உங்கள் பிறந்தநாள் அன்று விண்வெளியில் என்ன நடந்தது என்று தெரியவேண்டுமா? உடனே இதே ட்ரை செய்யுங்கள்..

|

நாசாவின் ஹப்பிள் டெலெஸ்கோப் கடந்த மாதம் ஏப்ரல் 24 ஆம் தேதி தனது 31வது பிறந்தநாளைக் கொண்டாடியது, நிறையப் பேர் இதை அறிந்திருக்கவில்லை. ஹப்பிள் டெலெஸ்கோப் விண்வெளியில் பிரபஞ்சத்தை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் ஆராய்கிறது. இதன் பொருள் ஹப்பிள் ஆண்டின் ஒவ்வொரு நாளும் புதிதாக விண்வெளியில் நிகழும் நிகழ்வுகளைப் படம் பிடித்து வருகிறது, அதில் உங்கள் பிறந்தநாளும் அடங்கும். அப்படி, உங்களின் பிறந்தநாள் அன்று விண்வெளியில் ஹப்பிள் என்ன நிகழ்வைப் படம்பிடித்தது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறதா? வாருங்கள் பார்க்கலாம்.

உங்கள் பிறந்தநாளில் விண்வெளியில் நாசாவின் ஹப்பிள் என்ன கவனித்தது?

உங்கள் பிறந்தநாளில் விண்வெளியில் நாசாவின் ஹப்பிள் என்ன கவனித்தது?

உங்கள் பிறந்தநாளில் விண்வெளியில் நாசாவின் ஹப்பிள் என்ன கவனித்தது என்பதை நீங்கள் உண்மையில் கண்டுபிடிக்க நாசா ஒரு புதிய டூலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஆன்லைன் கருவி நாசாவால் ஹப்பிளின் 30வது ஆண்டுவிழாவின் போது வெளியிடப்பட்டது. மேலும், இந்த கருவியைப் பயன்படுத்தி நீங்கள் ஹப்பிள் பிரபஞ்சத்தில் கவனித்த அனைத்து அண்ட அதிசயங்கள் பற்றி நொடியில் அறிந்து கொள்ளாம்.

ஹப்பிள் டெலஸ்கோப் என்றால் என்ன? அது விண்வெளியில் என்ன செய்கிறது?

ஹப்பிள் டெலஸ்கோப் என்றால் என்ன? அது விண்வெளியில் என்ன செய்கிறது?

இது உண்மையில் பிரபஞ்சம் பற்றிய தகவல்களை அறிவதற்கு உதவுவதோடு, உங்களின் பிறந்தநாளில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கும் வழிவகுத்து இருக்கிறது.ஹப்பிள் டெலஸ்கோப் பற்றித் தெரியாதவர்களுக்கு, இது நாசாவின் அதிநவீன டெலஸ்கோப் ஆகும். ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி என்பது விண்வெளியில் இருக்கும் ஒரு மிகப் பெரிய தொலைநோக்கி ஆகும். இது 1990 இல் தொடங்கப்பட்டது. உண்மையைச் சொல்லப்போனால், இது ஒரு பள்ளி பேருந்து அளவுக்கு பெரியது.

இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?இதுதான் பூமியின் அதிசயம்: 1.6 பில்லியன் ஆண்டு பழமையான நீர் கண்டுபிடிப்பு.! செவ்வாய் ரகசியங்களை கட்டவிழ்க்குமா?

கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்ககளை கண்காணிக்கும் ஹப்பிள்

கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்ககளை கண்காணிக்கும் ஹப்பிள்

இந்த ஹப்பிள் டெலஸ்கோப் பூமியை விநாடிக்கு 5 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது என்று நாசா தெரிவித்துள்ளது. நமது பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் விண்மீன் திரள்களின் தெளிவான புகைப்படங்களை இதுவரை ஹப்பிள் தான் படம்பிடித்துள்ளது.

உயர் தெளிவுடன் மற்றும் மிருதுவான படங்களை எடுக்க ஹப்பிள் டெலஸ்கோப்பில் மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை நாசா பயன்படுத்தியுள்ளது.

ஹப்பிள் கைப்பற்றிய அழகான 'ஈவில்ஸ் ஐய்' (evils eye) புகைப்படம்

ஹப்பிள் கைப்பற்றிய அழகான 'ஈவில்ஸ் ஐய்' (evils eye) புகைப்படம்

உதாரணமாக, ஹப்பிள் கைப்பற்றிய ஒரு அழகான விண்வெளி புகைப்படம் என்றால் அது 'ஈவில்ஸ் ஐய்' (evils eye) என்று அழைக்கப்படும் "தீய கண்" விண்மீனின் இந்த அதிர்ச்சியூட்டும் புகைப்படம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தைப் பார்த்தால் விஷயம் உங்களுக்கே புரியும். இந்த விண்மீன் கோமா பெரனிசஸ் விண்மீன் தொகுப்பில் 17 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!மாடி வீட்டு மக்களே ஏசி இன்னும் வாங்கலையா? அப்ப இனிமேல் வாங்க வேண்டாம்.! வந்துவிட்டது புதிய கண்டுபிடிப்பு.!

பிரபஞ்சத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ஹப்பிள் டெலஸ்கோப்

பிரபஞ்சத்தை 24 மணி நேரமும் கண்காணிக்கும் ஹப்பிள் டெலஸ்கோப்

நட்சத்திரங்கள் பிறப்பதைப் பார்ப்பது முதல் பூமியிலிருந்து டிரில்லியன் கணக்கான மைல் தொலைவில் உள்ள விண்மீன் திரள்களைக் கவனிப்பது வரை, ஹப்பிள் விண்வெளியில் நிகழும் பல நிகழ்வுகளைக் கண்காணித்து வருகிறது. இது பிரபஞ்சத்தை 24 மணி நேரமும், வாரத்தில் 7 நாட்களும் ஆராய்கிறது. இதன் பொருள் ஹப்பிள் ஆண்டின் ஒவ்வொரு நாளும் படம் பிடிக்கிறது, அதில் உங்கள் பிறந்தநாளும் ஒன்றாகும்.

உங்கள் பிறந்தநாளில் ஹப்பிள் விண்வெளியில் என்ன நிகழ்வைக் கண்டது என்று பார்க்கலாமா?

உங்கள் பிறந்தநாளில் ஹப்பிள் விண்வெளியில் என்ன நிகழ்வைக் கண்டது என்று பார்க்கலாமா?

நமது பிரபஞ்சத்தின் காட்சிகளைக் கைப்பற்றுவதைத் தவிர, விண்வெளி பற்றிய ஆழமான நுண்ணறிவுகளைப் பெற விஞ்ஞானிகளுக்கு ஹப்பிள் படங்கள் உதவியுள்ளன.நாசாவின் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி பற்றியும், விண்வெளியில் இது என்ன-என்ன வேலைகளைச் செய்து வருகிறது என்பது இப்போது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்கள் பிறந்தநாளில் ஹப்பிள் விண்வெளியில் என்ன நிகழ்வைக் கண்டது என்பதை இப்போது பார்க்கலாம்.

இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்இப்படி கூட நடக்குமா?ஆண் சவப்பெட்டிக்குள் இருந்த 'கர்ப்பிணி பெண்' மம்மி.!வரலாற்றில் நம்பமுடியாத புதிய திருப்பம்

உங்கள் பிறந்தநாளில் விண்வெளியில் என்ன நடந்தது என்பதை தெரிய, இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்

உங்கள் பிறந்தநாளில் விண்வெளியில் என்ன நடந்தது என்பதை தெரிய, இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள்

இதைத் தெரிந்துகொள்ள நீங்கள் உத்தியோகப்பூர்வமான நாசாவின் இணையதளத்தைப் பார்வையிட வேண்டும். இந்த லிங்க்-ஐ கிளிக் செய்யுங்கள் What Did Hubble See on Your Birthday?
அதில் உங்கள் பிறந்த நாள் மற்றும் மாதத்தை உள்ளிட வேண்டும், பின்னர் 'Submit' என்பதைக் கிளிக் செய்ய வேண்டும். அவ்வளவுதான்! நாசாவின் ஹப்பிள் கருவி உங்கள் பிறந்தநாளில் ஹப்பிளின் என்ன படம்பிடித்தது என்று காண்பிக்கும்.

பூமியின் மீது விழப்போகும் சீன ராக்கெட்.. எங்கு விழும்? எப்போது விழும்? யாருக்கெல்லாம் இதனால் ஆபத்து?பூமியின் மீது விழப்போகும் சீன ராக்கெட்.. எங்கு விழும்? எப்போது விழும்? யாருக்கெல்லாம் இதனால் ஆபத்து?

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

உதாரணத்திற்கு, நாசாவின் ஹப்பிள் கருவியில் நீங்கள் மே 15 ஐ உள்ளிட்டவுடன், மே 15, 2008 அன்று வியாழன் மீது ஹப்பிள் சிவப்பு புள்ளிகளைக் கவனித்ததை இது காட்டுகிறது. இந்த அற்புதமான விஷயத்தை, உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், இந்த கருவியுடன் உங்களின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிறந்தநாளையும் நீங்கள் சோதனை செய்து அவர்களுக்கு விண்வெளியின் அழகைக் காண்பித்து மகிழுங்கள்.

Best Mobiles in India

English summary
NASAs This Tool Tells You What Hubble Telescope Observed In Space On Your Birthday : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X