நாசா நம்மை காப்பாற்றும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.!?

|

100 கிலோமீட்டர் இடைவெளியென்பது பூமியின் நிலத்தடியில் வேண்டுமானால் ஒரு பெரிய தொலைவாக இருக்கலாம். ஆனால், விண்வெளியில் அதெல்லாம் ஒரு விடயமே இல்லை. எடுத்துக்காட்டுக்கு நிலவிற்கும் பூமி கிரகத்திற்கும் எவ்வளவு தூரம் இடைவெளி இருக்குமென்று சற்று யூகித்துப்பாருங்களேன்.

பார்க்க அருகாமை விண்வெளி பொருள் போல் தோன்றும் நிலவு, பூமியில் இருந்து 384,400 கிமீ தொலைவில் உள்ளது.

ஆக இதிலிருந்து விண்வெளியில் தூரம் என்பது ஒரு கணக்கே இல்லையென்பதை நாம் உணர முடிகிறது அல்லவா.? சரி இப்போது, வருகிற அக்டோபர் மாதம் பூமிக்கு மிக அருகில், அதாவது 6,880 கிமீ தூரத்தில் ஒரு விண்கல் பூமியை கடந்து செல்ல இருக்கிறது என்று கூறினால் என்ன செய்வீர்கள்.?

நாசா நம்மை காப்பாற்றும் என்று நம்புவது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்.!?

நம்மால் என்ன செய்ய முடியும். கடந்து போனாலும் சரி, பூமி மீது கொடூரமாக மோதினாலும் சரி - வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும். சரி உலகின் அதிநவீன விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் என்ன செய்யுமென்று தெரியுமா.?? நம்பினால் நம்புங்கள் நம்முடன் சேர்ந்து நின்று வேடிக்கை தான் பார்க்கும்.

பெரிய முட்டாள்தனம்

பெரிய முட்டாள்தனம்

பூமியோடு நிகழ்ந்த ஒரு எரிகல் மோதல் நிகழ்வுதான் டைனோசர் இனம் அழிந்ததற்கு ஆதி காரணம். ஆனால், அதெல்லாம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில் நடந்தது, இப்போதெல்லாம் அப்படி நடக்க வாய்ப்பே இல்லை நாம் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறோம் என்று நாம் நம்மை சாமாதானம் செய்துகொண்டால் அதைவிட ஒரு பெரிய முட்டாள்தனம் கிடையாது.

நம்மை காப்பாற்ற முடியாது

நம்மை காப்பாற்ற முடியாது

தொட்டதெற்கெல்லாம் பல மில்லியன் டாலர்கள் செலவிலான விண்கலம், எதற்கெடுத்தாலும் விண்வெளி ஆராய்ச்சி என்று உலகின் மாபெரும் விண்வெளி போட்டியாய் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் நாசா மற்றும் உலகின் பல விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களாலும் கூட நம்மை காப்பாற்ற முடியாது என்பதே நிதர்சனம்.

திகிலூட்டும் தகவல்

திகிலூட்டும் தகவல்

மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல் நிகழ்வானது எங்கு அதிகம் நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு, விண்வெளியை ஆய்வு செய்யும் எந்தவொரு நாட்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்திடமும் இல்லை என்ற திகிலூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

பாதுகாப்பு நிலை

பாதுகாப்பு நிலை

பூமி கிரகத்தின் பாதுகாப்பு நிலைகளானது, நாம் நினைக்கும் அளவிற்கு பாதுகாப்பானது கிடையாது. அது எப்போது வேண்டுமானாலும் தகர்க்கப்படலாம். அதாவது, பூமி கிரகத்தோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள், பூமி கிரகத்திற்கு அருகில் 'எங்கும் நிறைந்திருக்கிறது' அதுமட்டுமின்றி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய அவைகளிடமிருந்து தப்பிக்கும் அளவிற்கு பூமி 'பாதுகாப்பானது' கிடையாது.

கிரக பாதுக்காப்பு விடயங்கள்

கிரக பாதுக்காப்பு விடயங்கள்

குறுங்கோள்களிடம் இருந்து பூமி கிரகத்தை காப்பாற்றும் நோக்கத்தில் உருவாக்க்கப்பட்டது தான் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (Planetary Defense Coordination Office). கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் கீழ் பையர்பால் (Fireball) மற்றும் பொலிட் ரிப்போர்ட்ஸ் சிஸ்டம் (Bolide Reports system) போன்ற அதிநவீன முறைகள் கொண்டு பூமி கிரக பாதுக்காப்பு விடயங்கள் ஆராயப்படுகிறது.

கூடுதல் முயற்சி

கூடுதல் முயற்சி

இருப்பினும் கூட, மிகவும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள் மோதல் நிகழ்வானது எங்கு அதிகம் நிகழும் என்பதை பற்றிய சரியான தெளிவு நாசாவிடம் இல்லை. குறுங்கோள்களின் கவனிக்கத்தக்க முறைகள் பற்றிய தெளிவை பெறுவதில் நாசா மட்டுமின்றி பிற உலகம் முழுவதும் மற்ற விண்வெளி ஆராய்ச்சி மையங்களும் கூடுதல் முயற்சிகளை கையாள வேண்டியிருக்கிறது என்பதே தற்போதைய விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சியின் நிலைப்பாடாகும்.

அழிவை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள்

அழிவை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள்

நாசாவின் மார்ஷல் ஸ்பேஸ் பிளைட் மையத்தில் (Marshall Space Flight Center) உள்ள, எரிக்கற்கள் சுற்றுச்சூழல் அலுவலகத்தை (Meteoroid Environment Office) சேர்ந்த ஆய்வாளர் வில்லியம் கூக் கூற்றின்படி "ஒரு பெரிய அளவிலான அழிவை ஏற்படுத்தக்கூடிய குறுங்கோள், பூமியுடன் மோதல் நிகழ்த்த மூன்றில் ஒரு பங்கு வாய்ப்பு இருக்கிறது" என்று அறியப்படுகிறது.

70 சதவிகிதம் வாய்ப்புள்ளது

70 சதவிகிதம் வாய்ப்புள்ளது

1994 ஆம் ஆண்டில் இருந்து 2013-ஆம் ஆண்டு வரையிலாக நடத்த பொலிட் நிகழ்வுகள், அதாவது பூமியின் வளிமண்டலத்திலேயே எரிகல் சிதைந்து போன நிகழ்வுகளின்படி பார்த்தால் "பூமியில் 70 சதவிகிதம் கடல் இருப்பதால், பூமியோடு மோதும் வாய்ப்பு கொண்ட குறுங்கோள்கள் கடலில் விழ 70 சதவிகிதம் வாய்ப்புள்ளது" என்றும் ஆய்வாளர் வில்லியம் கூக் கூறியுள்ளார்.

மிகச்சரியான எடுத்துக்காட்டு

மிகச்சரியான எடுத்துக்காட்டு

இதன் மூலம் ஒட்டுமொத்த பூமியும், சாத்தியமான எரிகல் அல்லது குறுங்கோள்கள் மோதல்களுக்கான எந்த விதமான பாதுகாப்பும் இன்றி தான் இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டுமென்றும் நம்மையெல்லாம் எச்சரிக்கிறார் வில்லியம் கூக். இதற்கு மிகச்சரியான எடுத்துக்காட்டுதான் செல்யபின்ஸ்க் நிகழ்வு - ரஷ்யாவில் 2013-ஆம் ஆண்டு 15 பிப்ரவரி அன்று நிகழ்த்த எரி நட்சத்திரம் விழுந்த சம்பவமாகும்.

எந்த விதமான அமைப்பும் இதுவரை இல்லை

எந்த விதமான அமைப்பும் இதுவரை இல்லை

50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் செல்யபின்ஸ்க் நிகழ்வு போன்ற விடயங்களை கண்டறிவதற்கும், கண்காணிப்பதற்கும் கூட எந்த விதமான அமைப்பும் இதுவரை இல்லை என்று குற்றம் சாட்டுகிறார் மார்க் போஸ்லோ. மார்க் போஸ்லோ - சான்டியா தேசிய ஆய்வகத்தில் பெளதீக ஆய்வாளர் ஆவார் என்பதும், 'ஆஸ்ட்ராய்ட் டே' (Asteroid Day) நிறுவனர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆஸ்ட்ராய்ட்டு 2012 டிசி4 ராக்

ஆஸ்ட்ராய்ட்டு 2012 டிசி4 ராக்

சரி இந்நிலைப்பாட்டில் வரும் அக்டோபர் மாதம் பூமியின் மிக அருகாமையில் கடக்கும் விண்கல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா.? - ஆம். நாசா ஒரு உடுகோள் பாதுகாப்பு சோதனையை நிகழ்த்தவுள்ளது. ஆஸ்ட்ராய்ட்டு 2012 டிசி4 ராக் என்று கூறப்படும் அந்த உடுகோள் ஆனது முப்பத்து மீட்டர் வரை அகலம் கொண்டுருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஏழு நாட்களுக்கு மட்டுமே

ஏழு நாட்களுக்கு மட்டுமே

பூமியின் மேற்பரப்பில் இருந்து 4,200 மைல் (6,800 கிலோமீட்டர்) தொலைவில் இது கடந்து செல்லும் என்று நாசா கூறுகிறது. இந்த உடுகோள் பற்றிய விரிவான தகவல்கள் ஏதுமில்லை, ஏனெனில் ஹவாயில் உள்ள பான்-ஸ்டார்ராஸ் 1 தொலைநோக்கியால் ஏழு நாட்களுக்கு மட்டுமே இதை கண்டுகொண்டிருக்கிறோம் என்று நாசா கூறியுள்ளது.

பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை

பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை

இதன் மூலம் பெரிய அளவிலான பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை. ஏனெனில், அருகாமை நிகழ்வுதான் என்றாலும் கூட இடைவெளியாய் நிற்கும் தொலைவும், உடுகோளின் அளவும் ரஷ்யாவில் நிகழ்த்த செல்யபின்ஸ்க் மோதல் போன்றதொரு சம்பவத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA's preparing another round asteroid defence tests. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more
X