செவ்வாய் கிரகத்தில் இப்படியொரு பிரச்னையா? இன்சைட் ரோவர் அனுப்பிய முக்கியத் தகவல்.!

|

உலக நாடுகள் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகம் குறித்தும், உயிரினங்கள் வாழ முடியுமா என்றும், அங்குள்ள சூழ்நிலைகள் குறித்தும் ஆராய்ச்சி செய்து வருகின்றன. அதிலும் குறிப்பாக செவ்வாய் கிரகத்துக்கு முதல் முயற்சியிலேயே வெற்றிகரமாக செயற்கைகோளை இஸ்ரோவும் செலுத்தி சாதனை படைத்துள்ளது.

நாசா செவ்வாய் கிரகம் குறத்து ஆராய்ச்சி செய்து வருகின்றது.

மேலும் 1976ம் ஆண்டு முதல் அமெரிக்கா விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்து வருகின்றது. குறிப்பாக புதிய தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது நாசா அமைப்பு

 நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய இன்சைட் என்ற ஆய்வூர்தி நடத்திய சோதனையில் அங்கு நில அதிர்வு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!6 ஆண்டு..130,000 மைல் பயணம்.. பூமிக்கு வந்த ரியுகு சிறுகோளின் ஒரு பகுதி.! பரபரப்பான ஆராய்ச்சி தகவல்கள்.!

இன்சைட் ரோவர்

இன்சைட் ரோவர்

அதாவது கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் நாசாவின் கிளை நிறுவனமான ஜெட் புரோஃபல்யூஷன் லேபரட்டரி, இன்சைட் ரோவர் எனப்படும் ஆய்வூர்தியை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது.

 தகவல்களை திரட்டி அவ்வப்

குறிப்பாக இரண்டு ஆண்டுகளுக்கு மேல் இந்த ஆய்வூர்தி செவ்வாய் கிரகத்தின் மீது அமர்ந்துள்ளது. பின்பு அங்கு இருக்கும் முக்கியமான தகவல்களை திரட்டி அவ்வப்போது நாசா விஞ்ஞானிகளுக்கு அனுப்பிவரும் இந்த சிறிய ரக ஆய்வூர்தி சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் நில அதிர்வு ஏற்படுவதை கண்டுபிடித்துள்ளது.

வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!வேட்டையாடுபவர்களை மிரளவைக்கும் யுக்தி: சூறாவளி போல் சுற்றி சூழ்ச்சி செய்யும் கலைமான்கள்- ட்ரோன் வீடியோ வைரல்!

சொல்ல வேண்டும் என்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிரகத்தின் அடி ஆழத்தில் உள்ள நிலத் தகடுகளின் நகர்வால் நில அதிர்வு ஏற்படும். பின்பு இது அனைத்து கிரகங்களுக்கும் பொருந்தும் என்றே கூறலாம். இப்போது வெளிவந்த தகவலின்படி, பூமியில் ஏற்படும் நில அதிர்வுகள் போன்றே செவ்வாய் கிரகத்திலும் 3.3 மற்றும் 5 ரிக்டர் அளவுகோலில் நில அதிர்வு பதிவாகியுள்ளது.

போர்க்களங்களில் படையெடுக்கப் போகும் கில்லர் ரோபோக்கள்: அச்சுறுத்துகிறதா தொழில்நுட்ப வளர்ச்சி!போர்க்களங்களில் படையெடுக்கப் போகும் கில்லர் ரோபோக்கள்: அச்சுறுத்துகிறதா தொழில்நுட்ப வளர்ச்சி!

சர்பேரோஷ் ஃபோசா

சர்பேரோஷ் ஃபோசா

அதுவும் செவ்வாய் கிரகத்தின் சர்பேரோஷ் ஃபோசா என்கிற பகுதியல் தான் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இதுகுறித்து மேலும் ஆராய்ச்சியை துவங்க நாசா விஞ்ஞானிகள் முடிவெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிய ஹெலிகாப்டர்

சிறிய ஹெலிகாப்டர்

அதேபோல் பெர்சவரன்ஸ் ரோவர் ஆனது கடந்த மாதம் வெற்றிகரமாக செவ்வாயில் தரையிறங்கியது. குறிப்பாக செவ்வாய் கிரகத்தில் தரைப்பகுதியில் ஆய்வு செய்து வரும் அந்த பெர்சவரன்ஸ் ரோவர் அங்கு காணப்படும் மலைகள், குன்றுகள், பாறைகள் என அனைத்தையும் மிகவும் தெளிவாக படம்பிடித்து காட்டியது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலத்துடன் மிகச்சிறிய ரக ஹெலிகாப்டரும் செவ்வாய் கிரகத்தில் தரை இறக்கப்பட்டுள்ளது. மேலும் இன்ஜெனூட்டி என்று அழைகப்படும் இந்த அதிநவீன சிறிய ஹெலிகாப்டர் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பு ஆய்வுக்கு பயன்படுத்தப்படும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
NASA's Insight rover detects Sizable quakes on Mars: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X