பூமியிலிருந்து 14 பில்லியன் மைல் தொலைவில் வாயேஜர் 1 ப்ரோப் பதிவு செய்த விசித்திரமான ஒலி..

|

நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் விண்கலம் விண்வெளியில் இருந்து வரும் வினோதமான ஹம்மிங் ஒலியை தற்பொழுது பதிவு செய்துள்ளது. நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் சுமார் 44 ஆண்டுகளுக்கு முன்பு வோயேஜர் 1 ப்ரோபை விண்வெளி ஆய்வுக்காக விண்வெளியில் அறிமுகப்படுத்தியது. இது நமது சூரிய மண்டலத்திலிருந்து வெளியேறி சுமார் 9 ஆண்டுகள் கழிந்துவிட்டது. பூமியிலிருந்து மனிதனால் உருவாக்கப்பட்ட மிகத் தொலைதூர பொருளாக விண்வெளியில் பயணிக்கும் ஒரே பொருள் என்றால் அது நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் மட்டும் தான்.

நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் பதிவு செய்த விசித்திரமான சத்தம்

நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் பதிவு செய்த விசித்திரமான சத்தம்

அப்போதிலிருந்து, நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் விண்வெளியின் வெறுமையை ஆராய்ந்து வருகிறது. நமது சூரிய மண்டலத்திற்கு வெளியே உள்ள உலகைப் புரிந்துகொள்ள உதவும் மதிப்புமிக்க தரவை இன்னும் தொடர்ந்து பூமிக்கு அனுப்பி வருகிறது. விஞ்ஞானிகள் இப்போது தொலைதூர விண்கலத்தில் உள்ள கருவிகள் மூலம் விண்மீன் விண்வெளியில் இருக்கும் சிறிய அளவிலான வாயுவின் நிலையான அதிர்வு மூலம் உருவாகும் "தொடர்ச்சியான ஒரு ஹம்மிங் ஒலி" இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

வாயேஜர் 1 அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்

வாயேஜர் 1 அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்

நேச்சர் ஆஸ்ட்ரோனமி இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சியின் படி, இந்த தொடர்ச்சியான ஹம்மிங் என்பது பிளாஸ்மா அலைகள் மாறுபடும் ஒலி என்றும், இவை மிகவும் பலவீனமானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார்னெல் பல்கலைக்கழகம் தலைமையிலான குழு 14 பில்லியன் மைல் தொலைவில் இருந்து வாயேஜர் 1 அனுப்பிய தரவுகளை ஆய்வு செய்து வருகிறது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

வாயேஜர் 1 ப்ரோப் கைப்பற்றிய அந்த ஒலியை நீங்களும் கேட்க

வாயேஜர் 1 ப்ரோப் கைப்பற்றிய அந்த ஒலியை நீங்களும் கேட்க

ஸ்டெல்லா கோச்ஆக்கர், நியூயார்க் கார்னெல் பல்கலைக்கழகம், மற்றும் ஆராய்ச்சி ஆசிரியர்களில் ஒருவரான ஒரு மருத்துவ ஆய்வு மாணவர் கூறுகையில், இந்த ஒலி மிகவும் மங்கலான சக்தியுடன் இருக்கிறது. இது ஒரு குறுகிய அதிர்வெண் ஒலி என்று கூறப்படுகிறது. நாசாவின் வாயேஜர் 1 ப்ரோப் கைப்பற்றிய அந்த ஒலியை நீங்களும் கேட்க விரும்பினால், இங்கு கொடுக்கப்பட்டுள்ள லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள். 'வாயேஜர் 1 ப்ரோப் கைப்பற்றிய அந்த ஒலி'

வோயேஜர் 1 விண்வெளியில் மேற்கொண்ட பயணம்

வோயேஜர் 1 விண்வெளியில் மேற்கொண்ட பயணம்

வோயேஜர் 1 விண்கலம் 1979 ஆம் ஆண்டில் இது ஜூபிடரை கடந்து பறந்தது, அடுத்த ஆண்டு சனி கிரகத்தைக் கடந்து சென்றது, ஹீலியோபாஸைக் கடப்பதற்கு முன் - சூரிய மண்டலத்தின் விண்மீன் விண்வெளியுடன் எல்லையை ஆகஸ்ட் 2012 இல் கடந்தது. இது இப்போது விண்மீன் ஊடகத்தை அடைந்துள்ளது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

இன்டெர்ஸ்டெல்லார் பகுதிக்கு சென்ற மனிதனின் முதல் விண்கலம்

இன்டெர்ஸ்டெல்லார் பகுதிக்கு சென்ற மனிதனின் முதல் விண்கலம்

அதாவது விண்வெளியில் உள்ள இன்டெர்ஸ்டெல்லார் (interstellar) நிலையை அடைந்துள்ளது. முன்னதாக, ஹீலியோபாஸைக் கடந்ததும், வாயேஜர் 1 இன் பிளாஸ்மா அலை அமைப்பு வாயு மாற்றங்களைக் கண்டறிந்தது, ஆனால் அவை நமது சூரியனால் ஏற்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASAs Voyager 1 Space Probe Detects Persistent Hum in Space : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X