விண்வெளியில் செழிக்கும் விவசாயம்! விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்!

|

விண்வெளியில் நீண்ட நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கென்று பிரத்தியேக உணவு முறையை நாசா கடைப்பிடித்து வருகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில பதப்படுத்திய உணவு வகைகளை மட்டுமே விண்வெளியில் உள்ள வீரர்களுக்குப் சாப்பிட விண்வெளிக்கு பூமியிலிருந்து அனுப்பப்படுகிறது. அந்த வகையில் இப்பொழுது விண்வெளியில் வளர்ந்த கீரையும் இணைக்கப்படவுள்ளது.

விண்வெளியல் வளர்ந்த கீரையா?

விண்வெளியல் வளர்ந்த கீரையா?

என்னப்பா சொல்ற விண்வெளியில வளர்ந்த கீரையானு கேட்குறீங்களா? ஆமா, விண்வெளியில் வளர்ந்த ஊட்டச்சத்து மிகுந்த பச்சை பசும் கீரையே தான். இதுவரை விண்வெளியில் உள்ள வீரர்களுக்கு உறைந்த உலர்ந்த ஐஸ்கிரீம், திரவ உப்பு, மிளகு, மற்றும் டீஹைடிரேட்டட் பிரான் காக்டெய்ல் போன்ற சுவையான உணவுகளை மட்டுமே வழங்கி வந்தனர். இப்போது இந்த மெனு விரிவுபடுத்தப்படவுள்ளது.

நாசாவின் வெஜ்ஜீ திட்டம்

நாசாவின் வெஜ்ஜீ திட்டம்

வெஜ்ஜீ என்ற திட்டத்தின் பெயரில் தான் நாசா கென்னடி விண்வெளி மையத்தின் கீரை வளர்க்கும் திட்டத்தை முன்னணி விஞ்ஞானி ஜியோயா மாஸா ஆராய்ச்சி செய்துவருகிறார். விண்வெளிக்குச் சென்று அதிக நாட்கள் தங்கி இருக்கும் வீரர்களுக்கு அதிக ஊட்டச்சத்துகள் உள்ள உணவுகளை எவ்வாறு வழங்குவது என்று இவரின் தனிக் குழு 2014ம் ஆண்டு முதல் ஆராய்ச்சி செய்து வருகிறது.

உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?உங்கள் போனில் வரும் கொரோனா காலர் டியூனை OFF செய்வது எப்படி?

விண்வெளியில் வளரும் உணவிற்கு முக்கியத்துவம்

விண்வெளியில் வளரும் உணவிற்கு முக்கியத்துவம்

குறிப்பாக, 2024 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்தில் மனிதர்களைத் தரையிறக்க நாசா திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டிற்குள் செவ்வாய் கிரகத்திற்கும் மனிதர்களை அனுப்ப நாசா வேகமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த திட்டங்களின் கீழ் விண்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு, விண்வெளியில் வளரும் உணவு பெரிதும் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.

ஊட்டச்சத்துகள் குறைவதை சரி செய்ய இந்த புது முயற்சி

ஊட்டச்சத்துகள் குறைவதை சரி செய்ய இந்த புது முயற்சி

இந்த திட்டங்களின் கீழ் விண்வெளிக்கு அனுப்பப்படும் வீரர்கள் அதிக நாட்கள் விண்வெளியில் தங்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த காலகட்டத்தில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை இவர்கள் உட்கொள்ள வேண்டிய நிலை தான் உள்ளது. அதிக நாட்கள் பதப்படுத்தப்படுவதால் உணவின் தரம், சுவை, அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளும் குறைகிறது. இதனால் வீரர்களின் உடல் எடை குறைகிறது, ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!இனி ஆமைபோல நடக்காதே எனக் கூறவேண்டாம்.! 37,000 கிமீ பயணித்த அடிப்பட்ட ஆமை.! விஞ்ஞானிகள் பிரமிப்பு.!

விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை

விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை

இந்த நிலையைச் சரி செய்யக் கடந்த 2014ம் ஆண்டு முதல் விண்வெளியில் கீரை வளர்க்கும் செய்முறை நடந்து வருகிறது. வீரர்கள் தங்கியுள்ள விண்கலனில், தனி இடம் அமைக்கப்பட்டு பெரிய பீங்கான் தொட்டிகளில் பூமியிலிருந்து எடுத்துச் சென்ற மண்ணை நிரப்பி, நீர் பாசன முறையைப் பயன்படுத்தி எல்.ஈ.டி. விளக்குகளின் வெளிச்சத்தில் இந்த கீரைகளை விண்வெளி வீரர்களே வளர்த்துள்ளனர்.

பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது?

பரிசோதனை முடிவுகள் என்ன சொல்கிறது?

முதல் இந்த விண்வெளியில் வளர்ந்த கீரை, பூமிக்கு அனுப்பப்பட்டுப் பரிசோதிக்கப்பட்டுள்ளது. பூமியில் வளர்ந்த கீரை வகைகளைப் போலவே இந்த விண்வெளி கீரைகளும் பாதுகாப்பானது, சத்தானது மற்றும் சுவையானது என்று தற்பொழுது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கீரைகள் வீரர்கள் உட்கொள்ள உகந்தது என்று பரிசோதனை முடிவுகள் கூறியுள்ளது. விண்வெளியில் கீரை வளர்க்கும் திட்டம் ஒரு வழியாக வெற்றியைக் கண்டுள்ளது.

அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!அடேங்கப்பா 350 ஜிபி டேட்டா: Jio அதிரடி அறிவிப்பு., குவியும் வாடிக்கையாளர்கள்!

விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்!

விண்வெளி கீரையை இப்படி தான் சாப்பிடணும்!

இந்த விண்வெளி கீரைகள் அறுவடை செய்யப்படுவதற்கு முன்பு 33 முதல் 56 நாட்கள் வரை தடையில்லாமல் வளர்க்கப்படுகிறது. விண்வெளியில் செடி வைகையை வீரர்கள் வளர்ப்பது அவர்களின் மனநலத்திற்கும் நல்லது என்று ஜியோயா மாஸா கூறியுள்ளார். விண்வெளி வீரர்கள் இந்த கீரைகளை சாப்பிடுவதற்கு முன்பு இலைகளை சானிடைசர் மூலம் துடைத்த பின்னரே சாப்பிட அனுமதிக்கப்படுகிறார்கள்.

 நாசாவின் அடுத்த கட்ட விண்வெளி விவசாயம்

நாசாவின் அடுத்த கட்ட விண்வெளி விவசாயம்

விண்வெளியில் எந்த வீரரும் நோய்வாய்ப்படுவதை விஞ்ஞானிகள் விரும்புவதில்லை, இதனால் தான் இந்த முறை கட்டாயம் பின்பற்றப்படுகிறது என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக விண்வெளியில் பாக் சோய், டிராகன் கீரை, வசாபி கடுகு, சிவப்பு ரஷ்ய காலே, தக்காளி மற்றும் பெப்பர் போன்ற தாவர வகைகளை வளர்க்க நாசா திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nasas Veggie System Is Growing Space Grown Lettuce To Give Astronauts In ISS : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X