நாசாவின் மார்ஸ் ஹெலிகாப்டரை உருவாக்கிய ஐஐடி மாணவர்!

|

நாசா தனது பர்சீவரென்ஸ் ரோவரை இந்த ஆண்டு இறுதியில் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டு உள்ளது. இந்த ரோவரில் பூமியைத் தவிர வேறு ஒரு கிரகத்தில் பறக்கும் முதல் விமானம் என்ற பெருமையை பெறவுள்ள ஹெலிகாப்டர்-ம் பயணிக்கவுள்ளது‌‌. இந்த ஹெலிகாப்டர், பாப் பலராம் என்ற முன்னாள் ஐஐடி மாணவரின் சிந்தனையில் உதித்த படைப்பாகும்.

கென்னடி விண்வெளி மையத்தில் கடைசி சுற்று சோதனைக்கு

தற்போது கென்னடி விண்வெளி மையத்தில் கடைசி சுற்று சோதனைக்கு வெற்றிகரமாக உட்பட்டுள்ள நிலையில், இந்த ஹெலிகாப்டர் அடுத்த செவ்வாய் பயணத்தில் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. இம்முயற்சி வெற்றிகரமாக இருந்தால், இது மனிதர்களுக்கு ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கும். இது பூமியை விட மிகவும் மாறுபட்ட வளிமண்டல நிலைமைகளைக் கொண்ட பிற கிரகங்களின் வானத்தை வெற்றிகொண்டதாக இருக்கும் .

 பணி எளிதான சவால்

நம் கையில் இருக்கும் இந்த பணி எளிதான சவால் அல்ல என்பது புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால் சாத்தியமற்றதாகத் தோன்றிய இயந்திரத்திற்கு பின்னால் உள்ள கதை தரும் உத்வேகத்திற்கு இது குறைவானதல்ல. அதைப் பற்றி தெரிந்துகொள்ள, பால்ராம் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக இம்முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பதை முதலில் நினைவில் கொள்ளுங்கள்.

பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்! விலை இவ்வளவு தான்!பாப்-அப் கேமராவுடன் அசத்தலான ஹூவாய் ஸ்மார்ட் டிவி எக்ஸ்65 அறிமுகம்! விலை இவ்வளவு தான்!

பால்ராம்

ஒரு தொழில்முறை மாநாட்டின் போது இத்தகைய ஹெலிகாப்டர் பற்றிய யோசனையை பால்ராம் முதலில் கண்டார். மாநாட்டின் போது ​​ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த ஸ்டான்போர்ட் பேராசிரியர் இலன் க்ரூ, "மெசிகாப்டர்" என்று அழைக்கப்படும் பூமி பயன்பாடுகளுக்கான மினியேச்சர் வான்வழி வாகனம் பற்றி பேசினார். அப்போதுதான் செவ்வாய் கிரகம் போன்ற ஒரு இடத்தில் இதைப் பயன்படுத்த நினைத்தார் பால்ராம் .

 தொடர்ந்து, நாசா ஆராய்ச்சி

இந்த யோசனையைத் தொடர்ந்து, நாசா ஆராய்ச்சி அறிவிப்பு சமர்ப்பிப்பிற்காக ஸ்டான்ஃபோர்டுடன் ஒரு கூட்டு திட்டத்தை பால்ராம் கொண்டு வந்தார். கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கில் உள்ள ஏரோவிரோன்மென்ட் என்று அழைக்கப்படும் ஒரு சிறிய நிறுவனத்தையும் அவர் இதில் சேர்த்துக் கொண்டார்.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு

அந்த சமயத்தில், இந்த யோசனை நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தில் (ஜேபிஎல்) செவ்வாய் கிரக நிலைமைகளின் கீழ் பிளேட்-ரோட்டார் சோதனை மட்டுமே நடைபெற்றது. அடுத்த 15 ஆண்டுகளுக்கு இது குறித்து மற்ற முன்னெடுப்புகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

ப் பிறகு, ஜேபிஎல்லின் முன்னாள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேபிஎல்லின் முன்னாள் இயக்குனர் சார்லஸ் எலச்சி செவ்வாய் கிரகத்தில் ட்ரோனைப் பயன்படுத்துவதற்கான யோசனையில் தடுமாறினார். பின்னர் அவர் பால்ராம்-க்கு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இந்த ஹெலிகாப்டருக்கான ஒரு கருத்தாக்கத்தை உருவாக்குவது நாசாவின் 2020 செவ்வாய் கிரக பயணத்திற்கான முக்கியப்புள்ளியாக மாறியது. அந்த சமயத்தில் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இடர் குறைப்புக்காக மட்டுமே இந்த கருத்து இருந்தது என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஹெலிகாப்ட

மிமி ஆங் செவ்வாய் கிரக ஹெலிகாப்டர் திட்டத்தின் மேலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், அபாயக் குறைப்பில் அவரது குழுவினரை பணியாற்றச்செய்தார். இம்முயற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தவுடன், நாசா இந்த ஹெலிகாப்டருக்கு தொழில்நுட்ப முன்னோடி என்று நிதியுதவியளித்தது.

ஹெலிகாப்டர் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நிலையில், அக்குழுவில் பால்ராம் நிபுணராக

இந்த நிதியுதவிக்குப் பிறகு, ஹெலிகாப்டர் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்ட நிலையில், அக்குழுவில் பால்ராம் நிபுணராக பணியாற்றினார். சமீபத்திய அறிக்கையில் ஆங் குறிப்பிட்டுள்ளபடி, "பாப் எங்கள் செவ்வாய் ஹெலிகாப்டரைக் கண்டுபிடித்தவர். அவர் வடிவமைப்பை புதுமைப்படுத்தினார் மற்றும் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் சோதனை ஆகியவற்றின் அனைத்து கட்டங்களிலும் தலைமை பொறியாளராக தனது யோசனையை வெற்றிகரமாக செயல்படித்தியுள்ளார். " என பாராட்டியது குறிப்பிடத்தக்கது ‌.


Best Mobiles in India

English summary
NASA'S Mars Helicopter: IIT Guy Behind The Aircraft Designed To Fly On Red Planet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X