Just In
- 1 day ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 1 day ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
பெங்களூர் நகருக்குள் சிறுத்தை.. சிசிடிவியில் பதிவான பரபர காட்சி! மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வார்னிங்
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 25.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் போராடி தான் வெற்றியைப் பெற முடியும்…
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Movies
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எதிர்பார்க்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர்? நாசா தகவல்.!
நாசா அமைப்பு தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் ஏதிர்பார்க்கப்பட்டதை விட நிலவில் அதிகளவு நீர் இருக்கலாம் என்று நாசா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

எனவே இதன்மூலம் எதிர்கால விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் சந்திர மேற்பரப்பில் நீரை காணலாம் மற்றும் எரிபொருளை கூட கண்டறியலாம் என்று சொல்லப்படுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரனின் மேற்பரப்பு வறண்டதாக நம்பப்பட்டது. ஆனால் தொடர்ச்சியான கண்டுபிடிப்புகள் நிலவின் மேற்பரப்பு நீர் மூலக்கூறுக்கான தடயங்களைக் கொண்டிருப்பதாகக் கண்டறிந்துள்ளது. நேற்று வெளியிடப்பட்ட இரண்டு புதிய ஆய்வுகளின்படி சந்திரனில் முன்பு நினைத்ததை விட அதிகமான நீர் இருக்கக்கூடும் என்று கூறுகின்றன.
சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனுக்கு தீபாவளி சிறப்பு சலுகை.!

மேலும் சந்திர துருவப் பகுதிகளில் நிரந்தரமாக நிழலாடிய குளிர்பள்ளங்களில் பனி சேமிக்கப்படுகிறது என்றும் சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக புதிய ஆய்வின் மூலம் நிலவில் சூரிய ஒளி உள்ள பகுதிகளில் கூட சந்திரன் மூலக்கூறு நீரை வைத்திருக்கிறது என்பதற்கு மேலும் ராசயன ஆதராம் கிடைத்துள்ளது.

இன்ஃப்ராரெட்(சோஃபியா) வான்வழி தொலைநோக்கிக்கான ஸ்ட்ராடோஸ்பெரிக் ஆய்வகத்தின் தரவைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சந்திர மேற்பரப்பை முன்பு பயன்படுத்தியதை விட மிகவும் துல்லியமாக மூன்று மைக்ரானுக்கு பதிலாக ஆறு மைக்ரான் அலைநீளத்தில் ஸ்கேன் செய்தனர்.

பின்பு தொடர் ஆராய்ச்சிகள் மூலம் நீர் எங்கிருந்து வந்திருக்கலாம், அது எவ்வாறு சேமிக்கப்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள உதவும் சில இடங்களில் தண்ணீர் ஏராளமாக இருப்பதைக் கண்டால், அதை மனித ஆய்வுக்கான வளமாகப் பயன்படுத்தலாம். மேலும் இது குடிநீர் சுவாசிக்கக்கூடிய ஆக்ஸிஜன் மற்றும் ராக்கெட் எரிபொருளாக பயன்படுத்தப்படலாம் என்று விஞ்ஞானி ஹொன்னிபால் கூறினார்.

அதேபோல் மற்றொரு ஆய்வு சந்திரனின் துருவப் பகுதிகளை ஆராய்ந்தது. அங்கு சூரிய ஒளி ஒருபோதும் காணாத சந்திர பள்ளங்களில் நீர் பனி சிக்கியிருப்பதாக நம்பப்படுகிறது. கடந்த 2009-ம் ஆண்டில் நாசா சந்திரனின் தெற்கு துருவத்திற்கு அருகிலுள்ள ஆழமான பள்ளத்தில் நீர் படிகங்களைக் கண்டறிந்தது. ஆனால் புதிய ஆய்வில் பில்லியன் கணக்கான மைக்ரோ கிராட்டர்களின் சான்றுகள் கிடைத்தன. அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய அளவிலான நீர் பனியைத் சேகரித்து வைத்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
News Source: nasa.gov
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190