மிகவும் சிக்கலான சூரிய வளிமண்டலம்! காட்டிக்கொடுத்த உயர்தர புகைப்படம்.!

|

புதிதாக வெளியிடப்பட்ட சூரியனின் புகைப்படங்கள் இதுவரை எடுக்கப்பட்ட நமது நட்சத்திரங்களின் புகைப்படங்களிலேயே மிக உயர்ந்த தெளிவுத்திறன் கொண்ட படம் ஆகும். சூரியனின் வளிமண்டலம் நாம் முன்னர் நினைத்தை விட மிகவும் சிக்கலானது என்பதை இப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

சென்ட்ரல் லங்காஷயர் ப

சென்ட்ரல் லங்காஷயர் பல்கலைக்கழகம் மற்றும் நாசாவின் மார்ஷல் விண்வெளி விமான மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள், விண்வெளி அடிப்படையிலான நாசா உயர்- தெளிவுதிறன் கொண்ட கொரோனல் இமேஜர் தொலைநோக்கி மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்தனர்.

காலியாக இருப்பதாக கருதப்படும் சூரிய

இருண்டதாக அல்லது பெரும்பாலும் காலியாக இருப்பதாக கருதப்படும் சூரிய வளிமண்டலத்தின் பகுதிகள், 311 மைல் அகலமுள்ள சூடான மின்சக்தியுள்ள வாயுக்களின் இழைகளால் நிரப்பப்பட்டுள்ளன என்பதை படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.அந்த இழைகளில் ஒவ்வொன்றும் 1.8 மில்லியன் டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும் என்றும், அவை லண்டனுக்கும் பெல்ஃபாஸ்டுக்கும் இடையிலான தூரத்தை விட நீளமானவை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி?கம்ப்யூட்டரில் ஏற்படும் ஃபைல் காணாமல் போகும் பிரச்சனையை சரி செய்வது எப்படி?

நாசாவின் ஹை-சி தொலைநோக்கி மூலம் சூரியனின் வளிமண்டலத்தில் 43 மை

நாசாவின் ஹை-சி தொலைநோக்கி மூலம் சூரியனின் வளிமண்டலத்தில் 43 மைல் அளவுள்ள மிகச்சிறிய கட்டமைப்புகள் அல்லது நட்சத்திரத்தின் மொத்த அளவுகளில் 0.01 சதவீதம் மட்டுமே உள்ள கட்டமைப்புகளை கூட புகைப்படம் எடுக்கமுடியும்.

' கூட நம்பமுடியாத

இதனால் 'இருண்ட பகுதிகளில்' கூட நம்பமுடியாத அளவிற்கு காந்த அலைகளை புகைப்படம் எடுக்க முடிந்தது. மேலும் அவை மிகவும் சூடான, மில்லியன் டிகிரி பிளாஸ்மாவால் ஆனவை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ழுவின் கூற்றுப்படி,

லங்காஷயர் ஆராய்ச்சி குழுவின் கூற்றுப்படி, இந்த இழைகள் எவ்வாறு உருவாகின என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் இப்போது இது வானியலாளர்களின் முக்கிய ஆய்வுப் புள்ளியாக மாறியுள்ளது.

தொலைநோக்கி

புகைப்டங்களை கைப்பற்றிய தொலைநோக்கி ஹாய்-சி, துணை சுற்றுப்பாதை ராக்கெட் விமானத்தின் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் ஒரு தனித்துவமான வானியல் தொலைநோக்கி ஆகும்.

ஒவ்வொரு நொடியும்

எங்கு செலுத்தினால் ஒவ்வொரு நொடியும் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு பூமிக்குத் திரும்புவதற்கு முன்பு நட்சத்திரத்தின் படம் எடுக்க முடியுமோ அங்கு இந்த தொலைநோக்கி விண்வெளியின் விளிம்பில் ஏவப்படுகிறது.

கண்டுபிடிப்பு மற்றும் தொலைநோக்கி

இந்த கண்டுபிடிப்பு மற்றும் தொலைநோக்கி ஆகியவற்றின் பின்னால் உள்ள சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு இப்போது மீண்டும் ஹை-சி ராக்கெட் பயணத்தை தொடங்குவதற்கான செயல்திட்டங்களில் ஈடுபட்டுள்ளது.


அடுத்த முறை இதன் ஆய்வுமுடிவுகளை, இரண்டு சூரியனைக் கண்காணிக்கும் நாசாவின் பார்க்கர் சூரிய ஆய்வு மற்றும் ஈஎஸ்ஏவின் சூரிய ஆர்பிட்டர் விண்கலங்கள் சேகரிக்கும் மேலதிக தரவுகளுடன் ஒப்பிடலாம்.

நாசா எம்.எஸ்.எஃப்.சியின் ஹை-

நாசா எம்.எஸ்.எஃப்.சியின் ஹை-சி முதன்மை ஆய்வாளர் டாக்டர் ஆமி வைன்பர்கர் கூறிகையில் 'இந்த புதிய ஹை-சி புகைப்படங்கள் சூரியனின் வளிமண்டலத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க தகவல்களை நமக்குத் தருகின்றன.ப்ரோப் மற்றும் சோலோ போன்ற தொடர்ச்சியான பயணங்களுடன், எதிர்காலத்தில் விண்வெளி அடிப்படையிலான கருவிகளின் உதவியுடன், சூரியனின் மாறும் வெளிப்புற அடுக்கை பற்றிய முற்றிலும் புதிய பார்வையை வெளிப்படுத்தும்.' என்கிறார்

Best Mobiles in India

English summary
NASA's Highest Ever Resolution Image Of The Sun Reveals Complex Atmosphere: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X