செவ்வாய் கிரகத்தில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.!

அதற்கிடையில் சில அதிகாரப்பூர்வமான செய்திகளும், அசல் புகைப்படங்களும் வெளியாகும். அப்படியானதொரு புகைப்படம் தான் இது.!

|

செவ்வாய் கிரகத்தில் எலி இருக்குறது என்பது தொடங்கி நடமாடும் ஏலியன் பெண் இருக்கிறது என்பதை வரை பல "டூபாக்கூர் மேட்டர்களை" பார்க்கும் போதெல்லாம், வைகைப்புயல் வடிவேலு சாரின் ஒரு சினிமா வசனம் தான் ஞாபகத்திற்கு வரும் : "பிரேக்கு உன்னுதா இருந்தா.. உன் இஷ்டத்துக்கு அழுத்துவியா.?" என்பது தான் அது.!

செவ்வாயில் திகைப்பூட்டும் உருவம்; நம்பமுடியாத நாசா புகைப்படம்.!

செவ்வாய் கிரகம் தூரமாக இருக்கிறது, நாமெல்லாம் என்ன சொன்னாலும் நம்புவோம் என்கிற நிலைப்பாட்டில் கிளப்பட்ட போலி செய்திகள் மற்றும் புகைப்படங்கள் பல. அதற்கிடையில் சில அதிகாரப்பூர்வமான செய்திகளும், அசல் புகைப்படங்களும் வெளியாகும். அப்படியானதொரு புகைப்படம் தான் இது.!

இது சார்ந்த நாசாவின் விளக்கம் என்ன.?

இது சார்ந்த நாசாவின் விளக்கம் என்ன.?

அது என்ன புகைப்படம்.?அதன் வெளிப்பாடு தான் என்ன.? இது எப்படி சாத்தியமாகி இருக்கும்.? இது சார்ந்த நாசாவின் விளக்கம் என்ன.? என்பதையெல்லாம் ஆராயும் முன்னர், 1980 களில் இருந்து மிகவும் பிரபலமான வீடியோ கேமாக திகழும் "பாக்-மேனை" (PACMAN) ஒருமுறை நினைவு படுத்திக்கொள்ளங்கள்.

உற்றுகூட பார்க்க வேண்டாம்.!

உற்றுகூட பார்க்க வேண்டாம்.!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், அரிசோனா பல்கலைக் கழகத்தின் ஹைரைஸ் (HiRise) குழுவும் சேர்ந்து, செவ்வாய் கிரகத்தில் காணப்பட்ட ஒரு புதிய பள்ளத்தின் படத்தை வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படத்தை உற்றுகூட பார்க்க வேண்டாம். மேலோட்டமாக பார்த்தால் கூட போதும் "பாக்-மேன்" வடிவமானது காட்சிப்படுகிறது.

விண்வெளி பொருளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவு.!

விண்வெளி பொருளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவு.!

கடந்த மார்ச்-நடுப்பகுதியில், நாசாவின் மார்ஸ் ரகணனிஸஸ் ஆர்பிட்டர் (Mars Reconnaissance Orbiter - MRO) மூலம், இந்த இந்த பாக்-மேன் பள்ளம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏதோவொரு விண்வெளி பொருளுடன் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த பள்ளம் உருவாகி இருக்க வேண்டும்.

மணற்மேடு உடனான ஒரு பள்ளம் இருப்பது ஒரு

மணற்மேடு உடனான ஒரு பள்ளம் இருப்பது ஒரு

அசாத்தியமான கண்டுபிடிப்பாகும்.!
ஒரு மோதல் நிகழ்வு சாத்தியமாகாத பட்சத்தில், சதுர வடிவிலான இந்த மணற்மேடு பள்ளம் உருவாகி இருக்க வாய்ப்பில்லை. சிவப்பு கிரகம் என்று அழைக்கப்படும் செவ்வாயில், மணற்குன்றுகள் காணப்படுவதென்பது பொதுவான ஒன்று தான். ஆனால் இந்த பாக்-மேன் பள்ளம் ஒரு அரிய கட்டமைப்பாகும். ஏனெனில், செவ்வாய்யில் மணற்மேடு உடனான ஒரு பள்ளம் இருப்பது ஒரு அசாத்தியமான கண்டுபிடிப்பாகும்.!

Nuclear Weapons : எந்தெந்த நாடுகளிடம் எத்தனை அணுவாயுதங்கள் உள்ளன.? இந்தியாவின் நிலை என்ன.?
அடுத்த சில பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில்.!

அடுத்த சில பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில்.!

இருந்தாலும் கூட, பேக் மேன் பள்ளமானது, காலம் காலமாக அப்படியே இருக்க போவதில்லை. "அடுத்த சில பத்தாயிரக்கணக்கான ஆண்டுகளில், பள்ளத்தின் உள்ளே இருக்கும் மணற்மேடு ஊதி வெளியேற்றப்படும்" என்கிறது நாசாவின் ஹைரைஸ் குழு. அதுவரைக்கும் இந்த பாக்-மேன் பள்ளம் "ஒரு அரிய கட்டமைப்பு" ஆக திகழும்.

Best Mobiles in India

English summary
NASA Finds Pac-Man Shaped Crater On Mars & Scientists Are Pretty Much Excited About It. Read more about this in Tamil GiZBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X