NASA வெளியிட்ட டால் எரிமலையின் நம்பமுடியாத புகைபடங்கள்!தீவே நிலவின் மேற்பரப்பு போல் மாறியது எப்படி?

|

இயற்கை தனது சீற்றத்தை எப்போது எப்படிக் காட்டும் என்பது யாருக்குமே தெரியாது? ஆனால், நிச்சயம் தூங்கிக்கொண்டிருக்கும் மிருகம் ஒருநாள் விழித்துவிடும் என்ற வாக்கியத்தைப் போல, இயற்கை தனது சீற்றத்தை இந்த 2020ம் ஆண்டு ஆஸ்திரேலியா காட்டு தீ, கொரோனா எனப் பல ரூபங்களில் காட்டிவருகிறது. இந்த வரிசையில் டால் எரிமலை சீற்றரமும் ஒன்று தான். இங்கு என்ன நடந்தது என்று தெரியுமா?

நாசா வெளியிட்ட டால் எரிமலை பகுதி புகைப்படங்கள்

நாசா வெளியிட்ட டால் எரிமலை பகுதி புகைப்படங்கள்

அப்படி இருக்கையில் இயற்கை செய்த ஒரு மிகப் பெரிய மாற்றம் தான் டால் எரிமலை. நாசாவின் லேண்ட்சாட் 8 எடுத்தடால் எரிமலை பகுதியின் சமீபத்திய சேட்டிலைட் புகைப்படத்தைப் நாசா வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தைபார்த்தால் இந்த சீற்றம் ஒரு முழு பகுதியையே எப்படி நாசம் செய்து மாற்றியுள்ளது என்றுஉங்களுக்கே நன்றாக புரிந்துவிடும்.

43 வருடங்களாக உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலை

43 வருடங்களாக உறங்கிக்கொண்டிருக்கும் எரிமலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள டால் என்னும் எரிமலை சுமார் 43 வருடங்களாக உறங்கிக்கொண்டிருந்தது.
கடந்த ஜனவரி 12ம் தேதி அன்று கிரேட்டர் ஏரி அருகில் உள்ள இந்த டால் எரிமலை 43 வருடங்களுக்குப் பிறகு விழித்துக்கொண்டது. விழுதுகொண்ட டால் எரிமலை வாயுக்கள், சாம்பல் மற்றும் தீக்குழம்புகளை வெளியிட்டு அந்த பகுதி மொத்தத்தையும் சாம்பலினால் சூழ்ந்துகொண்டது.

Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!Google ceo சுந்தர் பிச்சை மன்னிப்பு கேட்டார்., மரியாதை தெரிஞ்ச மனிதர்: அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வெடித்து சிதறிய டால் எரிமலை

வெடித்து சிதறிய டால் எரிமலை

எரிமலை வெடிக்கத் துவங்கி சாம்பலாக்கலைக் கக்கத் துவங்கிய சிறிது நேரத்தில் சாம்பல் புகையினால் ஒட்டுமொத்த தீவையும் மறைத்துவிட்டது. இந்த எரிமலை வெடிப்பின் போது எரிமலை புகைக்கு நடுவில் ஏற்பட்ட மின்னலை பார்த்தால் நிச்சயம் உங்கள் அனைவருக்கும் மார்வல் தார் தான் நினைவிற்கு வந்திருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு அதன் தோற்றம் பிரமிப்பை ஏற்படுத்தியது என்று அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.

சாம்பல் நிறத்தில் மாறிய தீவு

சாம்பல் நிறத்தில் மாறிய தீவு

பல வருடங்களாக உறங்கிக்கொண்டிருந்த எரிமலை எழுந்ததினால் ஈரமான மற்றும் காய்ந்த சாம்பல்கள் அந்த தீவு முழுவதுமாக படர்ந்து கிடைக்கிறது. இதனால் அந்த தீவின் ஒட்டுமொத்த இடத்திலிருந்த செடி கொடிகள் அனைத்தும் அழிந்து, அந்த இடமே நிலவின் மேற்பரப்பு போலச் சாம்பல் நிறத்தில் மாறியுள்ளது. இந்த சம்பவம் நடந்து முடிந்து இத்துடன் இரண்டு மாதங்கள் ஆன பிறகும் இன்னும் அதே நிலை தான் அங்கு நீடிக்கிறது.

Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?

நாசாவின் Landsat 8 ஆப்பரேஷனல் லேன்டு இமேஜர் எடுத்த புகைப்படம்

நாசாவின் Landsat 8 ஆப்பரேஷனல் லேன்டு இமேஜர் எடுத்த புகைப்படம்

நாசாவின் Landsat 8 ஆப்பரேஷனல் லேன்டு இமேஜர் (Operational Land Imager- OLI) என்ற சேட்டிலைட் டால் எரிமலையில் ஏற்பட்ட இந்த சம்பவத்தைப் படம் பிடித்து வைத்துள்ளது. அதாவது, டிசம்பர் 6ம் தேதி இந்த பகுதியை லேண்ட்சாட் 8 கடந்தபோது டால் எரிமலை தீவை படம்பிடித்துள்ளது. அதேபோல் மார்ச் 11ம் தேதி டால் எரிமலை பகுதியை மீண்டும் கடந்த போது, எரிமலை வெடித்த பின்னும் இந்த சேட்டிலைட் மற்றொரு புகைப்படத்தையும் படம்பிடித்துள்ளது.

எரிமலையின் எழுச்சிக்கு பின் தீவு எப்படியானது தெரியுமா?

எரிமலையின் எழுச்சிக்கு பின் தீவு எப்படியானது தெரியுமா?

டால் எரிமலை தீவின் இந்த இரண்டு படங்களையும் நாசா தற்பொழுது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில் எரிமலையின் எழுச்சி எப்படி அந்த தீவை, தீவில் வசித்த மனிதர்களை, விலங்குகளை மற்றும் தாவரங்களைப் பாதித்துள்ளது என்பது நமக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!

எரிமலை சாம்பல் சாதரண சாம்பல் இல்லை!

எரிமலை சாம்பல் சாதரண சாம்பல் இல்லை!

இந்த எரிமலை சாம்பல்கள் மரத்தை எரிப்பதினால் கிடைக்கும் சாம்பலைப் போல கிடையாது, இவை தாவரகங்ளை அழிக்கக் கூடியது என்று வால்காநோலாஜிஸ்ட் கூறியுள்ளனர். எரிமலை சீற்றத்தினால் அனைத்து இடங்களிலும் சாம்பல் படர்ந்துள்ளது. பார்ப்பதற்கே சற்று சோகமாக தான் இருக்கிறது.

அடுத்த மில்லியன் வருடங்களுக்கு இப்படி தான் இருக்குமா?

அடுத்த மில்லியன் வருடங்களுக்கு இப்படி தான் இருக்குமா?

டெனிசன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த எரிக் லெமெட்டி என்ற வால்காநோலாஜிஸ்ட் கூறுகையில்,"அங்கு இருந்த சாம்பல்கள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. ஆனால் பாறைகளின் மேல் இருக்கும் அதன் படிவம் மில்லியன் வருடங்களுக்கு அப்படியே தான் இருக்கும் என்றும், அங்கு விழப்பட்ட பெரும்பாலான சாம்பல்கள் ஏரி மற்றும் குளங்களில் கலக்கத் தொடங்கி விட்டது."என்று அவர் கூறியுள்ளார்.

Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!Whatsapp டெலீட் மெசேஜ்களை எப்படி மீண்டும் படிப்பது? ஆனால் ரிஸ்க் உங்களுடையது!

நிலவின் மேற்பரப்பு போல் மரியா தீவு

நிலவின் மேற்பரப்பு போல் மரியா தீவு

சாதாரணமாகவே எரிமலை சாம்பல்களை அவ்வளவு எளிதில் அப்புறப்படுத்த முடியாது. அதிலும் டால் எரிமலை எழுச்சிக்குப் பின் ஈரப்பதமான நாட்கள் நிலவியதால், சாம்பல்கள் ஈரமாக மாறி சிமெண்ட் களிமண் படிவம் போல மாறி அந்த பகுதியை மொத்தமாக நாசம் செய்துள்ளது. இந்த எரிமலை சாம்பல்களில் சிறு சிறு கற்களும் கண்ணாடி துண்டுகளும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

40,000க்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

40,000க்கும் அதிகமான மக்கள் பாதிப்பு

பெரிய கட்டிகளாக விழும் எரிமலை சாம்பல் தாவரங்களை அடியோடு அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் அப்பகுதியில் இருந்த சுமார் 11 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான காபி, சோளம், வாழைப்பழம், அரிசி போன்ற விவசாய நிலங்கள் மற்றும் தாவரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் 40,000க்கும் அதிகமான மக்களின் குடியிருப்பும் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

ஆயிரக்கணக்கான வளர்ப்பு மீன்கள் பாதிப்பு

ஆயிரக்கணக்கான வளர்ப்பு மீன்கள் பாதிப்பு

இத்துடன் சேர்த்து அந்த பகுதியில் நடந்து வந்த மீன் வளர்ப்பு தொழிலும் பாதிப்படைந்துள்ளது. எரிமலை சாம்பல்கள் ஏரியில் கலந்ததினால் ஆயிரக்கணக்கான வளர்ப்பு மீன்களும் அடியோடு அழிந்துவிட்டது என்று அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.

கால்நடைகளும் செல்லப்பிராணிகளும் தனிமையில் தவிக்கிறது

கால்நடைகளும் செல்லப்பிராணிகளும் தனிமையில் தவிக்கிறது

எரிமலை சீற்றத்தின் போது மக்கள் அவசரமாக இந்த பகுதியைவிட்டு வெளியேற்றப்பட்டதினால் பலருக்கும்இவர்களோடு சேர்ந்து கால்நடை மற்றும் செல்லப்பிராணிகளை அழைத்து செல்ல முடியாமல் போனது, இவர்களின் கால்நடைகள் மற்றும் செல்லப்பிராணிகள் அனைத்தும் தனிமையில் தவித்துபாதிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஏற்பட்ட இந்த பாதிப்புகள் அனைத்தும் நிரந்தரம் அல்ல, காலப் போக்கில் மாறிவிடும் என்று அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.

Source: dailymail.co.uk

Best Mobiles in India

English summary
NASA's Incredible Image Shows Taal Volcano Eruption Transformed Tropical Terrain Into Moon's Surface : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X