'குழம்பிப்போன' சூரிய அவதானிப்பு, பேரழிவு காரணமில்லை, பின்..?!

|

வழக்கமாக செயற்கைகோள்கள் மற்றும் விண்வெளி ஆய்வகங்கள் செயல் இழந்துவிட்டன என்றால் அதற்கு எதாவது ஒரு தீவிரமான விண்வெளி தாக்கம் காரணமாக இருக்கும். அப்படியாக நாசாவின் சூரிய அவதானிப்புகளை நிகழ்த்தும் சூரிய இயக்காற்றல் வானாய்வகம் செயல் இழந்தது ஆனால் அதற்கு காரணம் பேரழிவு அல்ல..!

சூரிய இயக்காற்றல் வானாய்வகம் (Solar Dynamics Observatory) என்பது சூரியனை ஆராய்வதற்காக 848 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில், பிப்ரவரி11, 2010-ல் விண்ணுள் செலுத்தப்பட்ட ஆய்வகமாகும். இது அட்லஸ்-5 ஏவுகணை மூலம் கேப் கார்னிவல் நிலைய ஏவுதளத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்ட இந்த ஆய்வகம் விண்மீன்களுடன் வாழுதல் (Living With a Star (LWS)) என்ற திட்டத்தின் ஓர் அங்கமாகும்.

ஆதிக்கம் :

ஆதிக்கம் :

இவ்வாய்வகம் சூரியனில் காந்தப் புலம் உருவாவதை பற்றியும் அதன் அமைப்பு பற்றியும் மேலும் இந்த காந்தப்புலம் எப்படி சூரியகாற்றை பாதிக்கிறது, சூரியனின் காந்தப்புலத்தின் ஆதிக்கம் பூமியையும் பூமியின் அயல்வெளியிலும் எவ்வாறு உள்ளது என்பது பற்றியும் ஆராய்கிறது.

5 ஆண்டு :

5 ஆண்டு :

இதன் ஆயுள் காலம் 5 ஆண்டுகளாகும் மற்ற செயற்கைக்கோள்களை போலவே இது மேலும் 5 ஆண்டுகளுக்கு செயல்பாட்டில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடையூறு :

இடையூறு :

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ஆஃப்லைனில் இருந்த நாசாவின் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம் சூரியனின் நெருக்கமான படங்களை மீண்டும் அனுப்ப தொடங்கியது. அந்த இடையூருக்கு முதல் காரண கோளாறு என்ன..?

 திட்டமிட்ட செயலிழப்பு :

திட்டமிட்ட செயலிழப்பு :

ஆகஸ்ட் 2-ஆம் தேதி அன்று சந்திரன் சூரியன் மற்றும் ஆய்வகத்திற்கு இடையே கடக்கும் என்பதால் எஸ்டிஓ கருவிகள் ஒரு திட்டமிட்ட செயலிழப்பு உள்ளாக்கப்பட்டது.

இடப்பெயர்வு :

இடப்பெயர்வு :

இதுபோன்ற இடப்பெயர்வு மிகவும் பொதுவான மற்றும் கணிக்கக்கூடிய ஒன்றுதான் மற்றும் வழக்கமாக இந்த போக்குவரத்து முடியும் வரையிலாக எஸ்டிஓ திட்டமிட்ட செயல் இழப்புக்கு உள்ளாக்கப்படும், ஆனால் இம்முறை எதோ ஒரு தவறு நிகழ்ந்துள்ளது

அறிவியல் கருவி :

அறிவியல் கருவி :

நாசாவின் எஸ்டிஓ அணியானது எஸ்டிஓ-வின் ஒவ்வொரு அறிவியல் கருவிகளை ஆன்லைனுக்கு கொண்டுவந்தது.

இரண்டு நாட்களுக்குள் :

இரண்டு நாட்களுக்குள் :

ஹீலியோசீஸ்மிக் மற்றும் மேக்னடிக் இமேஜர் (the Helioseismic and Magnetic Imager ) மற்றும் எஸ்ட்ரீம் அல்ட்ராவைலட் வேரியபிலிட்டி சோதனை (Extreme Ultraviolet Variability Experiment) ஆகியவைகள் வெறும் இரண்டு நாட்களுக்குள் ஆன்லைனுக்கு கொண்டுவரப்பட்டது.

செயல்பாடு :

செயல்பாடு :

ஆனால் சூரியனை சுற்றியுள்ள பிளாஸ்மாவை படம் எடுக்கும் அட்மாஸ்ப்பியரிக் இமேஜிங் அசெம்பிளியை (Atmospheric Imaging Assembly) அனைத்து மென்பொருள்களையும் மீண்டும் ரீலோட் செய்த பின்பே ஒரு முழு வாரத்திற்கு பிறகு அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடிந்தது.

 கவனம் :

கவனம் :

இப்போது எஸ்டிஓ மீண்டும் அதன் முழு திறனுடன் மீட்கப்பட்டுவிட்டது ஆனால் அடுத்தமுறை தொடர்ந்து தரவுகாளை, அளவீடுகளை சரிபார்க்காமல் முன்போன்றே எஸ்டிஓ வேலை செய்யும் வண்ணம் நாசா கவனமாக இருக்க வேண்டும்.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

பகல் கனவு காணும் ரஷ்யா, இறங்கி வேலை செய்யும் நாசா..!

அமெரிக்க மாண்டேக் திட்டம், பரிசோதிக்கப்பட்டவரின் 'பதற வைக்கும்' அனுபவம்..!

தமிழ் கிஸ்பாட்  :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA's Solar Observatory Freaked Out But It's Not Because of the Apocalypse. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X