பெய்ரூட் விபத்தின் அழிவை சாட்டிலைட் படத்தின் மூலம் வெளியிட்ட நாசா!

|

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த வாரம் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்யக்கோரி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளது. தற்பொழுது அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம், ARIA செயற்கைக்கோள் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதியின் ரேடார் தரவு கொண்ட வரைபடத்தை தற்பொழுது வெளியிட்டுள்ளது.

சேதமடைந்த பகுதிகளை அடையாளம் காட்டிய நாசா

சேதமடைந்த பகுதிகளை அடையாளம் காட்டிய நாசா

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், தி அட்வான்ஸ்ட் ரேபிட் இமேஜிங் அண்ட் அனாலிசிஸ் (ARIA) குழு, சிங்கப்பூரின் பூமி ஆய்வகத்துடன் இணைந்து, பாதிக்கப்பட்ட பகுதியின் வரைபடத்தை உருவாக்கச் செயற்கைக்கோள் மூலம் ரேடார் தரவை நாசா பகுப்பாய்வு செய்துள்ளது. "இது போன்ற வரைபடங்கள் மக்களுக்கு உதவி தேவைப்படக்கூடிய மோசமாகச் சேதமடைந்த பகுதிகளை அடையாளம் காண உதவும்" என்று நாசா ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பிக்சல்கள் கூறும் தகவல்

சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் பிக்சல்கள் கூறும் தகவல்

வெளியிட்டுள்ளாள் வரைபடத்தில் அடர் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் ஆகிய மூன்று நிறங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெய்ரூட் துறைமுகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அடர் சிவப்பு நிறத்தில் காணப்படும் பிக்சல்கள் மிகக் கடுமையான சேதத்தைக் குறிக்கின்றன. ஆரஞ்சு நிறத்தில் உள்ள பகுதிகள் மிதமான சேதத்தையும், மஞ்சள் நிறத்தில் உள்ள பகுதிகள் ஓரளவு குறைவான சேதத்தைச் சந்தித்த இடங்களாக வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா? வேண்டாமா?சில்லறை கடைகளில் விற்பனைக்கு வந்துள்ள நோக்கியா 5310 போன் நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அழிவின் தரவுகள்

குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அழிவின் தரவுகள்

தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில் காணப்படும் ஒவ்வொரு வண்ண பிக்சலும் 30 மீட்டர் (33 yards) பரப்பளவைக் குறிக்கிறது. இந்த வரைபடத்தில் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) செயலாக்கிய மாற்றியமைக்கப்பட்ட கோப்பர்நிக்கஸ் சென்டினல் தரவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குண்டுவெடிப்பால் ஏற்பட்ட அழிவின் தரவுகள் பல செயற்கைக்கோள் புகைப்படங்களிலும் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட படம்

சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட பிளானட் நிறுவனத்தால் இயக்கப்படும் ஸ்கைசாட் விண்கலம், குண்டு வெடிப்புக்கு முன்னும் பின்னும் பெய்ரூட் துறைமுகத்தின் விரிவான படங்களைக் கைப்பற்றியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்த ஒரு நாள் கழித்து பிளானட் என்ற டிவிட்டர் பக்கம் அந்த புகைப்படங்களை டிவிட்டரில் வெளியிட்டுள்ளது.கொலராடோவைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான மாக்சரும் பெய்ரூட்டில் ஏற்பட்ட விபத்தின் படங்களைப் பகிர்ந்து கொண்டது.

ஆன்லைன் வகுப்பில் மல்லாந்து படுத்து தூங்கிய மாணவன்! வைரல் ஆகும் புகைப்படம்!ஆன்லைன் வகுப்பில் மல்லாந்து படுத்து தூங்கிய மாணவன்! வைரல் ஆகும் புகைப்படம்!

அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் போராட்டம்

அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் போராட்டம்

கடந்த வாரம் லெபனான் தலைநகரில் ஏற்பட்ட வெடிப்புக்குக் காரணம் துறைமுகக் கிடங்கில் வைக்கப்பட்டிருந்த 2,000 டன்களுக்கும் அதிகமான அம்மோனியம் நைட்ரேட் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விபத்தில் சுமார் 6,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பெய்ரூட் துறைமுகத்தில் நேரிட்ட பயங்கர வெடிவிபத்துக்கு அதிகாரிகளின் ஊழல் மற்றும் அலட்சியப் போக்கே காரணம் எனக் கூறி அரசு அலுவலகங்கள் மீது பொதுமக்கள் கற்களை வீசி போராட்டம் செய்து வருகின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA satellite data maps clearly show the damage caused in Beirut blast : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X