ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் இப்படியொரு பிரச்சனையா? அதிர்ச்சி ரிப்போர்ட்.!

|

அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விண்ணில் ஏவிய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் சிறிய விண்கல் மோதியதாக ஏற்கனவே தகவல் வெளிவந்த நிலையில், தற்போது விண்கல் மோதலினால் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய முடியாது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

நாசா நிறுவனம்

நாசா நிறுவனம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 25-ம் தேதி விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா நிறுவனம் கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏரியன் 5 ராக்கெட் மூலம் அதிநவீன ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை விண்வெளிக்கு அனுப்பியது.

Vodafone idea பயனர்களே: இனி எல்லாருக்கும் Disney+ Hotstar இலவசம்- ஆக்டிவேட் செய்வது எப்படி?Vodafone idea பயனர்களே: இனி எல்லாருக்கும் Disney+ Hotstar இலவசம்- ஆக்டிவேட் செய்வது எப்படி?

 ஹப்பிள் தொலைநோக்கி

ஹப்பிள் தொலைநோக்கி

அதேபோல் நாசா உருவாக்கிய ஹப்பிள் தொலைநோக்கியை விட 100 மடங்கு சக்தி மற்றும் திறன் கொண்டது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. குறிப்பாக கடந்த 1990-ல் நாசா அனுப்பிய ஹப்பிள் தொலைநோக்கியில் பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை நாசா உருவாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!Pluto இப்படி தான் இருக்குமா? வானவில் வண்ணத்தில் நூறு மடங்கு அழகு- Nasaக்கு குவியும் பாராட்டு!

மிகப்பெரிய பட்ஜெட்

மிகப்பெரிய பட்ஜெட்

குறிப்பாக இந்தியா மதிப்பில் 75 ஆயிரம் கோடி என்ற மிகப்பெரிய பட்ஜெட்டில் பல ஆண்டுகளாக உழைத்து சக்தி வாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

அதேபோல் பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நாட்சத்திரங்களை குறித்து ஆய்வு செய்வதற்காக தான் இந்த அதிநவீன ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்.

அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?அம்மாடியோவ்! என்ன டிசைன்..என்ன சக்தி! புதிய Nubia Z40S Pro அறிமுகம்! என்ன ஸ்பெஷல் தெரியுமா?

நட்சத்திரங்களை குறித்து ஆராய போகிறது

நட்சத்திரங்களை குறித்து ஆராய போகிறது

அதாவது நட்சத்திரங்கள் இறந்தாலும் பல ஒளி ஆண்டுகள் தொலைவில் இருப்பதால் அதன் ஒளி நமக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். இந்த நட்சத்திரங்கள் இறந்தாலும் அதன் ஒளியை வைத்து அதனை ஆராய முடியும். குறிப்பாக இப்படி தான் பல மில்லியன் ஆண்டுகளுக்கு
முன்பு இறந்த நட்சத்திரங்களை குறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஆராய போகிறது.

நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?நத்திங் போன் தெரியும் இது என்னப்பா 'சம்திங்'.. 'Something'.! உங்க போனை Nothing டிசைனுக்கு உடனே மாற்றலாமா?

சமீபத்தல் வெளிவந்த புகைப்படம்

சமீபத்தல் வெளிவந்த புகைப்படம்

6.2 டன் கொண்ட இந்த தொலைநோக்கி -230 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் கூட இயங்கக்கூடியது. மேலும் சமீபத்தில் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட SMACS 0723 என்ற நட்சத்திர கூட்டத்தின் (Cluster) படத்தினை நாசா அமைப்பு வெளியிட்டது.

அதாவது இந்த நட்சத்திர கூட்டம் பூமியில் இருந்து 4.8 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதுதவிர 13 பில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களை எதிர்காலத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படம் எடுத்து அனுப்ப இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!பட்ஜெட்டில் பெஸ்டா வாங்க கிடைக்கும் Oppo போன்கள்.. அமேசான் பிரைம் டே சேல்ஸ் டிப்ஸ் கூட இருக்கு!

விண்கல்

விண்கல்

இந்நிலையில் கடந்த மே மாதம் இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் மீது 6 சிறிய விண்கல் மோதின. அதாவது திறந்த வடிவமுடைய இந்த தொலைநோக்கியில் பொருத்தப்பட்டிருக்கும் பெரிலியம்-தங்க தகடுகளில் சி3 என்று அழைக்கப்படும் ஒரு தகட்டினை தான் விண்கல்
தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!படையல் வைத்து விருந்து போடும் Samsung: ஆகஸ்ட் 10 வரை பசியோடு காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

சமீபத்தில் வெளியான தகவல்

சமீபத்தில் வெளியான தகவல்

மேலும் சமீபத்தில் வெளியான ஆராய்ச்சிக் கட்டுரையில், தாங்கள் நினைத்ததை விட விண்கல்லினால் தாக்குதல் பெரிதாக இருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. பின்பு இந்த விண்கல் தாக்குதலினால் ஏற்பட்ட சேதத்தினை சரி செய்ய முடியாது என்றும், இது மிகச்சிறிய அளவில் அதன் திறனை பாதிக்கலாம் என்றாலும் அதனை அளவிட முடியாது எனவும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் விண்கல் மோதியது உலக அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..வருடத்திற்கு 1 முறை ரீசார்ஜ்..ஓஹோனு வாழ்க்கை! அட்டகாச நன்மையுடன் சூப்பர் Jio திட்டம் இது தான்..

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

சமீபத்தில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க், நாசாவின் முதல் வண்ணப் புகைப்படத்தை பங்கமாய் கலாய்த்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!மிகவும் எதிர்பார்த்த Oppo Reno 8, Reno 8 Pro அறிமுகம்: தரமான செய்கை, தம்பி நத்திங் கொஞ்சம் ஓரம் போங்க!

மார்பில் கல்

மார்பில் கல்

அதாவது எலான் மஸ்க் ட்விட்டர் பதிவில் இருக்கும் புகைப்படத்தில், சமையல் அறையில் இருக்கும் மார்பில் கல்லை ஜூம் செய்து பார்த்தால் நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படம் போல் இருப்பதாகவும், சிறப்பான முயற்சி நாசா எனவும் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக நாசாவை கலாய்த்து பதிவிட்டுள்ள எலான் மஸ்கின் டிவீட்இணையத்தில் வைரலாக பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போதும் கூட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
NASA's James Webb Space Telescope permanently damaged by asteroid impact: report: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X