபடுத்துவதற்காக விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, அவர்கள் மேலும் இரு கிரகங்கள் சுற்றிவருவதை கண்டுபிடித்தனர்.

 திரவ நீர் இருக்கலாம்

திரவ நீர் இருக்கலாம்

GJJ 357 D என்று அழைக்கப்படும் அந்த கிரகங்களில் ஒன்றில், ஒரு தடிமனான வளிமண்டலமும், பாறைகளால் ஆனதாகவும் இருந்தால் அதில் திரவ நீர் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஜே3(2017) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டதுசாம்சங் கேலக்ஸி ஜே3(2017) ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது

டெஸ் மூலம் மறுவடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே கண்டறியப்பட்ட மொத்தம் 4025கிரகங்களில், இன்றுவரை உறுதிசெய்யப்பட்ட 45 நெருக்கமாக எக்ஸோ ப்ளானெட்களில் இதுவும் ஒன்று.


கிரகங்கள் நட்சத்திரங்களை கடந்துசெல்லும் போது அதன் பிரகாசத்தில் ஏற்படும் சிறு மாற்றங்களை தொலைநோக்கிகள் மூலம் கண்காணித்து கிரகங்களை கண்டறியும் "டிரான்ஸிட்"முறையை பயன்படுத்தி கண்டறியப்பட்ட மூன்றாவது மிக நெருக்கமான கிரகம் இதுவாகும். கெப்லர் தொலைநோக்கியில் இந்த தொழில்நுட்பத்தை முதலில் முன்னெடுத்தாலும், அது டெஸ் மூலம் மறுவடிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

நம்பிக்கையுள்ள கிரகம்

நம்பிக்கையுள்ள கிரகம்

இந்த நம்பிக்கையுள்ள கிரகம் அதன் நட்சத்திரத்தின் "வசிக்கத்தக்க பகுதியில்",பாறை கிரகத்தின் திரவ நீர் உள்ளவாறு சரியான மேற்பரப்பு வெப்பநிலையில் இருப்பதற்கான தொலைவில் உள்ளது.

குழுவின் உறுப்பினர் டயானா

குழுவின் உறுப்பினர் டயானா

"GJ 357 D கிரகம் அதன் நட்சத்திரத்தின் வாழ்விட மண்டலத்தின் வெளிப்புற விளிம்பில் அமைந்துள்ளது. அங்கு சூரியனில் இருந்து புதன் பெறும் அளவிற்கு, இந்த கிரகம் அதன் நட்சத்திரலிருந்து.

நட்சத்திரத்தை ஆற்றல் பெறுகிறது." அதன் நட்சத்திரத்தைச் சுற்றியுள்ள என்கிறார் இந்த கிரகத்தை கண்டுபிடித்த குழுவின் உறுப்பினர் டயானா.

-53 டிகிரி செல்சியஸ்

-53 டிகிரி செல்சியஸ்

"இந்த கிரகத்தில் அடர்த்தியான வளிமண்டலம் அமைந்திருந்தால், அது கிரகத்தை போதுமான அளவிற்கு சூடாகவும் அதன் மேற்பரப்பில் திரவ நீரை அனுமதிக்க போதுமான வெப்பத்தைத் தக்கவைக்க முடியுமா என்று தீர்மானிக்கும் எதிர்கால ஆய்விற்கு வழிவகுக்கும்" என்று டியானா கூறுகிறார்.


இருப்பினும் இந்த கிரகத்தில் எந்த வளிமண்டலமும் இல்லை என்றால், அதன் மேற்பரப்பு நீரின் உறைபனி புள்ளிக்கு கீழே , சுமார் -64 டிகிரி பாரன்ஹீட் (-53 டிகிரி செல்சியஸ்) என்ற அளவில் இருக்கும்.

GJ 357 D-ன் நிறை குறைந்தபட்சம் பூமியை விட 6.1மடங்கு அதிகமாக இருக்கும் மற்றும் இந்த கிரகம் அதன் சிறு நட்சத்திரத்தை ஒவ்வொரு 55.7 நாட்களுக்கு சுற்றிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞானிகள் மேலும் ஆராயாமல் அதைப் பற்றி வேறு எதையும் சொல்ல முடியாது.

பாதி தூரமே கடந்துள்ள டெஸ்

பாதி தூரமே கடந்துள்ள டெஸ்

நாசாவின் மிக சக்தி வாய்ந்த கிரக வேட்டை தொலைநோக்கியான டெஸ், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களை ஆராய விண்வெளியில் உலவிவருகிறது.

இந்த தொலைநோக்கியானது விண்வெளியின் ஒரு பகுதியை, மற்றொரு புதிய பகுதியை ஆராய நகர்த்துவதற்கு முன்பு,ஒரு முறை மட்டும் 27 நாட்களுக்கு ஆராயும். நாசாவின் கிராஃபிக்-ல் கீழே காட்டப்பட்டுள்ளபடி, வானத்தை ஒவ்வொரு அரை பாகத்தையும்(வடக்கு மற்றும் தெற்கு அரைபாகம்) 13பிரிவுகளாக பிரிக்கிறது. இந்த மாதம் தெற்கு அரைப்பகுதியில் தனது பயணத்தை முடித்துள்ள இந்த விண்கலம் வடக்கு நோக்கி திரும்பியுள்ளது.

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தம் கொண்ட சாதனத்தில் வீடியோக்களை எடிட் செய்வது எப்படி?ஆண்ட்ராய்டு இயங்குதளத்தம் கொண்ட சாதனத்தில் வீடியோக்களை எடிட் செய்வது எப்படி?

புதிய கிரகங்கள் கண்டறிந்துள்ளது

புதிய கிரகங்கள் கண்டறிந்துள்ளது

அடுத்த ஆண்டு இந்த நேரத்தில் இந்த மிஷன் முடிவடைகிற போது, டெஸ் 85 சதவிகித வானத்தை கண்காணித்து முடித்திருக்கும். இதுவரை இந்த தொலைநோக்கி 850 சாத்தியமான புதிய கிரகங்கள் கண்டறிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
NASA Satellite Discovers First Nearby Super Earth : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X